9TH TAMIL துணைவினைகள்

9TH TAMIL துணைவினைகள்

9TH TAMIL துணைவினைகள்

9TH TAMIL துணைவினைகள்

  • வினைச்சொற்கள் அவற்றின் அமைப்பு, பொருள், சொற்றொடரில் அவை தொழிற்படுத்தும் விதம் முதலான அடிப்படைகளில் பலவகையாக பாகுபடுத்தலாம்.

அமைப்பின் அடிப்படையில் வினைச்சொற்கள்

  • அமைப்பின் அடிப்படையில் வினைச்சொற்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை,
    • தனிவினை
    • கூட்டுவினை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

தனிவினை என்றால் என்ன

  • தனிவினையடிகளை கொண்ட வினைச்சொற்களை தனிவினை என்பர்.
  • பகாபதமாக உள்ள வினையடிகளை “தனிவினையடிகள்” என்பர்.
  • எ.கா:
    • படி, படியுங்கள், படிக்கிறார்கள்
  • இதில் “படி” என்னும் வினையடியும் சில ஒட்டுக்களும் உள்ளன.
  • “படி” என்னும் வினையடி பகாப்பதம் ஆகும்.
  • இதனை பிரித்தால் பொருள் தராது.

கூட்டுவினை என்றால் என்ன

  • கூட்டு வினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை கூட்டுவினை என்பர்.
  • எ.கா:
    • ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்.
  • “ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு”என்பன அவற்றின் = வினையடிகள் ஆகும்.
  • இவை “பகுபதங்கள்” ஆகும்.
  • இவற்றை பிரித்தால் பொருள் கிடைக்கும்.
  • இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளை “கூட்டுவினையடிகள்” என்பர்.

கூட்டுவினை எத்தனை வகைப்படும்

  • கூட்டுவினை மூன்று வகையாக பிரிக்கப்படும்.
    • பெயர் + வினை = வினை
    • வினை + வினை = வினை
    • இடை + வினை = வினை

பெயர் + வினை = வினை

  • தந்தி + அடி = தந்தியடி
  • ஆணை + இடு = ஆணையிடு
  • கேள்வி + படு = கேள்விப்படு

வினை + வினை = வினை

  • கண்டு + பிடி = கண்டுபிடி
  • சுட்டி + காட்டு = சுட்டிக்காட்டு
  • சொல்லி + கொடு = சொல்லிக்கொடு

இடை + வினை = வினை

  • முன் + ஏறு = முன்னேறு
  • பின் + பற்று = பின்பற்று
  • கீழ் + இறங்கு = கீழிறங்கு

முதல்வினை என்றால் என்ன

  • ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து, தன அடிப்படைப் பொருளைத் தரும் வினை = முதல் வினை எனப்படும்.

துணைவினை என்றால் என்ன

  • ஒரு கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கண பொருளைத் தரும் வினை, “துணைவினை” எனப்படும்.

முதல்வினையும் துனைவினையும்

  • கூட்டுவினையின் முதல் வினை = “செய அல்லது செய்து” என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
  • கூட்டுவினையின் முதல் வினை எந்த வடிவில் இருக்கும் = “செய அல்லது செய்து” என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
  • துணைவினை, வினையடி வடிவில் இருக்கும்.
  • துனைவினையே “திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை” பெறும்.

தமிழில் உள்ள துணைவினைகள் எத்தனை

  • தமிழில் உள்ள துணைவினைகள் = தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன.
  • அவற்றில் பெரும்பாலானவை முதல்வினையாக செயல்படுகின்றன.

இருவகை வினைகளாக செயல்படும் உறுப்புகள்

  • தமிழில் இருவகை வினைகளாக செயல்படும் உறுப்புகள் = பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு.
9TH TAMIL துணைவினைகள்
9TH TAMIL துணைவினைகள்

துனைவினைகளின் பண்புகள் யாவை

  • துனைவினைகளின் பண்புகளாவன,
    • துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
    • இவை முதல் வினையைச் சார்ந்து அதன் விணைபபொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
    • பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

துணைவினைகளாக வரும் சொற்கள்

9TH TAMIL துணைவினைகள்
9TH TAMIL துணைவினைகள்
  • தமிழில் துணைவினைகளாக வரும் சொற்கள் = ஆம், ஆயிற்று, இடு, ஒழி, காட்டு, கூடும், கூடாது, கொடு, கொண்டிரு, கொள், செய், தள்ளு, தா, தொலை, படு, பார், பொறு, போ, வை, வந்து, விடு, வேண்டாம், முடியும், முடியாது, இயலும், இயலாது, வேண்டும், உள்.

வினையடி

முதல்வினை துணைவினை

இரு

புத்தகம் மேசையில் இருக்கிறது.

நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்.

என்னிடம் பணம் இருக்கிறது.

அப்பா வந்திருக்கிறார்.

வை

அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள். நீ என்னை அழ வைக்காதே.
அவன் வானொலியில் பாட்டு வைத்தான்.

அவர் ஒருவரைப் பாட வைத்தார்.

கொள்

பானை நான்கு படி அரிசி கொள்ளும்.

நீ சொன்னால் அவன் கேட்டுக் கொள்வான்,

நான் சொன்னதை நீ கருத்தில் கொள்ளவில்லை.

நோயாளியைப் பார்த்துக் கொள்கிறேன்.

போ

அவன் எங்கே போகிறான்? மலை பெய்யப் போகிறது.
நான் கடைக்குப் போனேன்.

நான் பயந்து போனேன்.

தமிழில் துணைவினைகள்

9TH TAMIL துணைவினைகள்
9TH TAMIL துணைவினைகள்
  • தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்.
  • எ.கா:
    • கீழே விழப் பார்த்தான்.
  • இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை.
  • பார்த்தான் என்பது துணைவினை.
  • தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையில் இருந்து மாறுபட்டது ஆகும்.
  • அதாவது, தமிழில் துணைவினையாக வரும் வேர்ச்சொல் சில தொடர்களில் முதல்வினையாகவும் வரும்.

 

Leave a Reply