11TH TAMIL பதிற்றுப்பத்து
11TH TAMIL பதிற்றுப்பத்து
- “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்று கூறுகிறார் = வள்ளுவர்
- பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்கிறார் = வள்ளுவர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
- இவன் வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன்.
- தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.
- கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
- சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாகப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் கூறப்பட்டுள்ளது.
பாடாண் திணை என்றால் என்ன
- பாடாண் திணையானது மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.
செந்துறைப் பாடாண்பாட்டு என்றால் என்ன
- செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்.
ஒழுகு வண்ணம் என்றால் என்ன
- வண்ணம் என்பது ஒலிநய (சந்தம்) வேறுபாடு ஆகும்.
வண்ணந் தாமே நாலைந் தென்பட
– தொல். பொ. 524 |
- ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதாகும்.
ஒழுகு வண்ண மோசையி னொழுகும்.
தொல். பொ. 538 |
தூக்கு என்றால் என்ன
- தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.
செந்தூக்கு என்றால் என்ன
- செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.
வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே
தொல் . பொ. 383 |
அருஞ்சொற்பொருள்
- பதி – நாடு
- பிழைப்பு – வாழ்தல்
- நிரையம் – நரகம்
- ஒரீஇய – நோய் நீங்கிய
- புரையோர் – சான்றோர்
- யாணர் – புது வருவாய்
- மருண்டெனன் – வியப்படைந்தேன்
- மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
- தண்டா – ஓயாத
- கடுந்துப்பு – மிகுவலிமை
- ஏமம் – பாதுகாப்பு
- ஒடியா – குறையா
- நயந்து – விரும்பிய
இலக்கணக்குறிப்பு
- துய்த்தல் – தொழிற்பெயர்
- ஒரீஇய – சொல்லிசை அளபெடை
- புகழ்பண்பு – வினைத்தொகை
- நன்னாடு – பண்புத்தொகை
- மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
- ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பிரித்து எழுதுக
- மண்ணுடை = மண் + உடை
- புறந்தருதல் = புறம் + தருதல்
பதிற்றுப்பத்து நூல் குறிப்பு
- எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.
- சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடாண் திணையில் அமைந்துள்ளது.
- முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை.
- ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன
- பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.
- பாடப்பகுதிப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர்முன் நிரையபாலரைப் போலப் (நரகத்து வீரர்கள்) படைவெள்ளமாக நின்றதால் ‘நிரைய வெள்ளம்’ என்று தலைப்பு இடப்பட்டுள்ளது.
- பாடப்பகுதியான இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
- இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ண னார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- 11TH TAMIL பதிற்றுப்பத்து
- 11TH TAMIL பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு