12 TAMIL நெடுநல்வாடை
12 TAMIL நெடுநல்வாடை
- ஐப்பசி ஆடை மழை! கார்த்திகை கனமழை! என்பது சொலவடை ஆகும். ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்பருவம் என்று அழைத்தனர்.
பாடல்
பாடலின் பொருள்
- தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
- விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
- மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
- பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளை தவிர்த்தன.
- மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
பாடல் குறிப்பு
- இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது.
- தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும்
- போர்ப் பாசறையில் இருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் உள்ளது
- இப்பாடலில் பயின்று வரும் பா வகை = நேரிசை ஆசிரியப்பா
- இப்பாடலில் பயின்று வரும் திணை = வாகை தினம்
- இப்பாடலில் பயின்று வந்த துறை = கூதிர்ப்பாசறை
வாகை திணை
- வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்
கூதிர்ப்பாசறை
- போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தாங்கும் படை வீடு
அருஞ்சொற்பொருள்
- பொய்யா வானம் = பருவம் பொய்யாது
- வையகம் = உலகம்
- வலன் = வலம்
- ஏர்பு = எழுந்து
- பெயல் = மழை
இலக்கணக் குறிப்பு
- வளைஇ – சொல்லிசை அளபெடை
- பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- புதுப்பெயல் – பண்புத்தொகை
- கொடுங்கோல் – பண்புத்தொகை
- பனிப்ப – வினையெச்சம்
- பரப்பி – வினையெச்சம்
- கலங்கி – வினையெச்சம்
- நடுங்க – வினையெச்சம்
- ஏர்பு – வினையெச்சம்
- வானம் (முகில்) – ஆகுபெயர்
- முனைஇய – சொல்லிசை அளபெடை
- புடையூ – செய்யூ என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
- கொள் கொள்ளி – வினைத்தொகை
- கொள்ளியர் – குறிப்பு வினையாலணையும் பெயர்
- மேயர் – தொழிற்பெயர்
- மறப்ப – வினையெச்சம்
- வீசி – வினையெச்சம்
- குளிர்ப்பன்ன – உவம உருபு
பிரித்து எழுதுக
- நெடுநல்வாடை = நெடுமை + நன்மை + வாடை
- கலங்கி = கலங்கு + இ
- இனநிரை = இனம் + நிரை
- புதுப்பெயல் = புதுமை + பெயல்
- வலனேர்பு = வலன் + ஏர்பு
- கோற்கோவலர் = கோல் + கோவலர்
- ஏறுடை = ஏறு + உடை
ஆசிரியர் குறிப்பு
- இப்பாடலை எழுதியவர் மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரர் ஆவார்
- இப்பாடல் இடம்பெற்ற நூல் = நெடுநல்வாடை
- இவர் நல்லிசைப்புலவர் ஆவார்.
- இவர் இயற்றிய மற்றொரு நூல் = திருமுருகாற்றுப்படை
- இவர் பாடிய பாடல்கள் அகநானூறு முதலிய தொகைநூல்களிலும் உள்ளது.
- 12 TAMIL நெடுநல்வாடை
- நூலாசிரியர் நக்கீரர் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
நூல் குறிப்பு
- நெடுநல்வாடை = நெடுமை + நன்மை + வாடை
- வடதிசையில் இருந்து வீசுகின்ற காற்று வாடையாகும். கூதிர்பருவத்தில் வீசும் வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்து தனிமைத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு நெடுவாடை ஆயிற்று. படையோடு சென்று பாசறையில் தங்கி, இன்பத்தில் மனம் செலுத்தாமல், தான் மேற்கொண்ட வினையினை முடிக்க வாய்ப்பை இருந்ததினால் தலைவனுக்கு நல்வாடை ஆயிற்று. எனவே இந்நூல் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றது.
- நெடுநல்வாடை என்னும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் = பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான்
- இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
- இந்நூலில் 188 அடிகளை கொண்டுள்ளது
- இந்நூலில் பயிலும் பா = ஆசிரியப்பா
-
நெடுநல்வாடை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
-
நக்கீரர், நெடுநல்வாடை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
TNPSC TAMIL MATERIALS
- TNPSC TAMIL – இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- TNPSC TAMIL – வசனநடை கைவந்த வள்ளலார்
- TNPSC TAMIL – பெருமழைக்காலம்
- TNPSC TAMIL – பிறகொரு நாள் கோடை
- 12 TAMIL நெடுநல்வாடை
- 12 TAMIL நெடுநல்வாடை
- 12 TAMIL நெடுநல்வாடை
- 12 TAMIL நெடுநல்வாடை
- TNPSC TAMIL – இளந்தமிழே