11TH TAMIL மயிலை சீனி வேங்கடசாமி

11TH TAMIL மயிலை சீனி வேங்கடசாமி

11TH TAMIL மயிலை சீனி வேங்கடசாமி
11TH TAMIL மயிலை சீனி வேங்கடசாமி

11TH TAMIL மயிலை சீனி வேங்கடசாமி

  • தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன.
  • அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
  • அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதிய செய்திகளைப் புலப்படுத்திய விந்தைப் படைப்புகள்.
  • மயிலை சீனி வேங்கடசாமியின் கட்டுரைகள் = இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம்.
  • மயிலை சீனி வேங்கடசாமியின் நூல்கள் = கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், களப்பிரர் காலத் தமிழகம், கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள்.
  • அவருடைய ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.
  • நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர் தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார்.

மயிலை சீனி வேங்கடசாமி

  • ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
  • சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக்கொண்டவர்.
  • மயிலை சீனி வேங்கடசாமிக்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்‘ என்னும் பட்டமளித்துப் பாராட்டியது.
  • கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் போன்ற பல நூல்களால் தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

 

 

தமிழ்த்தொண்டு

Leave a Reply