12 TAMIL மதராசப்பட்டினம்
12 TAMIL மதராசப்பட்டினம்
- இந்தியாவில் 3 நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரமே மதராசப்பட்டினம்
- அது, இன்று பரபரப்பான சென்னை மாநகரமாக வளர்ந்துள்ளது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் ஒரு காட்டுமரம் போல் வளர்ந்து வருகிறது.
நகரங்கள்
- சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானது = நகரங்கள்
- சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும், நிகழ்கால வாழ்விற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் துணை நிற்பவை = நகரங்கள்
தென்னிந்தியாவின் நுழைவாயில்
- “தென்னிந்தியாவின் நுழைவாயில்” எனப்படும் நகரம் = சென்னை நகரம்
- சென்னை நகரம், தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் ஆகும்.
சென்னையின் தொன்மை
- சென்னைக்கு அருகேயுள்ள “குதியம், அத்திரப்பாக்கம்” போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி, அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என நிறுவுகிறது.
- அங்கு ஓடக்கூடிய “கொற்றலையாற்றுப் படுகை”, மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்றாகும்.
- “பல்லாவரத்தில்” கண்டுபிடிக்கப்பட்ட “கல் கோடரி”, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
- இன்று சென்னையில் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த “தாலமி” என்பவரால் “மல்லியர்பா” என்ற துறைமுக நகராக சுட்டப்பட்டுள்ளது.
கோயில்கள், கல்வெட்டுகள்
- பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை கோவில், முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது.
- சென்னையில் கிடைத்த கல்வெட்டுகளிலே மிகவும் பழமையானது = குடைவரை கோவில் கல்வெட்டு ஆகும்
- திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டும் பல்லவர் ஆட்சியில் இப்பகுதி சிறந்து விளங்கியதை காட்டுகிறது.
வள்ளல் பச்சையப்பர்
- வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது
பாரதிதாசனின் “மாவலிபுரச் செலவு”
- பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார்.
- அதனை அவர் தனது “மாவலிபுரச் செலவு” என்னும் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்
சென்னப்பட்டினம்
- கி.பி. 1647 இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டைமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை கூறுகிறது.
பிரான்சிஸ் டே
- மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் “பிரான்சிஸ் டே” ஆங்கிலேயே குடியேற்றத்துக்கான இடமாக தேர்வு செய்தார்.
- கூவம் ஆற்றினை “திருவல்லிக்கேணி ஆறு” என்று அழைத்தனர்
- விஜயநகர ஆட்சியின் உள்ளூர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடம் இருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.
மதராசப்பட்டினம் வரலாறு
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ள வீடுகள் இருந்த பகுதி = வெள்ளையர் நகரம் (WHITE’S TOWN)
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே இருந்த பகுதி = கறுப்பர் நகரம் (BLACK’S TOWN)
- இவ்விரு பகுதிகள் இணைந்த பகுதியே = மதராசப்பட்டினம்
- கிழக்கிந்திய நிறுவனம் பெருபான்மையாக செய்த வணிகம் = துணி வணிகம்
- வடசென்னைப் பகுதிகளை “மதராசப்பட்டினம்” என்றும்
- தென்சென்னைப் பகுதிகளை “சென்னைப்பட்டினம்” என்றும் அழைத்தனர்
- ஆங்கிலேயர்கள் இரண்டையும் இணைத்து “மதராஸ்” என்று அழைத்தனர்
சென்னை நகராட்சி
- 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மதராஸ் நகரின் மக்கள்தொகை = 19000
- மதராஸ் நகரம் “நகராட்சியாக” உருவக்கப்பட்ட ஆண்டு = 1688
தாமஸ் பிட்
- மதராஸ் (சென்னை) மாகாணத்தின் முதல் தலைவர் = எலி யேல் (ELIHU YALE)
- அவரை தொடர்ந்து தலைவர் ஆனவர் = தாமஸ் பிட் (THOMAS PITT)
- “தாமஸ் பிட்டின்” ஆட்சிக்காலத்தை சென்னை நகரின் “பொற்காலம்” என்பர்
அறிவின் நகரம்
- 1715 இல் உருவான “புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி” ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
- சென்னைக் கோட்டை கல்லூரி உருவாக்கம் = 1812
- சென்னை கிறித்துவக் கல்லூரி உருவாக்கம் = 1837
- பிரெசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) உருவாக்கம் = 1840
- சென்னைப் பல்கலைக்கழகம் உருவான் ஆண்டு = 1857
- பெண்களுக்கு என்று தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி = 1914
- ஆங்கிலேயர் உதவி இன்றி இந்தியர் ஒருவரால் கல்வி நிறுவனம் = பச்சையப்பன் கல்லூரி
தமிழ்நாடு ஆவணக் காப்பகம்
- ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ்” கட்டிடம் அமைக்கப்பட்ட முறை = இந்தோ – சாரசனிக் கட்டிட முறை
- இது தற்போது “தமிழ்நாடு ஆவணக் காப்பகம்” என்று அழைக்கப்படுகிறது.
அருங்காட்சியகம்
- தென்னிந்திய வரலாற்றை அறிந்து உதவும் அருங்காட்சியகங்கள்,
- எழும்பூர் அருங்காட்சியகம்
- கோட்டை அருங்காட்சியகம்
போக்குவரத்து
- அண்ணாசாலைக்கு (மவுன்ட்ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை = பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை
- தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டது = 1856 இல் இராயபுரத்தில்
சென்னையின் நீர்நிலைகளும், வடிகால்களும்
- வட சென்னைக்கு = கொற்றலையாறு
- மத்திய சென்னைக்கு = கூவம்
- தென்சென்னைக்கு = அடையாறு, அதற்கும் கீழே பாலாறு
- இந்த4 ஆறுகளையும் இணைக்கக்கூடிய கால்வாய் = பக்கிங்காம் கால்வாய்
- சென்னை நகரில் இருந்த வடிகால்கள் = 18 பெரிய ஓடைகள் மற்றும் 540க்கும் மேற்பட்ட வடிகால்கள்
இந்தோ – சாரசனிக் கட்டிடக்கலை
- இந்தோ – சாரசனிக் கட்டிடக்கலை = 3 கட்டிடக்கலைகளின் கூட்டுக்கலை ஆகும். அவை,
- முகலாயக் கட்டிடக்கலை
- பிரித்தானியக் கட்டிடக்கலை
- இந்திய பாரம்பரிய பாணி
- இந்தோ – சாரசனிக் கட்டிடக்களியில் சென்னையில் கட்டப்பட்ட முதல் கட்டிடம் = சேப்பாக்கம் அரண்மனை (1768)
- இக்கலை முறையில் கட்டப்பட்டு சென்னையின் அடையாளங்களாக உள்ள கட்டிடங்கள்,
- மத்திய தொடர்வண்டி நிலையம்
- தென்னகத் தொடர்வண்டி நிலையம்
- எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
- பொது அஞ்சல் அலுவலகம்
- உயர்நீதிமேன்ரம்
- சென்னைப் பல்கலைக்கழகம்
- ரிப்பன் கட்டடம்
- விக்டோரியா அரங்கு
சென்னை நூலகங்கள்
சென்னை இலக்கியச் சங்கம் |
|
|
|
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் |
|
அண்ணா நூற்றாண்டு நூலகம் |
|
தமிழாய்வு நூலகங்கள் |
|
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- 12 TAMIL மதராசப்பட்டினம்
- 12 TAMIL மதராசப்பட்டினம்
- 12 TAMIL மதராசப்பட்டினம்
- 12 TAMIL மதராசப்பட்டினம்
- 12 TAMIL மதராசப்பட்டினம்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- 12 TAMIL மதராசப்பட்டினம்