மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

  • ஊர் = திருச்சி மாவட்டம் குளத்தூர்
  • பெற்றோர் = சவரிமுத்துப் பிள்ளை – ஆரோகிய மரி அம்மை
  • தொடக்கக்கல்வியை தந்தையிடம் கற்றார்
  • ஆங்கிலம், தமிழ்மொழி = தியாகராச பிள்ளை என்பாரிடம் கற்றார்
  • பாப்பம்மாள் என்பவரை மணந்தார்

சிறப்புப்பெயர்

  • முதல் மறுமலர்ச்சி கவிஞர்
  • தமிழ் நாவல் உலகின் தந்தை
  • தமிழ் புதின இலக்கியத்தின் தந்தை
  • பெண்ணிய சிந்தனையின் முன்னோடி
  • முதல் வசன நடை நூல் வித்தகர்
  • தமிழில் சட்ட நூல் தந்த முன்னோடி
  • இசைப் புலவர்
  • முதல் இந்திய நீதிபதி
  • முதல் தமிழ் நீதிபதி
  • தமிழக மறுமலர்ச்சியின் விடிவெள்ளி
  • தமிழகத்தின் முதல் மொழிபெயர்ப்பாளர்

பணி

  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப் பாளராகவும் பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார்.
  • மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர்.
  • மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மொழிபெயர்ப்புப் பணி

  • கி.பி 1805 முதல் கி.பி. 1861-ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை அதாவது 56 ஆண்டுகள் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862-இல் வெளிட்டார்.
  • மேலும் 1862, 1863-ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார்.
  • நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

நூல்கள்

  • நீதிநூல் திரட்டு (45 அதிகாரங்கள், 529 விருத்தப்பா)
  • பிரதாப முதலியார் சரித்திரம் (தமிழின் முதல் நாவல்)
  • சுகுண சுந்தரி (இவரின் 2-வது நாவல்)
  • பொம்மைக் கலியாணம்

மொழிபெயர்ப்பு நூல்

  • சோபனப் பாடல்கள்
  • சித்தாந்த சங்கிரகம் (ஆங்கில சட்டங்களை தமிழில் மொழிபெயர்த்த நூல்)
  • உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

இசை நூல்கள்

  • சர்வ சமய சமரசக் கீர்த்தனை
  • சத்திய வேத கீர்த்தனை

சமய நூல்கள்

  • பெரியநாயகியம்மன்
  • பெரியநாயகி அம்மைப் பதிகம்
  • திருவருள் அந்தாதி
  • திருவருள் மாலை
  • தேவமாதா அந்தாதி
  • தேவ தோத்திர மாலை

பெண்மை நூல்கள்

  • பெண்மதிமாலை
  • பெண்கல்வி (பெண்களின் முன்னேற்றத்திற்காக எழுதப்பட்ட முதல் தனி நூல்)
  • பெண் மானம் (வசன காவியம் எனப்படும் நூல் இது)

குறிப்பு

  • இவர் தனது சமகாலத் தமிழ் அறிஞர்களான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோருடன் நட்பு பாராதி வந்தவர்
  • இசையிலும் வீனை வாசிப்பதிலும் வல்லவர்
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார்
  • வடமொழி, பிரெஞ்ச், இலத்தீன் ஆகிய மொழிகளை அறிந்தவர்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை – சிறப்புகள்

  • தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” என்னும் நாவலை இயற்றியவர் இவரே
  • 1876-1878 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்
  • பெண்கல்விக்கு குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமை இவர் ஆவார்.
  • தொடக்கக் கால பெண் விடுதலைக்கு வித்திட்டவர்
  • மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இது தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி.
  • தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய கவிஞர் இவரே (குறிப்பு = சிலர் வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்து பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு)
  • ஆங்கில மொழியின் வளர்ச்சியை, “ஆங்கில தலையெடுக்க ஏன் என்று கேட்பாரில்லாத் தமிழ்” என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.

முதல் இந்திய நீதிபதி

  • 1856 இல் நடைபெற்ற ஆங்கில அரசின் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு முதன்மையாகத் தேர்ச்சி பெற்றுத் தமிழரான வேதநாயகம் பிள்ளை முதல் இந்திய நீதிமன்ற நீதிபதியாக 1857 ஆம் ஆண்டில் தம் 31 ஆம் அகவையில் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

தமிழகத்தின் முதல் மொழிபெயர்ப்பாளர்

  • சட்டம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்னும் ஆர்வத்தால், “சிவில் வழக்கு” நடைமுறைத் தொகுப்பு (1859) திருத்தப்பட்ட நிலையில், மெக்காலேயின் தண்டனை விதித் தொகுப்பு அரசாங்க அறிவிப்புகளாக மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டன.
  • இந்நூல்கள் வெளியிடப் பட்டதன் மூலம் தமிழகத்தின் முதல் மொழிப் பெயர்ப்பாளராகத் திகழ்கிறார் பிள்ளை அவர்கள்.

எதிலும் முதன்மை

  • வேதநாயகர், நீதிபதி பதவியில் அமர்ந்த முதல் தமிழர், முதல் இந்தியர்.
  • முதல் நாவலாசிரியர்.
  • முதல் மறுமலர்ச்சிக்கவிஞர்
  • பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த முதல் மறுமலர்ச்சி எழுத்தாளர்.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.
  • தமிழில் வழிபாடு நடைபெற முதல்படி அமைத்தவர்.
  • இந்நாள் தமிழிசை இயக்கத்தின் முன்னவர்
  • தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்த முன்னோடி
  • தமிழ் ஆட்சி மொழி, நீதி மன்ற மொழி, வழிப்பாட்டு மொழி, கல்வி மொழி ஆவதற்கு முதன் முதல் குரல் கொடுத்தவர்.

 

Leave a Reply