8TH TAMIL இளைய தோழனுக்கு

8TH TAMIL இளைய தோழனுக்கு

8TH TAMIL இளைய தோழனுக்கு

8TH TAMIL இளைய தோழனுக்கு

  • மனித உடலில் இரண்டு கைகள் உண்டு. உள்ளத்தில் இருக்கவேண்டிய ‘கை’ ஒன்று உண்டு
  • அதுவே நம்பிக்கை.
  • இது மக்கள் அனைவருக்குள்ளும் இருந்தாலும், அதன் ஆற்றலை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கி வாழ்வில் வென்றவர் சிலரே.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மு.மேத்தா பாடல்கள்

  • “ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
  • “தூங்கி விழுந்தால் பூமி உனக்குப் படுக்கையாகிறது. விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
  • “நீ விழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு! உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
  • “நட! நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட! “என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா

பாடல் பொருள்

  • உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை.
  • நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும்.
  • நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.
  • நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு.
  • கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும்.
  • செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.

மு.மேத்தா ஆசிரியர் குறிப்பு

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா.
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்;
  • கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்;
  • கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • இவர் எழுதிய “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply