10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

Table of Contents

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

  • “நாடும் மொழியும் நமது இருகண்கள்” என்றவர் = பாரதியார்.
  • சொல் வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும்.

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்

  • “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் = கால்டுவெல்.
  • கால்டுவெல் தனது “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” நூலின் கூறுவதாவது,
  • “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும்.
  • தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள”.

    JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

    download1

தாவரத்தின் அடிப்பகுதியை குறிக்கும் சொற்கள்

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
  • தாள் = நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடிப் பகுதி
  • தண்டு = கீரை,வாழை முதலியவற்றின் அடிப் பகுதி
  • கோல் = நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடிப் பகுதி
  • தூறு = குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிப் பகுதி
  • தட்டு அல்லது தட்டை = கம்பு, சோளம் முதலியவற்றின் அடிப் பகுதி
  • கழி = கரும்பின் அடிப் பகுதி
  • கழை = மூங்கிலின் அடிப் பகுதி
  • அடி = புளி, வேம்பு முதலியவற்றின் அடிப் பகுதி

தாவரங்களின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள்

  • கவை = அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
  • கொம்பு (அ) கொப்பு = கவையின் பிரிவு
  • கிளை = கொம்பின் பிரிவு
  • சினை = கிளையின் பிரிவு
  • போத்து = சினையின் பிரிவு
  • குச்சு = போத்தின் பிரிவு
  • இணுக்கு = குச்சியின் பிரிவு

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள்

  • சுள்ளி = காய்ந்த குச்சு (குச்சி)
  • விறகு = காய்ந்த சிறுகிளை
  • வெங்கழி = காய்ந்த கழி
  • கட்டை = காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும் சொற்கள்

  • இலை = புளி, வேம்பு முதலியவற்றின் இலை
  • தாள் = நெல்,புல் முதலியவற்றின் இலை
  • தோகை = சோளம், கரும்பு முதலியவற்றின் இலை
  • ஓலை = தென்னை , பனை முதலியவற்றின் இலை
  • சண்டு = காய்ந்த தாளும் தோகையும்
  • சருகு = காய்ந்த இலை

தாவரத்தின் நுனிப்பகுதிகளை குறிக்கும் சொற்கள்

  • துளிர் அல்லது தளிர் = நெல், புல் முதலியவற்றின் கொழுந்து
  • முறி அல்லது கொழுந்து = புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
  • குருத்து = சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
  • கொழுந்தாடை = கரும்பின் நுனிப்பகுதி

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்

  • அரும்பு = பூவின் தோற்றநிலை
  • போது = பூ விரியத் தொடங்கும் நிலை
  • மலர் (அலர்) = பூவின் மலர்ந்த நிலை
  • வீ = மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை
  • செம்மல் = பூ வாடின நிலை

தாவரத்தின் பிஞ்சு வகைகளை குறிக்கும் சொற்கள்

  • பூம்பிஞ்சு = பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  • பிஞ்சு = இளம் காய்
  • வடு = மாம்பிஞ்சு
  • மூசு = பலாப்பிஞ்சு
  • கவ்வை = எள்பிஞ்சு
  • குரும்பை = தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
  • முட்டுக் குரும்பை = சிறு குரும்பை
  • இளநீர் = முற்றாத தேங்காய்
  • நுழாய் = இளம்பாக்கு
  • கருக்கல் = இளநெல்
  • கச்சல் = வாழைப்பிஞ்சு

தாவரங்களின் குலை வகைகளை குறிக்கும் சொற்கள்

  • கொத்து = அவரை, துவரை முதலியவற்றின் குலை
  • குலை = கொடி முந்திரி போன்றவற்றின் குலை
  • தாறு = வாழைக் குலை
  • கதிர் = கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்
  • அலகு அல்லது குரல் = நெல், தினை முதலியவற்றின் கதிர்
  • சீப்பு = வாழைத்தாற்றின் பகுதி

கெட்டுப்போன காய் கனிக்கு வழங்கப்படும் சொற்கள்

  • சூம்பல் = நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல் = சுருங்கிய பழம்
  • சொத்தை = புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  • வெம்பல் = சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல் = குளுகுளுத்த பழம்
  • அழுகல் = குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
  • சொண்டு = பதராய்ப் போன மிளகாய்
  • கோட்டான் காய் அல்லது கூகைக்காய் = கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய் = தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்
  • அல்லிக்காய் = தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்
  • ஒல்லிக்காய் = தென்னையில் கெட்ட காய்
  • 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

பழங்களின் தோல் பகுதியை குறிக்கும் சொற்கள்

  • தொலி = மிக மெல்லியது
  • தோல் = திண்ணமானது
  • தோடு = வன்மையானது
  • ஓடு = மிக வன்மையானது
  • குடுக்கை = சுரையின் ஓடு
  • மட்டை = தேங்காய் நெற்றின் மேற்பகுதி
  • உமி = நெல்,கம்பு முதலியவற்றின் மூடி
  • கொம்மை = வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

தானியங்களுக்கு வழங்கும் பல்வேறு சொற்கள்

  • கூலம் = நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள்
  • பயறு = அவரை, உளுந்து முதலியவை
  • கடலை = வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை
  • விதை = கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
  • காழ் = புளி, காஞ்சிரை (ருச்சு மரம்) முதலியவற்றின் வித்து
  • முத்து = வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
  • கொட்டை = மா, பனை முதலியவற்றின் வித்து
  • தேங்காய் = தென்னையின் வித்து
  • முதிரை = அவரை, துவரை முதலிய பயறுகள்
  • 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

தாவரங்களின் இளம் பருவத்தினை குறிக்கும் சொற்கள்

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
  • நாற்று = நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
  • கன்று = மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
  • குருத்து = வாழையின் இளநிலை
  • பிள்ளை = தென்னையின் இளநிலை
  • குட்டி = விளாவின் இளநிலை
  • மடலி அல்லது வடலி = பனையின் இளநிலை
  • பைங்கூழ் = நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
  • 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

தமிழரின் சிறப்பு

  • ஒரு மொழி, பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும் அமையப்பெறும்.
  • தமிழ்ப் பொது மக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும் இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்று கடன்கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க Leaf என ஒரேசொல் உள்ளது.
  • ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மைபற்றித் தாள், இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை.

தமிழ்நாட்டில் நெல் வகைகள்

  • தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா,மட்டை,கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
  • இவற்றோடு வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.
  • தமிழ்நாட்டுள்ளும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன.
  • 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

தமிழ்த்திரு இரா இளங்குமரனார்

  • சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்? = இரா. இளங்குமரனார்
  • திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” ஒன்றை அமைத்தவர் = இரா. இளங்குமரனார்.
  • “பாவாணர் நூலகம்” என்ற நூலகத்தை உருவாக்கியவர் = இரா. இளங்குமரனார்
  • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.
  • “விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்” = இரா. இளங்குமரனார்.
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் = இரா. இளங்குமரனார்.
  • “தமிழ்த்திரு” என்று அழைக்கப்பட்டவர் = இர. இளங்குமரனார்
  • “உலகப் பெருந்தமிழர்” என்று அழைக்கப்பட்டவர் = இரா. இளங்குமரனார்.
  • 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

இரா இளங்குமரனார் நூல்கள்

  • இரா இளங்குமரனார் எழுதிய நூல்கள் = இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்.

முதல் உலகத் தமிழ் மாநாடு

  • உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு = மலேசியா.
  • மாநாட்டுக்குரிய அம்முதல் மொழி = தமிழே.
  • “பன்மொழிப் புலவர்” என அழைக்கப்படுபவர் = க.அப்பாத்துரையார்.

பாவாணரின் தமிழ்ச்சொல்வளம் கட்டுரை

  • பாவாணர், தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரிதாள் வகை, காய்ந்த இலைவகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதைத்தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செறிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்
  • “மொழிஞாயிறு” என்று அழைக்கப்பட்டவர் = தேவநேயப்பாவாணர்.
  • பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர்.
  • “தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்” = தேவநேயப்பாவாணர்.
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் = தேவநேயப்பாவாணர்.
  • உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியாவர் = தேவநேயப்பாவாணர்.
  • உலகத் தமிழ் கழகத்தின் தலைவராக இருந்தவர்.

கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்

  • போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது.
  • ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues.
  • இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.
  • இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.

 

 

 

 

Leave a Reply