9TH TAMIL தமிழ்விடு தூது

9TH TAMIL தமிழ்விடு தூது

9TH TAMIL தமிழ்விடு தூது
9TH TAMIL தமிழ்விடு தூது

9TH TAMIL தமிழ்விடு தூது

  • தமிழின் பெருமையை பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பல.
  • அதில் ஒரு கருவி = கவிதை.
  • தமிழையே தூதாக அனுப்பி “தமிழ்விடு தூது” பாடப்பட்டுள்ளது.

அருஞ்சொற்பொருள்

  • குறம் = சிற்றிலக்கிய வகை
  • பள்ளு = சிற்றிலக்கிய வகை
  • மூன்றினம் = துறை, தாழிசை, விருத்தம்
  • திறமெல்லாம் = சிறப்பெல்லாம்
  • சிந்தாமணி = சீவகசிந்தாமணி, சிதறாத மணி (இரு பொருள்)
  • சிந்து = ஒரு வகை இசைப்பாடல்.
  • முக்குணம் = மூன்று குணங்கள் (சத்துவம், இராசசம், தாமசம்)
  • பத்துக்குணம் = செறிவு, சமநிலை முதலிய பத்து குண அணிகள்.
  • வண்ணங்கள் ஐந்து = வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை.
  • வண்ணம் நூறு = குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  • ஊனரசம் = குறையுடைய சுவை.
  • நவரசம் = வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய 9 சுவை.
  • வனப்பு = அழகு.
  • வனப்பு எட்டு = அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கணக் குறிப்பு

  • முத்திக்கனி = உருவகம்
  • தெள்ளமுது = பண்புத்தொகை
  • குற்றமிலா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நா = ஓரெழுத்து ஒருமொழி
  • செவிகள் உணவான = நான்காம் வேற்றுமைத்தொகை.
  • சிந்தா மணி = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

தமிழ்விடு தூது பாடல் விளக்கம்

9TH TAMIL தமிழ்விடு தூது
9TH TAMIL தமிழ்விடு தூது
  • “உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ!” என்ற அடியில் கவிஞர் கூறும் “மூன்று இனத்தும்” என்பதன் பொருள் = தாழிசை, துறை, விருத்தம் ஆகிய மூன்று பாவினங்கள்.
9TH TAMIL தமிழ்விடு தூது
9TH TAMIL தமிழ்விடு தூது
  • “தேவர்களும் முக்குணமே பெற்றார்” என்ற அடியில் “முக்குணமே” என குறிப்பிடப்படுவது = சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய மூன்று குணங்கள்.
  • “குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்” என்ற அடியில் கூறப்படும் “பத்து குணங்கள்” யாவை = செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய பத்து குணங்கள்.
  • “வண்ணங்கள் ஐந்து” என தமிழ் விடு கூறுவது = வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை.
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்.
  • மூவகை பாவினங்கள் = தாழிசை, துறை, விருத்தம்
  • மூன்று குணங்கள் = சத்துவம், இராசசம், தாமசம்
  • பத்து குணங்கள் = செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி.
  • மனிதரால் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் = ஐந்து (வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை)
  • நாவிற்கு விருந்தளிக்கும் சுவைகள் = ஆறு
  • செவிகளுக்கு விருந்தளிக்கும் சுவைகள் = ஒன்பது
  • அழகுகள் = எட்டு.

கண்ணி என்பதன் விளக்கம்

9TH TAMIL தமிழ்விடு தூது
9TH TAMIL தமிழ்விடு தூது
  • இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.
  • அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

கண்ணி எத்தனை அடிகளை கொண்டது

  • கண்ணி எத்தனை அடிகளை கொண்டது = இரண்டு அடிகள்.

தூது இலக்கியம் பற்றி குறிப்பு

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று.
  • தூது இலக்கியம் வேறு பெயர் = வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
  • வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது = தூது இலக்கியம்
  • சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுவது = தூது இலக்கியம்.

தூது இலக்கியம் என்றால் என்ன

  • இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக ‘மாலையை வாங்கி வருமாறு’ அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் ‘கலிவெண்பா’வால் இயற்றப்படுவதாகும்.

தமிழ்விடு தூது நூல் குறிப்பு

  • தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
  • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
  • தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார்.
  • தமிழ்விடு தூது நூலை பதிப்பித்தவர் = தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா அவர்கள் ஆவர்.
  • இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.

தூது இலக்கியதததின் பா வகை

  • தூது இலக்கியம் கலிவெண்பாவால் பாடப்படும்.
  • கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.

 

 

Leave a Reply