11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
- ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.
- சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
- குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி என்னல் தகுதியுடையதாயிற்று.
- இந்நூலுக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு
- இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
- இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
- இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
- சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசயை ‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார்.
- அக்குழந்தை தும்மிய பொழுது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது.
- அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான்.
- சீவகன் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின் அந்நூல் சீவகசிந்தாமணி என வழங்கலாயிற்று.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருத்தக்கத்தேவர் ஆசிரியர் குறிப்பு
- சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
- இவர் சோழ நாடினர்.
- சமணத் துறவி.
- இவர் நரி விருத்தம் என்ற நூலையும் .
காந்தருவதத்தையார் இலம்பகம்
- வெள்ளி மலையில் உள்ள வித்தியாதரர் வேந்தன் கலுழவேகன்.
- அவன் மகள் காந்தருவதத்தை.
- காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
- யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
- காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
- சீவகனின் நண்பன் நிபுலன்
- போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.
சொற்பொருள்
- சிலை = வில்
- சிலைத் தொழில் = (தொழில் சிலை) போரில் நாண் ஏற்றிய வில்
- சிறுநுதல் = சிறிய நெற்றியுடைய காந்தருவ தத்தை
- தெய்வப் பாவை = தெய்வத்தாற் செய்த கொல்லிப் பாவை
- கலை = இசைக்கலை
- எழீஇ = யாழை வாசித்து
- பொழில் = சோலை
- குரங்கின = வளைந்தன
- பறவை = கின்னரமிதுனம் என்னும் பறவைகள்
- கலைத்தொழில் பொருந்தப் பாடுதல் = பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எண் வகையான முறைமையறிந்து பாடுதல்.
- கருங்கொடி = கரிய ஒழுங்கு
- மிடறு = கழுத்து
- கொடி = ஒழுங்கு
- கடி = விளக்கம்
- எயிறு = பல்
- விம்மாது = புடைக்காது
- வீணை நாவு = சரீரத்தை வீணையாகக்கூறுவது இசை நூல் மரபு (உடம்போடு வைத்து யாழ் மீட்டினாள்)
- கோதை = காந்தருவதத்தை
- முரல்வது = ஆரவாரித்தல்
- தேனினம் =வண்டுகளின் கூட்டம்
- எழால் வகை = யாழின் கூறுபாடு
- வீரர் = (தோல்வியடைந்தவரை வீரர் என்றது) இகழ்ச்சிக் குறிப்பு
- வீரர் = போட்டிக்கு வந்த அந்தணர்
- எரிமலர் = முருக்கமலர்
- இன்னரம்பு = யாழின் இனிய நரம்பு
- செவ்வாய் = காந்தருவதத்தை
- உளர = தடவ
- உடைந்தனர் = தோற்றனர்
- பாடல் = மிடற்றுப்பாடல்
- பொன் அன்னாள் = திருமகள் போல்வாள் (தத்தை)
- விடுகணை = வில்லினின்று விட்ட அம்பு
- விசையின் = வேகம் போல
- வெய்ய = விரும்பத்தக்க
- இவுளி = குதிரை
- கால் = காற்று
- காலியற்புரவி = கடுங்காற்றுப்போல விரைந்த நடையினையுடைய குதிரைகள்
- அணிநகர் = அழகிய மண்டபம்
- நுனை = கூர்மை
- கழித்த வேல் = உறையினின்று எடுத்த வேல்
- கடம் = காடு
- பிணை = பெண்மான்;
- மாழ்கி = மயங்கி
- வெய்துயிர்த்து = பெருமூச்செறிந்து
- இழுக்கி = தப்பி
- தோழி = வீணாபதி
- இரிய = விலகி ஓட
- கொடுமோ = கொடுப்பாய்
- தடங்கண்ணாள் = அகன்ற கண்களையுடைய காந்தருவதத்தை
- எழினி = உறை
- மொய்ம்பு = வலிமை
- மடங்கல் = சிங்கம்
- நெடுங்கண்ணாள் = வீணாபதி
- கிளக்கலுற்று = அறிவிக்க எண்ணி.
- மெய்நொந்து ஈன்ற துளி = மேகம் உடல்வருந்திப் பொழிந்த மழைத்துளி
- சுரந்து = நிறைந்து
- துளி = (இங்கு) பெருமழை
- தேனார்த்தென = வண்டுமுரன்றது போல
- தீண்டி = நரம்பைத் தெறித்து
- பொல்லாமை = குற்றமுடைமை
- கொடி = வீணாபதியைக் குறிக்கும்
- இளகிற்று = மெலிந்தது
- நீரின் வந்தது = நீரில் கிடந்து அழுகியது
- கணிகை = பொதுமகள், வேசை
- வாட் புண் உற்றது = வாளால் வெட்டுப் பட்டது
- கொல்லை = முல்லைநிலம்
- குரங்கி = வளைந்து
- புல்ல = தழுவ
- தூமம் = அகிற்புகை
- நங்கை நலத்தது – தத்தை போலவே குல முதலியவற்றாற் சிறப்புடையது
- நிலமடந்தை = பெற்ற தாய்
- இருவிசும்பு = செவிலித்தாய்
- கைத்தாய் = செவிலித்தாய்
- மின்னுப் பொன்நாண் = மின்னல் ஆகிய பொன்னரை ஞாண்
- முகில் மாரி = மேகந்தரும் மழை (மழையாகிய தீம்பால்)
- கவினி = அழகு பொருந்தி
- நோய்நான்கு = மிக்கவெயில், அதிகநீர், கடுங்காற்று, தண்ணென்ற நிழல்
- சிறிதலாப்பொழுது நெடுநேரம்
- ஓதி = சொல்லி
- புரி = முறுக்கு
- பூந்தொடை = பூக்களாலாகிய மாலை
- நெகிழ்த்தி = தளர்த்தி, உடைத்து
- வார்புரி நரம்பு = நீண்ட முறுக்கமமைந்த நரம்பு
- அரிவை = நங்கை
- மைந்தன் = சீவகன்
- நபுலன் = சீவகன் தம்பி
- ஓதி = கூந்தல் (கூந்தலையுடையவள்)
- பத்தர் = யாழின் ஓர் உறுப்பு
- வாள் ஆர் = ஒளிபொருந்திய
- கணிபுகழ்காளை = நிமித்திகர்களால் புகழப்பட்ட சீவகன்
- பல்வினை = பலவாகிய வேலைப்பாடு உள்ள
- கடலகம் = கடலால் சூழப்பட்ட உலகம்
- மாடகம் = யாழ் நரம்பை இழுத்துக் கட்டுங் கருவி
- பாட்டு = வாயால் பாடும் பாட்டு
- எழால் = யாழால் உண்டாகும் இசை
- மாதர் = காந்தருவதத்தை
இலக்கணக்குறிப்பு
- எழீஇ = சொல்லிசையளபெடை
- சிறுநுதல் = அன்மொழித்தொகை
- பாவை = உவமையாகுபெயர்
- இலைபொழில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- சிலைத் தொழில் = ஆறாம் வேற்றுமைத் தொகை
- கருங்கொடி = பண்புத்தொகை
- இருங்கடல் = பண்புத்தொகை
- கடிமிடறு = உரிச்சொற்றொடர்
- கயனெடுங்கண், பவளச்செவ்வாய் = உவமத்தொகைகள்
- விரிமலர் = வினைத்தொகை
- கோதை = உவமையாகுபெயர்
- எரிமலர் = உவமத்தொகை
- செவ்வாய் = அன்மொழித்தொகை
- ஒப்ப = உவமவுருபு
- இன்னரம்பு = பண்புத்தொகை
- புரிநரம்ப = வினைத்தொகை
- கொள்பாடல் = வினைத்தொகை
- விடுகணை = வினைத்தொகை
- திண்டேர் = பண்புத்தொகை
- வடிநுனை, விளங்கொளி = வினைத்தொகைகள்
- வாட்படை = இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- அடுதிரை = வினைத்தொகை
- கழித்தவேல் = பெயரெச்சம்
- கொடுமோ = ‘மோ’ முன்னிலையசை
- இன்யாழ் = பண்புத்தொகை.
- அன்ன = உவமஉருபு
- நீக்கி, உய்த்து = வினையெச்சங்கள்
- நெடுங்கண் = பண்புத்தொகை
- கிடந்த ஞானம் = பெயரெச்சம்
- தடங்கண் – உரிச்சொல் தொடர்.
- சுரந்து, முதிர்ந்து, நொந்து = வினையெச்சங்கள்
- என = உவமஉருபு
- பொல்லாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
- நின்றாள் = வினையாலணையும் பெயர்
- எழிலாள் = குறிப்பு வினைமுற்று.
- போக, நடக்க, ஒழிக = வியங்கோள் வினைமுற்றுகள்
- அம்ம = முன்னிலையசை
- ஒண்பொன் = பண்புத் தொகை
- ஒரும் – அசை
- கணிகை சிறுவன் = நான்காம் வேற்றுமைத் தொகை முறைப் பொருளில் வந்தது
- நல்யாழ் = பண்புத் தொகை
- நலத்தது = குறிப்பு வினைமுற்று
- கைத்தாய் = ஏழன் தொகை.
- வாங்குபு = செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; கமழ் ஓதி = அன்மொழித்தொகை
- காளை = உவம ஆகுபெயர்
- திருந்துதார் = வினைத்தொகை
- வேற் கண்ணாள் – உவமத் தொகை
- நடவா = செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
- நடுநடுங்கி = இரட்டைக்கிளவி
- மிடறும் = இறந்தது தழீஇய எச்சவும்மை.
- 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
- 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
- 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
- 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி