10TH TAMIL விருந்து போற்றுதும்
10TH TAMIL விருந்து போற்றுதும்
- தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.
- உறவினர் வேறு, விருந்தினர் வேறு.
- முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
- ‘விருந்தே புதுமை’ என்று கூறியவர் = தொல்காப்பியர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருக்குறளில் விருந்தோம்பல்
- விருந்தோம்பல் பற்றிய அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் = இல்லறவியல்.
- இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார் திருவள்ளுவர்.
- முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
- இல்லறத்தின் கடமை = விருந்தினரை போற்றுதல்.
சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்
“………………………………….தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – சிலப்பதிகாரம், 16:72,73 |
- இவ்வாறு கண்ணகி கூறுவதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அமைத்துள்ளார்.
- கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.
கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” – கம்பராமாயணம், 1:2:36 |
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் கூறுகிறார்.
கலிங்கத்துபரணியில் விருந்தோம்பல்
- கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – கலிங்கத்துப்பரணி, 477 |
விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
- தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை = தனித்து உண்ணாமை.
- அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
- புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அவரின் பாடல் மூலம் இதனை உணரலாம்.
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே……..” – புறநானூறு,182 |
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்” என்ற பாடலை பாடியவர் = கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்” என்ற பாடல் அடி இடம்பெற்ற நூல் = புறநானூறு.
அல்லில் ஆயினும்
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” – நற்றிணை |
- விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்பதனை நற்றிணை பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
விருந்தினரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்புதல்
- பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர்.
“காலின் ஏழடிப் பின் சென்று’ – பொருநராற்றுப்படை, 166 |
- வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர் என்ற தகவலை பொருநராற்றுப்படை பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
ஏழ்மை நிலையிலும் விருந்தளித்தல்
- தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பதனை புறநானூற்று பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள் – புறநானூறு |
பொருளினை பணயம் வைத்து விருந்தளித்தல்
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்…. – புறநானூறு |
- இப்புறநானூற்று பாடலில் நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த தன் பழையவாளைப் பணையம் வைத்தான் தலைவன்
- இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்பதனை எடுத்துக் காட்டுகிறது.
விதைத்த நெல்லை அரித்து விருந்து வைத்தல்
- இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை
- எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
நிலத்திற்கேற்ற விருந்து
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்பதனை சிறுபாணாற்றுப்படை நூலில் பதிவு செய்துள்ளனர்.
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
- இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, குறுந்தொகை பாடல் அடிகள் விளக்குகிறது.
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ – குறுந்தொகை |
ஔவையாரின் கொன்றை வேந்தன்
- “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.
- மேலும் அவர் பாடிய தனிப்பாடல் ஒன்றின் மூலம் வள்ளள்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறிந்துக் கொள்ளலாம்.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து) எல்லா உலகும் பெறும்” – ஔவையார் |
வாழை இலையில் விருந்து
- தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
- தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
- உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்.
- ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம்.
- இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
- அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.
- தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர்.
- அன்னை மொழியே
- 10TH TAMIL விருந்து போற்றுதும்
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- 10TH TAMIL விருந்து போற்றுதும்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- 10TH TAMIL விருந்து போற்றுதும்
- கேட்கிறதா என் குரல்