12TH TAMIL கம்பராமாயணம்

12TH TAMIL கம்பராமாயணம்

12TH TAMIL கம்பராமாயணம்
12TH TAMIL கம்பராமாயணம்

12TH TAMIL கம்பராமாயணம்

  • கம்பராமாயணம் பல்வேறு விதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டது ஆகும்.
  • இராமன் அணைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பு உள்ளவர்.
  • இங்கு அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யூத காண்டம் ஆகியவற்றில் இருந்து குகன், சடாயு, சவாரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • இந்நூலை இயற்றியவர் கம்பர்.
  • இந்நூலிற்கு அவர் இட்ட பெயர் “இராமாவதாரம்” ஆகும்.
  • கம்பனது கவினலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என அழைக்கப்படுகிறது.
  • கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.
  • எழுதப்பட்ட காலம் தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குத் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம் ஆகும்.

குகன்

  • வேடுவர் தலைவன் குகன். இவன் பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன்.
  • ராமனுக்கு கங்கையை கடக்க உதவியவன்
  • இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டான்.
  • பரதனும் “எனக்கும் மூத்தோன்” என்று குகனை ஏற்றுக் கொண்டான்.
  • இராமன் குகனை தந்து தம்பியாக ஏற்றுக்கொண்டார்.
  • இதுவரை நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர் என்றிருந்தோம். இனி உன்னுடன் சேர்ந்து நாம் ஐவர் என்று இராமன் கூறினார்

சடாயு

  • கழுகு வேந்தன் சடாயு.
  • இராமனின் தந்தையின் (தசரதன் / தயரதன்) நண்பர் ஆவார்
  • இராவணன் சீதையை சிறையுடுது சென்ற பொழுது சண்டையிட்டவன்
  • இராமன், ஒரு மகனாக கருதி அவருக்கு இறுதி சடங்கு செய்தார்

சவரி

  • இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் = சவரி
  • சுக்ரீவனிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள இராமனுக்கு கூறியவள் இவள்
  • இராமன் சவரியை தாக கருதினார்
  • இக்காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்கியவள் = சவரி

சுக்ரீவன்

  • சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான் இராமன்
  • வானரத் தலைவன் = சுக்ரீவன்
  • வாலியின் அண்ணன் இவன்
  • இராமனுடன் சேர்ந்து 6-வதாக சகோதராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் = சுக்ரீவன்
  • மேருமலையை சுற்றி வரும் கதிரவனின் மகன் = சுக்ரீவன்
  • குன்று சூழ்வான் மகன் = சுக்ரீவன்
  • இரவி ஒத்தார் =  சுக்ரீவன்

வீடணன்

  • சீதையை கவர்ந்து வந்தது தவறு என இராவணனுக்கு கூறியவன் = வீடணன்
  • இலங்கையை விட்டு வெளியே வந்து, இராமனிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டான்.
  • இராமனுடன் சேர்ந்து 7-வதாக சகோதராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் = வீடணன்

கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • குகப்படலம் இடம் பெரும் காண்டம் = அயோத்தியா காண்டம்
  • சடாயு உயிர் நீத்த படலம் இடம் பெற்ற காண்டம் = ஆரண்ய காண்டம்
  • சவரி பிறப்பு நீங்கு படலம் இடம் பெற்ற காண்டம் = ஆரண்ய காண்டம்
  • நட்பு கோட்படலம் இடம் பெற்றுள்ள காண்டம் = கிட்கிந்தா காண்டம்
  • வீடணன் அடைக்கலப் படலம் இடம் பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்
  • கம்பராமாயணக் காப்பியம் ஒரு வழி நூல் ஆகும்

அருஞ்சொற்பொருள்

  • அமலன் =  இராமன்
  • அனகன் =  இராமன்
  • உடுபதி =  இராமன்
  • அன்னவன் =  இராமன்
  • ஆழியான் =  இராமன்
  • ஒரு மூலம் இல்லான் =  இராமன்
  • இரவி ஒத்தார் =  சுக்ரீவன்
  • இளவல் =  தம்பி
  • நளீர்கடல் =  குளிர்ந்த கடல்
  • துன்பு =  துன்பம்
  • உன்னேல் =  எண்ணாதே
  • உவா =  அம்மாவாசை
  • உடுபதி =  சந்திரன்
  • செற்றார் =  பகைவர்
  • கிளை =  உறவினர்
  • இந்தனம் =  விறகு

இலக்கணக் குறிப்பு

  • உளது =  இடைக்குறை
  • மாதவம் =  உரிச்சொற்றொடர்
  • தடக்கையான் =  உரிச்சொற்றொடர்
  • தாழ்கடல் =  வினைத்தொகை
  • செற்றவர் =  வினையாலணையும் பெயர்
  • நுந்தை =  நும் தந்தை என்பதன் மரூஉ
  • என்னுயிர் =  ஆறாம் வேற்றுமைத்தொகை
  • உன்னா அன்பு = ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • குவித்து, திருத்தி, இயற்றி, எடுத்து = வினையெச்சம்
  • கிளை =  உவம ஆகுபெயர்

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • கம்பர், கம்ப நாடர், கம்ப நாடுடையார், கம்பத்தின் அடியில் பிறந்தவர், கம்பிக் கையிலே தாங்கியவர், கம்பங் கொல்லையைக் காத்தவர் போன்ற காரணங்களால் இப்பெயர் அமைந்தது என்பர். சிலர் இயற்பெயரே என்பர்
  • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
  • தந்தை = ஆதித்தர்
  • மரபு = உவச்சர் மரபு
  • ஆதரித்தவர் = திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப் வள்ளல்
  • காலம் = 2-ஆம் குலோத்துங்கனும் அவனது மகனும் வாழ்ந்த 12 ஆம் நூற்றாண்டு
  • சமகாலப் புலவர் = புகழேந்தி, ஒட்டக்கூத்தர்
  • அரங்கேற்றம் = இந்நூல் திருவரங்கத்தில் அரங்கேறியது

கம்பராமாயணம் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply