12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்
12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்
- ஒரு மொழியின் எழுத்துக்களிலோ, சொல் அமைப்பிலோ தொடர் அமைப்பிலோ சொற்பொருள் அமைப்பிலோ காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும்.
- மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.
மொழியின் அடிப்படை பண்புகள்
- மொழியின் அடிப்படை பண்புகள் நான்கு, அவை
-
- திணை
- பால்
- எண்
- இடம்
-
- தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
- எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகின்றன.
எழுவாய்
- பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றை சொல்லலாம்.
-
- முருகன் நூலகம் சென்றான்
-
- இத்தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துவிடுகிறது.
தினைப் பாகுபாடு
- உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச்சொற்களே அதிகம்.
- பெயர்ச்சொற்கள் இரு வகைப்படும். அவை,
-
- உயர்திணைப் பெயர்
- அஃறினைப் பெயர்
-
- தமிழில் இருதிணைப் பாகுபாடு அமைய அடிப்படையாக இருப்பது = பொருட்குறிப்பு ஆகும்
- இதனை,
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறினை என்மனார் அவரல பிறவே – தொல்காப்பியம் |
- தமிழில் யார்? எது? போன்ற வினாச்சொற்களைப் பயனிலையை அமைத்துத் திணை வேறுபாடு அறியப்படுகிறது.
இருதிணை பொது பெயர்கள்
- இருதிணைக்கும் பொதுவான பெயர்களும் உள்ளன,
-
- குழந்தை சிரித்தான் – குழந்தை சிரித்தது
- கதிரவன் உதித்தான் – கதிரவன் உதித்தது
-
- இப்பெயர்கள் எழுவாயாக அமையும் பொது அவற்றின் வினைமுடிபு இருதிணை பெற்றும் வருகின்றது.
பால் பாகுபாடு
- தமிழில் பால்பகுபு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
- தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்கை இடத்தில் வரும்.
- பால்பகுப்பை காட்டும் பயனிலை விகுதிகள் = ஆண், ஆள், ஆர், அது, அன்
எண் பாகுபாடு
- இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுது பெற்று வருகின்றன.
-
- இரண்டு மனிதர்கள்
-
- அஃறினைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை.
- தற்காலத் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் காணப்படுகிற ஒருமை-பன்மை பற்றிய குழப்பன்களுள் ஒன்று = “ஒவ்வொரு” என்ற சொல்லாகும்
இடப்பாகுபாடு
- இடம் 3 வகைப்படும். அவை,
- தன்மை
- முன்னிலை
- படர்கை
- பெயர்ச்சொல்லில் இடப்பாகுபாடு வெளிப்படாது
- அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிடு பெயர்களிலும் வினைமுற்றுகளிலுமே வெளிப்படும்.
- தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மைபாகுபாடு உனடே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.
தன்மைப் பன்மை
- தன்மைப் பன்மை இரு வகைப்படும். அவை,
-
- உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
- உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
-
- பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது = உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்
-
- நாம் முயற்சி செய்வோம்
-
- பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது = உளப்படுத்தாத் தன்மைப் பன்மை எனப்படும்
-
- நாங்கள் முயற்சி செய்வோம்
-
- 12 TAMIL – முதல்கல்
- 12 TAMIL – நெடுநல்வாடை
- 12 TAMIL – பிறகொரு நாள் கோடை
- 12 TAMIL – பெருமழைக்காலம்
- 12 TAMIL – வசன நடை கைவந்த வள்ளலார்
- TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR