6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

  • பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துக்களை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வது இன்றியமையாதது ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மொழி முதல் எழுத்துக்கள்

  • மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
    • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
    • க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
    • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
    • ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- நுனம்
      • (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
    • ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
    • ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
    • வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்

  • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
  • ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
    • டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

மொழி இறுதி எழுத்துகள்

  • சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
  • ஞ், ண், ந், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

மொழி இறுதியில் வராத எழுதுக்கள்

  • சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
    • உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
    • அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
  • க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
  • உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
    • கார்த்திக், ஹாங்காங், சுஜித், மார்க்கெட், திலீப், மார்ச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
  • எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
  • ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
    • நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்
    • நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் = துன்பம்.

சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

 

 

 

Leave a Reply