11 ஆம் வகுப்பு சிவபெருமான்
11 ஆம் வகுப்பு சிவபெருமான்
- சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
- முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் = திருஞானசம்பந்தர்.
- 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு
- திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
- பெற்றோர் = புகழனார், மாதினியார்
- இவரின் தமக்கையார் = திலகவதியார்
- இயற்பெயர் = மருள் நீக்கியார்
- இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
- சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
- இவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் திருவாக்கைத் தந்தவர்.
- காலம் = கி.பி. ஏழாம் நூற்றாண்டு
சொற்பொருள்
- நமன் = எமன்
- நடலை = இறப்பு
- பிணி = நோய்
- ஏமாப்பு = பாதுகாப்பு
இலக்கணக்குறிப்பு
- நமனை யஞ்சோம் = உருபு மயக்கம்
- நகரத்தில் இடர்ப்படோம் = ஏழாம் வேற்றுமை விரி
- வெண்குழை, சேவடி = பண்புத் தொகைகள்
- கொய்ம்மலர் = வினைத்தொகை