10TH TAMIL காசிக்காண்டம்

10TH TAMIL காசிக்காண்டம்

10TH TAMIL காசிக்காண்டம்

10TH TAMIL காசிக்காண்டம்

  • காசி நகரத்தின் பெருமையை கூறும் நூல் = காசிக்காண்டம்.
  • காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் = அதிவீரராம பாண்டியன்.
  • “இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்” ஆகியவற்றை கூறுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அதிவீரராம பாண்டியன் ஆசிரியர் குறிப்பு

  • முத்துக் குளிக்கும் நகரம் = கொற்கை.
  • கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.
  • அதிவீரராம பாண்டியனின் சிறப்புப்பெயர் = சீவலமாறன்.
  • சீவலமாறன் என அழைக்கப்படும் அரசன் =அதிவீரராம பாண்டியன்.
  • அதிவீரராம பாண்டியன் இயற்றிய மற்றொரு நூல் = “வெற்றி வேற்கை”.
  • வெற்றிவேற்கை நூலினை “நறுந்தொகை” என்றும் அழைப்பர்.
  • அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல்கள் = நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், காசிக்காண்டம், வெற்றிவேற்கை (நறுந்தொகை).

10TH TAMIL காசிக்காண்டம்

காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பலின் 9 இல்லற ஒழுக்கங்கள்

  • காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பலின் இல்லற ஒழுக்கங்கள் = ஒன்பது.
  • அவை,
    1. விருந்தினரை வியந்து உரைத்தல்
    2. நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்
    3. முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்
    4. ‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்
    5. விருந்தினர் எதிரில் நிற்றல்
    6. விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்
    7. விருந்தினர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்
    8. விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல்
    9. விருந்தினரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.
  • “முகமன்” என்பதன் பொருள் = “ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்” ஆகும்.

அருஞ்சொற்பொருள்

  • அருகுற = அருகில்
  • முகமன் = ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

இலக்கணக்குறிப்பு

  • நன்மொழி = பண்புத்தொகை
  • வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்குதல் = தொழிற்பெயர்கள்.

 

 

Leave a Reply