12 TAMIL தமிழர் குடும்ப முறை

12 TAMIL தமிழர் குடும்ப முறை

12 TAMIL தமிழர் குடும்ப முறை
12 TAMIL தமிழர் குடும்ப முறை

12 TAMIL தமிழர் குடும்ப முறை

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
  • குடும்பம் -> குளம் -> கூட்டம் -> பெருங்குழு -> சமூகம் என்று அமைப்பு விரிகிறது
  • சமூகத்தின் அடிப்படை அலகு = குடும்பம் ஆகும்

குடும்பம்

  • குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை = திருமணம்
  • குடும்பம், திருமணம் = ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகின்றன
  • குறிப்பு:
    1. “திருமணம்”, “குடும்பம்” = இவ்விரு வார்த்தைகளும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெறவில்லை
    2. “குடும்பம்” எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் (குறள் – 1029, இயல் – குடியியல், அதிகாரம் – குடிசெயல் வகை) தான் பயின்று வருகிறது
  • சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் = குடம்பை, குடும்பு, கடும்பு
  • “குடம்பை” = என்ற சொல் 20 இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது
  • “குடும்பு” = என்பதன் பொருள் “கூடி வாழ்தல்” ஆகும்
  • குடும்பு எனும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக (Semantic Extension) “குடும்பம்” எனும் சொல் அமைந்தது
  • தொல்காப்பியரின் பொருளியல் நூற்பாவில் “இல்”, “மனை” ஆகிய இரண்டு வாழிடங்கள் குறிப்பிடப்படுகிறது

இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

மனையோர் கிழவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலை யான

                       –    தொல்காப்பிய பொருளியல் – 129

வாழிடம்

  • சங்க இலக்கியத்தில் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளை கூறும் சொற்கள் = இல்லை, மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்
  • மருதத்தினைப் பாடல் ஒன்றில் மகளிர் “தம்மனை”, “நும்மனை” (அகம். 346 : 16 – 17) என மனைவியின் இல்லத்தையும், கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினை காண முடிகிறது
    1. புக்கில் =  தற்காலிகத் தங்குமிடம் (புறம் 221-6)
    2. தன்மனை =  திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம்
    3. நும்மனை =   கணவனின் இல்லம்
    4. “மனை” எனும் சொல் நம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை எனச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது
    5. “மனையோள்” = சங்கப்பாடலில் பயின்று வரும் சொல்லாகும்
    6. வாழிடத்தை குறிக்கும் முதன்மைச் சொல் = மனை
12 TAMIL தமிழர் குடும்ப முறை
12 TAMIL தமிழர் குடும்ப முறை

மணந்தகம்

  • குடும்பத்தின் தொடக்கம் = திருமணம்
  • மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே = மணந்தகம் (Family of Procreation)
    • முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது
    • தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது
  • இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி “செவிலிக்குரியது” என்று கூறுகிறது தொல்காப்பியம்

தாய்வழிக் குடும்பம்

  • சங்ககாலத்தில் கண சமுகத்திற்கு தலைமை ஏற்றது = தாயே
  • தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது
  • பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
12 TAMIL தமிழர் குடும்ப முறை
12 TAMIL தமிழர் குடும்ப முறை
  • சங்க இலக்கிய தொடர்களில் “அவளது மகன்” என்றே குறிக்கப்பட்டுள்ளது. “அவனது மகன்” என்று கூறப்படவில்லை

தாயமுறை

  • சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது
  • திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது
  • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.குறுந்தொகையில் உள்ள மருதத்திணை பாடலான 295 பாடல், “தாய்வழிச் சொத்துக்கள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன” என்பதை தெளிவாக கூறுகிறது

தந்தைவழிக் குடும்பம்

  • ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் (Patrilocal) வாழ வேண்டும்.
  • தலைவி, தலைவனின் இல்லத்திற்கு அழைத்து வந்த பொது தலைவனின் தாய் அவளுக்குச் “சிலம்புகழி” செய்திருக்கிறாள்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எம்மனை வதுவை நல்மணம் கழிக

                        –    ஐங்குறுநூறு 399 : 1-2

  • இதன்வழி மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே

                          –    குறுந்தொகை 135

தனிக்குடும்பம்

  • தனிக்குடும்பம் (Nuclear Family) தோன்றுவதற்கான தொடக்கநிலை பற்றி சங்க இலக்கியங்கள் கூறியுள்ளன
  • “இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை” பற்றி கூறுவது = ஐங்குறுநூறு
  • “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர் என ஐங்குறுநூறு (401) கூறுகிறது
  • தனிக்குடும்ப வகை, சமூக படிமலர்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்றாகும்.

விரிந்த குடும்பம்

  • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப” (Extended Family) முறையும் காண முடிகிறது.
  • கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப (Lineally Extended Family) முறையை கூறியவர் = ஒக்கூர் மாசாத்தியார் (புறநானூறு பாடல் 279)
12 TAMIL தமிழர் குடும்ப முறை
12 TAMIL தமிழர் குடும்ப முறை

குடும்ப உறுப்பினர்கள்

  • நற்றாய் (பெற்றத் தாய்)
  • செவிலித்தாய்
  • செவிலித்தாயின் மகள் (தோழி)
  • சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாக சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது

பக்தவத்சல பாரதி

  • “தமிழர் குடும்ப முறை” என்னும் இப்பனுவல், இதழில் வெளிவாத கட்டுரையின் சுருக்கம் ஆகும்
  • இதனை எழுதியவர் = பக்தவத்சல பாரதி
  • இவர் தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை இவர் முன்னெடுத்து வருகிறார்
  • பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது ஆகும்
  • இவரின் நூல்கள் = இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு
  • ஆசிரியர் பக்தவத்சல பாரதி பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply