12 ஆம் வகுப்பு புத்தர் பிரான்
12 ஆம் வகுப்பு புத்தர் பிரான்
- புத்தர் பிரானைப் போற்றும் இப்பகுதி “மணிமேகலை” என்னும் காப்பியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சீத்தலைச் சாத்தனார் ஆசிரியர் குறிப்பு
- மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
- இவரைத் “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
- சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும் இவரும் ஒத்த நண்பினர் எனவும் இவர் வேண்டிக் கொள்ளவே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார் எனவும் கூறுவர்.
- இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
மணிமேகலை நூல் குறிப்பு
- மணிமேகலை புத்த சமய காப்பியம்.
- இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
- மணிமேகலையில் உள்ள மொத்த காதைகள் = 30.
- மணிமேகலை நூலின் முதல் காதலி = இந்திர விழவூரெடுத்த காதை
- மணிமேகலை நூலின் இறுதி காதலி = பவத்திறம் அறுகெனப்பாவை நோற்ற காதை
சொற்பொருள்
- தீர்த்தன் = தூயன்
- புராணன் = மிகப்பழையன்
- குற்றம் = காம வெகுளி மயக்கங்கள் ஆகிய குற்றங்கள்
- முற்றவுணர்ந்த முதல்வன் = யாவும் உணர்ந்தோன் (சர்வக்ஞன்)
- செற்றம் செறுத்தோய் = கொலை நெறி தவிர்த்தோய்
- ஏமம் = பாதுகாவல்
- ஆரம் = சக்கரக்கால்
- கடிந்தோன் = துறந்தோன்
- ஆழியந்திருந்தடி = சக்கர ரேகையுள்ள திருவடி
- ஏத்துவது = போற்றி செய்வது
- எவன் = எங்ஙனம்
இலக்கணக்குறிப்பு
- தீநெறி, கடும்பகை = பண்புத் தொகைகள்
- என்கோ = தன்மை ஒருமை வினைமுற்று
- உயர்ந்தோய், செறுத்தோய் = முன்னிலை வினைமுற்றுகள்
- உணர்ந்த முதல்வன் = பெயரெச்சம்