12ஆம் வகுப்பு தொகை நூல்கள்
12ஆம் வகுப்பு தொகை நூல்கள்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது.
- சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்பர்.
- சங்க இலக்கியங்கள் = பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள்.
- சங்க இலக்கியங்களை “மேற்கணக்கு நூல்கள்” என வழங்குவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
6.3x
எட்டுத்தொகை நூல்கள் யாவை
- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.
எட்டுத்தொகை நூல்களை குறிப்பிடும் பாடல்
‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை” |
எட்டுத்தொகையில் புறப்பொருள் நூல்கள்
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
எட்டுத்தொகையில் அகப்புற நூல்
- எட்டுத்தொகையில் அகப்புறப் பாடல்களை கொண்ட நூல் = பரிபாடல்.
எட்டுத்தொகையில் அகப்பொருள் நூல்கள்
- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு
தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்பவை யாவை?
- அகப்பொருள் பற்றிய நூல்களிலிருந்து பழந்தமிழ் மக்களின் மக்களின் அகவாழ்க்கை முறையினையும் புறப்பொருள் நூல்களிலிருந்து புறவாழ்க்கை முறையினையும் தெளிவாகக் காணலாம்.
- சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்கின்றன.
குறிப்புப்பொருள் உத்தி என்றால் என்ன
- சங்ககாலப் புலவர்கள் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
- இவை இரண்டையும் குறிப்புப்பொருள் உத்தி என அழைப்பர்.
உள்ளுறை உவமை என்றால் என்ன
- வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உத்தியாகும்.
- உள்ளுறை உவமையில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும்;
- உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது.
- உவமிக்கப்படும் பொருள் தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும்.
- உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
இறைச்சி என்றால் என்ன
- கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சியாகும்.
- இதுவும் தெய்வம் நீங்கலாக உள்ள கருப்பொருளை வருணிக்கும் வருணனையில் குறிப்புப் பொருளாக அமையும் தன்மை கொண்டது.
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 6th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 7th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 8th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 9th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 10th Std
- Tnpsc Pothu Tamil 11th std
- Tnpsc Pothu Tamil 12th std
- 12ஆம் வகுப்பு தொகை நூல்கள்
- 12ஆம் வகுப்பு தொகை நூல்கள்
- 12ஆம் வகுப்பு தொகை நூல்கள்