11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்
11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

  • சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியே நாட்டுப்புறப் பாடல்கள்.
  • இவை, நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், உழைக்கின்றபோது களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகவும் தம் வாழ்வில் பெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்காகவும் பாடப்படுகின்றன.
  • இப்பாடல்கள், மக்களது உணர்வுகளையும் மனப்பதிவுகளையும் எத்தகைய புனைவுகளுமின்றி இயல்பாகப் பதிவு செய்கின்றன.
  • இப்பாடல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும் இன்றும் நம் வாழ்க்கையில் மண்ணின் மணம் மாறாமல் இசைத் தன்மையோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புற பாடல்களின் வேறு பெயர்கள்

  • இவற்றை நாடோடிப்பாடல், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், ஏட்டிலெழுதாக் கவிதை, மக்கள்பாடல், பரம்பரைப்பாடல், நாட்டார்பாடல் என்று பல்வேறு பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர்.

நாட்டுப்புறபாடல்களின் பல்வேறு வடிவங்கள்

  • மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப்பாடல்கள் தாலாட்டுப்பாடலாக, தெம்மாங்குப்பாடலாக, விளையாட்டுப்பாடலாக, கும்மிப்பாடலாக, ஒப்பாரிப்பாடலாக, தொழிற் பாடலாக, வழிபாட்டுப்பாடலாகப் பல்வேறு வடிவங்களில் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
  • வில்லிசை, பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகிய நாட்டுப்புறக்கலை வடிவங்களில் நாட்டுப்புறப்பாடல் தன் ஆற்றலை வெளிக்காட்டுகிறது.

உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டும்

  • நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளத்து உணர்வுகளை வடிகட்டாமல் அப்படியே கொட்டும் பாடல்கள்.
  • அதனால் அவற்றில் இயல்பான சொல்வளமும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் நிறைந்திருக்கும்.

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கவிதை நூல்கள்

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

வ.எண்

ஆண்டு நூல் ஆசிரியர்
1 1968 வெள்ளைப் பறவை

அ. சீனிவாச ராகவன்

2

1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன்
3 1982 மணிக்கொடி காலம்

பி.எஸ்.ராமையா

4

1999 ஆலாபனை அப்துல் ரகுமான்
5 2002 ஒரு கிராமத்து நதி

சிற்பி பாலசுப்ரமணியம்

6

2004 வணக்கம் வள்ளுவ! ஈரோடு தமிழன்பன்
7 2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு

மு. மேத்தா

8

2009 கையொப்பம் புவியரசு

9

2017 காந்தள் நாட்கள்

இன்குலாப்

Leave a Reply