6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

Table of Contents

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

வேதகாலம் என்றால் என்ன

  • ஆரியர்களின் வருகையால் துவங்கிய காலம் = வேதகாலம்.
  • வேதகாலம் என்பது கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600 வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும்.
  • வேதங்கள்” என்ற வார்த்தையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது.

ஆரியர்கள் என்போர் யார்

  • ஆரியர்கள் பேசிய மொழி = இந்தோ ஆரிய மொழி.
  • ஆரியர்களின் முதன்மைத் தொழில் = கால்நடை மேய்த்தல்.
  • ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் = மத்திய ஆசியாவில் இருந்து, இந்துகுஷ் மலையின் “கைபர் கணவாய்” வழியாக இந்தியா வந்தனர்.
  • ஆரியர்களின் பின்பற்றிய வேளாண்மை முறை = அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை (slash and burn agriculture).

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை என்றால் என்ன

  • நிலத்தில் உள்ள மரம், செடி மற்றும் கொடிகளை வெட்டி எரித்து, அந்நிலத்தின் மீது சாகுபாடி செய்யும் முறை.
  • வேளாண்மை முடித்த பிறகு அந்நிலம் கைவிடப்பட்டு வேறொரு நிலத்தில் சாகுபடி செய்வர்.

வேதகாலத்தின் காலம், பரப்பு, சான்றுகள்

  • வேதகாலத்தின் புவியியல் பரப்பு = வடஇந்தியா
  • வேதகாலத்தின் காலம் = இரும்புக்காலம்
  • வேதகாலத்தின் கால அளவு = கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600
  • வேதகால சான்றுகள் = வேதகால இலக்கியங்கள்
  • வேதகால நாகரிகத்தின் இயல்பு = கிராம நாகரிகம்.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

  • வேதகாலம் இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    1. தொடக்க வேதகாலம் அல்லது ரிக் வேதகாலம் = கி.மு (பொ.ஆ.மு) 1500 – 1000 வரை
    2. பிந்தைய வேதகாலம் = கி.மு (பொ.ஆ.மு) 1000 – 600 வரை

ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்

  • ரிக்வேதகால ஆரியர்கள் = நாடோடிகள்.
  • ரிக்வேதகால ஆரியர்களின் முக்கிய சொத்து = கால்நடைகள்.
  • ரிக்வேதகால ஆரியர்களின் வாழ்விடம் = பஞ்சாப் (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி எனப் பொருள்படும் “சப்த சிந்து” பகுதி).
  • கி.மு (பொ.ஆ.மு) 1000 காலக்கட்டத்தில் ஆரியர்கள் கங்கைச் சமவெளி பகுதி நோக்கி குடியேறினர்.
  • இரும்புக் கோடரி, இரும்பினால் ஆன கலப்பையை பயன்படுத்தினர்.

வேதகால இலக்கியங்கள்

  • வேதகால இலக்கியங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    1. சுருதிகள் = நான்கு வேதங்கள் + பிராமணங்கள் + ஆரண்யங்கள் + உபநிடந்தங்கள்.
    2. ஸ்மிருதிகள் = இதிகாசங்கள் + புராணங்கள் + ஆகமங்கள் + தாந்தரீகங்கள் + சூத்திரங்கள்.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

சுருதிகள் என்றால் என்ன

  • சுருதிகள் என்பது = புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்க முடியாத உண்மைகள் என்று பொருள்.
  • சுருதிகள் யாவை = நான்கு வேதங்கள் + பிராமணங்கள் + ஆரண்யங்கள் + உபநிடந்தங்கள்
  • சுருதி என்பதன் பொருள் = கேட்டல் (அல்லது எழுதப்படாதது).
  • வாய்மொழியாக அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவது = சுருதிகள் ஆகும்.

ஸ்மிருதிகள் என்றால் என்ன

  • ஸ்ம்ரிதிகள் நிலையானவை அல்ல. தொடர்ந்து மாற்றம் பெறுவது ஆகும்.
  • ஸ்ம்ரிதிகள் = இதிகாசங்கள் + புராணங்கள் + ஆகமங்கள் + தாந்தரீகங்கள் + சூத்திரங்கள்.
  • மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல் = ஸ்ம்ரிதி.
  • ஸ்ம்ரிதி என்பதன் பொருள் = இறுதியாக எழுதப்பட்ட பிரதி.

சத்யமேவ ஜெயதே

  • “சத்யமேவ ஜெயதே” என்ற சொல் எங்கிருந்து எடுக்கப்பட்டது = முண்டக உபநிடதம்.
  • “சத்யமேவ ஜெயதே” என்ற சொல்லின் பொருள் = வாய்மையே வெல்லும்.

ரிக் வேதகால அரசியல்

  • ரிக்வேதகால அரசியலின் அடிப்படை = ரத்த உறவுகள் அடிப்படையானது.
  • ரிக்வேதகால அரசியலின் அடிப்படை அலகு = குலம் (clan).
  • ரிக்வேதகால “குலத்தின்” தலைவர் = குலபதி.
  • கிராமத்தின் தலைவர் = கிராமணி.
  • பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு = விஸ் (குலம்)
  • விஸ் தொகுப்பின் தலைவர் = விசயபதி.
  • “ஜனா” எனப்படும் இனக்குழுவின் தலைவர் = ராஜன்.
  • இனக்குழுவின் தலைவரான ராஜனை, “ஜனஸ்யகோபா” (மக்களின் பாதுகாவலர்) என்று அழைப்பர்.
  • ரிக் வேத காலத்தில் பரதர், மத்யசர், புரு போன்ற பல்வேறு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன.

வேதகால சபா சமிதி

  • அரசரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள் = விதாதா, சபா, சமிதி, கணா.
  • ரிக்வேதகாலத்தில் மிகப்பழமையான இனக்குழுவின் பொதுக்குழு எது = விதாதா.
  • விதாதா = இனக்குழுவின் பொதுக்குழு
  • சபா = மூத்தோர்களைக் கொண்ட மன்றம்
  • சமிதி = மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.

ரிக் வேதகால அரசர்கள்

  • அரசருக்கு உதவி செய்பவர் = புரோகிதர் (தலைமை குரு)
  • அரசியல், பொருளாதாரம், ராணுவம் போன்ற விசயங்களில் அரசருக்கு உதவுபவர் = சேனானி (படைத்தளபதி).
  • அரசர்கள் தங்களது நிலையை வலுப்படுத்திக் கொள்ள பல “சடங்குகளையும், யாகங்களையும்” நடத்தினர்.
  • பல்வேறு ஜனாக்கள் (அல்லது) இனக்குழுக்கள் சேர்ந்து உருவானது = ஜனபதங்கள் (ராஷ்டிரங்கள்).
  • சபா, சமிதி ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்த காலம் = பிந்தைய வேதகாலம்.
  • பிந்தைய வேதகாலத்தில் இல்லாமலே போன மன்றம் = விதாதா.

பாலி என்பதன் பொருள்

  • அரசனுக்கு, மக்களே தாமாக முன்வந்து கொடுத்த காணிக்கை = பாலி (bali).
  • பிந்தைய வேதகாலத்தில் “பாலி”, ஒரு வரியாக மாற்றம் பெற்று முறையாக வசூலிக்கப்பட்டது.
  • இது ஒரு வரி ஆகும்.
  • தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை வரியாக செலுத்த வேண்டும்.

வேதகால சமூக அமைப்பு

  • ரிக்வேதகால சமூக அமைப்பு = தந்தை வழி சமூக அமைப்பு.
  • வெள்ளை நிற தோல் கொண்ட ஆரியர்கள், கருப்பு நிற தோல் கொண்ட ஆரியர் அல்லாத மக்களை “தசயுக்கள், தாசர்கள்” என்று அழைத்தனர்.
  • தொடக்க வேத காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகள் = மூன்று பிரிவுகள் (treyi). அவை,
    1. விஸ் எனப்படும் பொதுமக்கள்
    2. சத்ரியர்கள் (போர் வீரர்கள்)
    3. பிராமணர்கள் (மதகுருமார்கள்)
  • பிந்தைய வேத காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகள் = நான்கு பிரிவுகள் (வர்ணாஸ்ரம முறை). அவை,
    1. பிராமண மதகுருக்கள்
    2. சத்திரிய போர் வீரர்கள்
    3. வைசியர்கள் (நில உடமையாளர்கள்)
    4. சூத்திரர் (வேலை செய்பவர்கள்)

ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை

  • பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது.
  • குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் இல்லை.
  • கைம்பெண்கள் மறுமணம் செய்துக்கொள்ள தடைகள் இல்லை.
  • ஆனால் பெற்றோர்களின் சொத்தில் உரிமை வழங்கப்படவில்லை.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

பிந்தைய வேதகாலத்தில் பெண்களின் நிலை

  • சமூகம், குடும்பம் ஆகிய இரண்டிலும் பெண்களின் நிலை குறைந்தது.
  • பலதார மணம் அதிகளவில் நடைபெற்றது.
  • கைம்பெண் மறுமணம் ஊக்கப்படுத்தப்படவில்லை.
  • கல்வி மறுக்கப்பட்டது.
  • கலப்புத் திருமணம் ஆதரிக்கப்படவில்லை.

ரிக் வேதகால பொருளாதாரம்

  • கால்நடை மேய்ச்சல் முக்கிய தொழில் ஆகும்.
  • “பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள்” எக்காலத்தை சேர்ந்தவை? = ரிக் வேதகாலத்தை சேர்ந்தவை.
  • நதிப்பகுதிகளில் குடியேறிய பிறகு வேளாண்மை செய்தனர்.
  • ரிக் வேதகாலத்தில் முதன்மை பயிராக இருந்தது = யவா (பார்லி)
  • சிந்த்வெளி மக்கள் பயிரிட்ட “கோதுமை, பருத்தி” பற்றிய குறிப்புகள் ரிக்வேத காலத்தில் இல்லை.

பிந்தைய வேதகாலத்தில் பொருளாதாரம்

  • யானைகளை பழக்கப்படுத்தத் துவங்கினர்.
  • “சாம்பல் நிற மட்பாண்ட பண்பாடு” எக்காலத்தை சேர்ந்தது? = பிந்தைய வேதகாலம்.
  • பிந்தைய வேதகாலத்தில் பயிரிடப்பட்டவை = நெல், கோதுமை, பார்லி.
  • பண்டமாற்றுமுறை புழக்கத்தில் இருந்தது.
  • பிந்தைய வேதகாலத்தில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயங்கள் = நிஷ்கா, சத்மனா.
  • பிந்தைய வேதகாலத்தில் புழக்கத்தில் இருந்த வெள்ளி நாணயம் = கிருஷ்ணாலா.

ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்

  • ஹிரண்யா எனப்படும் “தங்கம்”.
  • சியாமா எனப்படும் “இரும்பு”.
  • அயாஸ் எனப்படும் “தாமிரம் / செம்பு”.

ரிக் வேதகாலக் கடவுள்கள்

  • நிலம் மற்றும் ஆகாய கடவுள்களை வணங்கினர்.
  • ரிக் வேதகால நிலக்கடவுள் = பிருத்வி.
  • ரிக் வேதகால நெருப்புக் கடவுள் = அக்னி.
  • ரிக் வேதகால காற்றுக் கடவுள் = வாயு.
  • ரிக் வேதகால மழைக் கடவுள் = வருணன்.
  • ரிக் வேதகால இடி கடவுள் = இந்திரன்.
  • ரிக் வேதகால மதம் = சடங்குகளை மையமாகக் கொண்டது.
  • குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) = ஆகியவற்றின் நலனுக்காக தெய்வங்களை வணங்கினர்.
  • ரிக் வேதகால புனிதமான விலங்கு = பசு.
  • ரிக் வேதகாலத்தில் கோவில்களும், சிலை வழிபாடும் இல்லை.

ரிக் வேதகால பெண் தெய்வங்கள்

  • அதிதி = நித்தியக் கடவுள்.
  • உஷா = விடியற்காலை தோற்றம்.

பிந்தைய வேதகால மதம்

  • இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர்.
  • பிந்தைய வேதகால முக்கியக் கடவுள்கள்,
    1. பிரஜாபதி = படைப்பவர்.
    2. விஷ்ணு = காப்பவர்.
    3. ருத்ரன் = அழிப்பவர்.
  • வேள்விகள், சடங்குகள் முக்கியத்துவம் பெற்றது.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

குருகுலக் கல்வி முறை

  • பழங்கால கற்றல் முறை = குருகுலக் கற்றல் முறை.
  • குருகுலம் என்பது குரு மற்றும் குலம் என்னும் இரண்டு சம்ஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.
    1. குரு = ஆசிரியர்
    2. குலம் = குடும்பம் அல்லது வீடு.
  • வாய்மொழிக் கற்றல் முறை மற்றும் மனப்பாடம் செய்யும் முறை.
  • கற்றுத்தரப்பட்ட பாடங்கள் = வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள்.
  • “இரு பிறப்பாளர்கள்” (Dvijas) = மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
  • பெண்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை.

நான்கு ஆசிரமங்கள் (வயதின் அடிப்படையில்)

  • நான்கு ஆசிரமங்கள் என்ற கோட்பாடு உருவான காலம் = பிந்தைய வேதகாலம்.
    1. பிரம்மச்சரியம் = மாணவப் பருவம்.
    2. கிரகஸ்தம் = திருமண வாழ்க்கை.
    3. வனப்பிரஸ்தம் = காடுகளுக்கு சென்று தவம் செய்தல்.
    4. சன்னியாசம் = வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளுதல்.

 

 

 

 

Leave a Reply