12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்

12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்

12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்
12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்

12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்

  • ஒரு மொழியின் எழுத்துக்களிலோ, சொல் அமைப்பிலோ தொடர் அமைப்பிலோ சொற்பொருள் அமைப்பிலோ காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும்.
  • மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.

மொழியின் அடிப்படை பண்புகள்

  • மொழியின் அடிப்படை பண்புகள் நான்கு, அவை
      1. திணை
      2. பால்
      3. எண்
      4. இடம்
  • தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
  • எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகின்றன.

எழுவாய்

  • பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றை சொல்லலாம்.
      • முருகன் நூலகம் சென்றான்
  • இத்தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துவிடுகிறது.

தினைப் பாகுபாடு

  • உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச்சொற்களே அதிகம்.
  • பெயர்ச்சொற்கள் இரு வகைப்படும். அவை,
      1. உயர்திணைப் பெயர்
      2. அஃறினைப் பெயர்
  • தமிழில் இருதிணைப் பாகுபாடு அமைய அடிப்படையாக இருப்பது = பொருட்குறிப்பு ஆகும்
  • இதனை,

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறினை என்மனார் அவரல பிறவே

–    தொல்காப்பியம்

  • தமிழில் யார்? எது? போன்ற வினாச்சொற்களைப் பயனிலையை அமைத்துத் திணை வேறுபாடு அறியப்படுகிறது.

இருதிணை பொது பெயர்கள்

  • இருதிணைக்கும் பொதுவான பெயர்களும் உள்ளன,
      • குழந்தை சிரித்தான் – குழந்தை சிரித்தது
      • கதிரவன் உதித்தான் – கதிரவன் உதித்தது
  • இப்பெயர்கள் எழுவாயாக அமையும் பொது அவற்றின் வினைமுடிபு இருதிணை பெற்றும் வருகின்றது.
12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்
12 TAMIL நால்வகைப் பொருத்தங்கள்

பால் பாகுபாடு

  • தமிழில் பால்பகுபு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
  • தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்கை இடத்தில் வரும்.
  • பால்பகுப்பை காட்டும் பயனிலை விகுதிகள் = ஆண், ஆள், ஆர், அது, அன்

எண் பாகுபாடு

  • இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுது பெற்று வருகின்றன.
      • இரண்டு மனிதர்கள்
  • அஃறினைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை.
  • தற்காலத் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் காணப்படுகிற ஒருமை-பன்மை பற்றிய குழப்பன்களுள் ஒன்று = “ஒவ்வொரு” என்ற சொல்லாகும்

இடப்பாகுபாடு

  • இடம் 3 வகைப்படும். அவை,
    1. தன்மை
    2. முன்னிலை
    3. படர்கை
  • பெயர்ச்சொல்லில் இடப்பாகுபாடு வெளிப்படாது
  • அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிடு பெயர்களிலும் வினைமுற்றுகளிலுமே வெளிப்படும்.
  • தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மைபாகுபாடு உனடே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.

தன்மைப் பன்மை

  • தன்மைப் பன்மை இரு வகைப்படும். அவை,
      1. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
      2. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
  • பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது = உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்
      • நாம் முயற்சி செய்வோம்
  • பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது = உளப்படுத்தாத் தன்மைப் பன்மை எனப்படும்
      • நாங்கள் முயற்சி செய்வோம்

 

 

Leave a Reply