6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
- அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
- அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
- இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன
- ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
சுட்டு எழுத்துகள் மொத்தம் எத்தனை
- சுட்டு எழுத்துகள் மொத்தம் மூன்று ஆகும். அவை,
- சுட்டு எழுத்துகள் = அ, இ, உ.
- அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
- ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
- இன்று பயன்பாட்டில் இல்லாத சுட்டு எழுத்து = உ.
- அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட “உ” என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- எ.கா = உது, உவன்.
அகச்சுட்டு என்றால் என்ன
- இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை.
- இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
புறச்சுட்டு என்றால் என்ன
- அவ்வானம், இம்மலை, இந்நூல்
- இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
- இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
அண்மைச்சுட்டு என்றால் என்ன
- இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு
- இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
- எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும்.
- அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
சேய்மைச்சுட்டு என்றால் என்ன
- அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்
- இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
- எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும்.
- சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.
சுட்டு எழுத்து ‘உ’
- அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- (எ.கா.) உது, உவன்
- பயன்பாட்டில் இல்லாத சுட்டு எழுத்து = உ.
சுட்டுத்திரிபு என்றால் என்ன
- அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.
- அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.
- இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
வினா எழுத்துகள் என்றால் என்ன
- வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
- சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை
- வினா எழுத்துகள் மொத்தம் ஐந்து ஆகும். அவை,
- எ, யா, ஆ, ஓ, ஏ
மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை
- மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் = எ, யா (எங்கு, யாருக்கு)
மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் யாவை
- மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் = ஆ,ஓ (பேசலாமா, தெரியுமோ)
மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து யாது
- மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து = ஏ (ஏன், நீதானே)
அகவினா என்றால் என்ன
- எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
- இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா என்றால் என்ன
- அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
- இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- 6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
- 6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
- 6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
- மூதுரை