11TH TAMIL திருச்சாழல்
11TH TAMIL திருச்சாழல்
- மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை = திருச்சாழல் ஆகும்.
- ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது = திருச்சாழல்
- இவ்வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.
அருஞ்சொற்பொருள்
- காயில் – வெகுண்டால்
- அயன் – பிரமன்
- மால் – விஷ்ணு
- ஆலாலம் – நஞ்சு
- அந்தம் – முடிவு
இலக்கணக்குறிப்பு
- சுடுகாடு, கொல்புலி, குரைகடல் = வினைத்தொகைகள்
- நல்லாடை = பண்புத்தொகை
பிரித்து எழுதுக
- கற்பொடி = கல் + பொடி
- உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
- திருவடி = திரு + அடி
சாழல் என்றால் என்ன
- சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
- ஒரு பெண் வினா கேட்க, மற்றொரு பெண் விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
- இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும்.
- திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
- திருச்சாழல் பயன்படுத்தி பாடல் பாடியுள்ள ஆழ்வார் = திருமங்கையாழ்வார்.
- மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.
திருவாசகம் நூல் குறிப்பு
- திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
- இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.
- திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன.
- இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.
- இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
- பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள்.
- ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது முதுமொழி.
- திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது.
- இறைவனின் பெருமையைத் பேசும் வகையில் மாணிக்கவாசகர் திருச்சாழல் வகையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை = 20.
- ஜி.யு. போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மாணிக்கவாசகர் வரலாறு
- மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
- திருவாதவூரைச் சேர்ந்தவர்.
- இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
- மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவாகும்.
Very useful