12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- பா வகை = அகவற்பா
- அடி எல்லை = 3 முதல் 6
- ஐநூறு பாடல்கள் உள்ளன.
- ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன.
- தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- தொகுப்பித்தவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை
- 11TH TAMIL ஐங்குறு நூறு
ஐங்குறுநூறு பாடியோர் விவரம்
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு |
- குருஞ்சித் திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
- முல்லைத் திணை பாடல்கள் பாடியவர் = பேயன்
- மருதத் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
- நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
- பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
- இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பராய்க்கடன் உரைத்தல் என்றால் என்ன
- ஒருவர் தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக்கோடல் பராய்க்கடன் உரைத்தல் என்பர்.
- எட்டுத்தொகை
ஆந்தையார் ஆசிரியர் குறிப்பு
- ஆந்தையார் என்பது இயற்பெயர்.
- ஓதலூர் என்னும் ஊர்.
- ஓதலூர் மேலைக் கடற்கரைக் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
- ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ.
- ஆந்தையார் பாடிய பாடல்கள் பெரும்பாலும் “பாலைத்திணை” பாடல்கள் ஆகும்.
சொற்பொருள்
- மறு = குற்றம்
- தூவி = இறகு
- மரபு = முறைமை
- அஞ்சிலோதி = (அம்+சில+ஓதி) அழகிதாய சிலவாகிய கூந்தல் (உடைய தலைவி
- ஓதி = கூந்தல்
- கிளை = சுற்றம்
- பச்சூன் = (பசுமை + ஊன்) பசிய ஊன்
- ஊன் – தசை
- பைந்நிணம் = (பசுமை + நிணம்) பசிய கொழுப்பு
- நிணம் = கொழுப்பு
- வல்சி = உணவு
- பொலம் = பொன்
- கலம் = பாத்திரம்
- விறல் = வலிமை
- காளை = தலைவன்
பிரித்து எழுதுக
- அஞ்சிலோதி = அம்+சில+ஓதி
- பச்சூன் = பசுமை + ஊன்
- பைந்நிணம் = பசுமை + நிணம்
இலக்கணக்குறிப்பு
- கருங்காக்கை = பண்புத்தொகை
- பச்சூன் = பண்புத்தொகை
- பைந்நிணம் = பண்புத்தொகை
- வெஞ்சினம் = பண்புத்தொகை
- பொலம்புனை – மூன்றாம் வேற்றுமைத் தொகை
- புனைகலம் – வினைத்தொகை
- தருகுவென் – தன்மை ஒருமை வினைமுற்று
- வேற்காளை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- காளை – உவமையாகுபெயர்
- அஞ்சிலோதியை வர = பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை