11TH TAMIL தனிப்பாடல்கள்

11TH TAMIL தனிப்பாடல்கள்

11TH TAMIL தனிப்பாடல்கள்
11TH TAMIL தனிப்பாடல்கள்

11TH TAMIL தனிப்பாடல்கள்

  • தமிழில் தனிப்பாடல்களின் வரலாறு தனித்துவமானது.
  • சங்ககாலப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தது போல இன்று வரையிலும் புதிய தடங்களில் பல திரட்டுகள் வெளிவருகின்றன.

தனிப்பாடல் என்றால் என்ன

  • தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல் என்கிறோம்.
  • புலவர்கள் தம் உள்ளக்கருத்தை எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் விருப்பம் போல எழுதிய பாடல்கள் இவை.
  • இவற்றைத் தமிழறிஞர்களும் சுவைஞர்களும் பெரிதும் முயன்று, தேடித் ‘தனிப்பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார்கள்.
  • இப்பாடல்களில் பலவித உணர்ச்சிகள், ஓசை விளையாட்டு, சொல் விளையாட்டு, விடுகதை என அத்துணை சுவைகளும், நயங்களும் காணக்கிடக்கின்றன.

அழகிய சொக்கநாதர்

  • திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர்.
  • இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை.
  • முத்துசாமி என்பார் இவரை ஆதரித்தவர் ஆவார்.
  • இவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
  • காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றைப் பாடியுள்ளார்.
  • “புதையல்” என்ற சொல்லில் இருந்து பல பொருள் கொண்ட சொற்களை விளக்கும் வகையில் பாடல்களை இயற்றியுள்ளார்.
    • “தையல்” என்பதன் பொருள் = பெண்
    • “புதை” என்பது = கட்டளையிடும் சொல்
    • “புயல்” என்பது = மேகத்தை குறிக்கிறது.
    • “புல்” என்பது = விலங்குகள் உண்பது
    • “தை” = மாதம்

சுந்தரகவிராயர்

  • பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் சுந்தரகவிராயர்.
  • உழவுத்தொழிலின் உயர்வை நன்குணர்ந்தவர்.
  • எட்டயபுரம் அருணாசலத்துரை, தையூர் முத்து முதலானோர் இப்புலவரை ஆதரித்துள்ளனர்.

Leave a Reply