8TH TAMIL உயர்க்குணங்கள்
8TH TAMIL உயர்க்குணங்கள்
- ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன.
- அவற்றுள் நற்பண்புகளும் உண்டு; தீய பண்புகளும் உண்டு
- தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- நிறை = மேன்மை
- பொறை = பொறுமை
- பொச்சாப்பு = சோர்வு
- மையல் = விருப்பம்
- ஓர்ப்பு = ஆராய்ந்து தெளிதல்
- அழுக்காறு = பொறாமை
- மதம் = கொள்கை
- இகல் = பகை
- மன்னும் = நிலைபெற்ற
ஆண்டாளின் திருப்பாவை
- மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு.
- இதனைப் பாவை நோன்பு என்பர்.
- அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவை
- சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை.
- இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
இறையரசன் ஆசிரியர் குறிப்பு
- இறையரசனின் இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும்.
- கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
- ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியுள்ளார்.
- “கன்னிப்பாவை” என்ற நூலின் ஆசிரியர் = இறையரசன்.