12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

  • பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற இந்த தலைப்பு, “உயிர்மீட்சி” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சாவின் “இலக்கியக் கட்டுரைகளில்” இருந்து எடுக்கப்பட்டது.
  • சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சி.டி.முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக 20.07.1936 இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936 சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை இது.

திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும்

  • “இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை” நூலின் ஆசிரியர் = பேராசிரியர் அ.கா.பெருமாள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

பா.சுப்பிரமணியனார்

மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான இவர், திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர்
மா. இராசமாணிக்கனார்

இவர் மௌனகுருவிடம் கல்வி கற்றவர்

பின்னத்தூர் நாராயணசாமி

நற்றிணை நூலின் உரையாசிரியர்

பின்னத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றவர்

நாவலர் சோமசுந்தர பாரதி

சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர்

வழக்கறிஞர், தமிழறிஞர்

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார்

வேகடசாமி

சிலப்பதிகார உரையாசிரியர்

வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் பயின்றவர்

வ.சுப. மாணிக்கம்

மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர்

மகிபாலன் பட்டி நடேவ்சனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றவர்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

மன்றங்கள்

  • ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே அமைக்கப்பட்டிருக்கும் மேடை = அம்பலம், மன்றம்
  • மன்றமென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே; அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது

பள்ளிகள்

  • பள்ளி = பள்ளி என்னும் சொல் ஜைன மடங்களுக்கும், பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர் ஆகியது.

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

வித்தியாரம்பம் என்றால் என்ன

  • முதன் முதலில் “வித்தியாப்பியாசம்” செய்யும் வயது = 5 (ஐந்து)
  • முறை வைத்தல் = ஆசிரியர் சொல்லிக்கொடுக்க அதை மாணவர்கள் அப்படியே சொல்வது
  • வரி எழுத்தின் உறுப்புகள் = புள்ளி, கால், கொம்பு, விலங்கு

மையாடல் என்றால் என்ன

  • மை = வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு, ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி ஆகியவை சேர்த்து உருவாக்கப்படும்
  • அக்ஷராப்பியாசம் = மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதானால் அக்ஷராப்பியாசத்தை “மையாடல் விழா” என்பர்

ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்

                -சிந்தாமணி

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்

                -தமிழ் விடு தூது

பிரபவாதி சுவடி என்பது யாது

  • மாணவர்கள் கணிதத்தில் = கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்ப்புகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்ய வேண்டும்
  • இதற்காக “பிரபவாதி சுவடி” என்ற புத்தகம் பயன்பாட்டில் இருந்தது.

நாராசம் என்றால் என்ன

  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். அதற்கு “நாராசம்” என்று பெயர்.
  • கிளிமூக்கு = சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈரக்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குத் “கிளிமூக்கு” என்று பெயர்.

எழுத்தாணியின் வகைகள்

  • எழுத்தாயிணியின் வகைகள் = 3 (மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி)
  • மடக்கெழுத்தாணி = ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ளது.

சட்டம், தூக்கு

  • ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். அதற்கு “சட்டம்” என்று பெயர்
  • தூக்கு (அசை) = சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு தூக்கு என்று பெயர். இதற்கு ’அசை’ என்றும் சொல்வதுண்டு.
  • 12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

வாதம் புரிதல்

  • மிகச்சிறந்த நூல் பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். இதனை “மதுரைக்காஞ்சி” நூல் கூறுகிறது.

வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும்

                  -நன்னூல்

வேத்தான் என்பவர் யார்

  • பள்ளிக்கூடத்திற்கு காலையில் 5 மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவர். முதலில் வருபவனை “வேத்தான்” என்று அழைப்பர். இதன் பொருள், “மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன்”

ஓதற்பிரிவு என்றால் என்ன

  • தொல்காப்பியத்தில் “இங்ஙனம் பிரியுங் காலம் ஓதற் பிரிவென்று” கூறப்பட்டுள்ளது.
  • இதற்கு 3 வருஷம் கால அளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ஓதற்பிரிவுக்குரிய கால வரையறை எத்தனை ஆண்டுகள்? = மூன்றாண்டுகள்

உ வெ சா – ஆசிரியர் குறிப்பு

  • உ.வே.சா, “தமிழ்த் தாத்தா” என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஆவார்.
  • பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
  • இவர் பெற்ற பட்டங்கள் = மகாமாகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரயர் பணி
  • 1932 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தினால் “டாக்டர்” பட்டம் பெற்றார்
  • அவரின் திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது
  • சென்னை திருவான்மியூரில் உ.வே.சா நூல் நிலையம் அமைந்துள்ளது.
"உ.வே.சா பற்றி மேலும் அறிந்துக்
கொள்ள இங்கே கிளிக் செய்யவும்"

 

Leave a Reply