10TH TAMIL காசிக்காண்டம்
10TH TAMIL காசிக்காண்டம்
- காசி நகரத்தின் பெருமையை கூறும் நூல் = காசிக்காண்டம்.
- காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் = அதிவீரராம பாண்டியன்.
- “இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்” ஆகியவற்றை கூறுகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அதிவீரராம பாண்டியன் ஆசிரியர் குறிப்பு
- முத்துக் குளிக்கும் நகரம் = கொற்கை.
- கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
- தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.
- அதிவீரராம பாண்டியனின் சிறப்புப்பெயர் = சீவலமாறன்.
- சீவலமாறன் என அழைக்கப்படும் அரசன் =அதிவீரராம பாண்டியன்.
- அதிவீரராம பாண்டியன் இயற்றிய மற்றொரு நூல் = “வெற்றி வேற்கை”.
- வெற்றிவேற்கை நூலினை “நறுந்தொகை” என்றும் அழைப்பர்.
- அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல்கள் = நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், காசிக்காண்டம், வெற்றிவேற்கை (நறுந்தொகை).
காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பலின் 9 இல்லற ஒழுக்கங்கள்
- காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பலின் இல்லற ஒழுக்கங்கள் = ஒன்பது.
- அவை,
- விருந்தினரை வியந்து உரைத்தல்
- நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்
- முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்
- ‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்
- விருந்தினர் எதிரில் நிற்றல்
- விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்
- விருந்தினர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்
- விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல்
- விருந்தினரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.
- “முகமன்” என்பதன் பொருள் = “ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்” ஆகும்.
அருஞ்சொற்பொருள்
- அருகுற = அருகில்
- முகமன் = ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
இலக்கணக்குறிப்பு
- நன்மொழி = பண்புத்தொகை
- வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்குதல் = தொழிற்பெயர்கள்.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்