6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

  • அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
  • அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
  • இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சுட்டு எழுத்துகள் என்றால் என்ன

  • ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

சுட்டு எழுத்துகள் மொத்தம் எத்தனை

  • சுட்டு எழுத்துகள் மொத்தம் மூன்று ஆகும். அவை,
    • சுட்டு எழுத்துகள் = அ, இ, உ.
  • அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
  • ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
    • இன்று பயன்பாட்டில் இல்லாத சுட்டு எழுத்து = உ.
6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

அகச்சுட்டு என்றால் என்ன

  • இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை.
  • இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.

புறச்சுட்டு என்றால் என்ன

  • அவ்வானம், இம்மலை, இந்நூல்
  • இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
  • இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.

அண்மைச்சுட்டு என்றால் என்ன

  • இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு
  • இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
  • எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும்.
  • அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.

சேய்மைச்சுட்டு என்றால் என்ன

  • அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்
  • இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
  • எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும்.
  • சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.

சுட்டு எழுத்து ‘உ’

  • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • (எ.கா.) உது, உவன்
  • பயன்பாட்டில் இல்லாத சுட்டு எழுத்து = உ.

சுட்டுத்திரிபு என்றால் என்ன

  • அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.
  • அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.
  • இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.

வினா எழுத்துகள் என்றால் என்ன

  • வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
  • சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை

  • வினா எழுத்துகள் மொத்தம் ஐந்து ஆகும். அவை,
    • எ, யா, ஆ, ஓ, ஏ

மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை

  • மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் = எ, யா (எங்கு, யாருக்கு)

மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் யாவை

  • மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் = ஆ,ஓ (பேசலாமா, தெரியுமோ)

மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து யாது

  • மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து = ஏ (ஏன், நீதானே)

அகவினா என்றால் என்ன

  • எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
  • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

புறவினா என்றால் என்ன

  • அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
  • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

 

 

Leave a Reply