9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

Table of Contents

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

  • திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழி = தமிழ்.
  • எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

மொழி என்பது யாது

  • தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர்கள் கண்டுபிடித்த கருவி = மொழி.
  • சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகள்

  • மனிதனை வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகள் உண்டாக்க தூண்டியவை,
    • மனிதன் வாழ்ந்த இட அமைப்பும்
    • இயற்கை அமைப்பும்

மொழிக்குடும்பங்கள்

  • மொழிக்குடும்பங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன = மொழிகளின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு.
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

இந்தியாவில் எத்தனை மொழிக்குடும்பங்கள்

  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை = 1300 க்கும் மேல்.
  • இந்தியாவில் எத்தனை மொழிக்குடும்பங்கள் உள்ளன = நான்கு. அவை,
    • இந்தோ – ஆசிய மொழிகள்
    • திராவிட மொழிகள்
    • ஆஸ்திரோ – ஆசிய மொழிகள்
    • சீன – திபத்திய மொழிகள்.

மொழிகளின் காட்சிசாலை

  • இந்தியாவை “மொழிகளின் காட்சிசாலை” என்று அழைப்பர்.
  • இந்தியாவை “மொழிகளின் காட்சிசாலை” என்று கூறியவர் = ச. அகத்தியலிங்கம்.
  • இந்தியாவை “மொழிகளின் காட்சிசாலை” என அழைக்க காரணம் = பல கிளை மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதால்.

திராவிட நாகரிகம்

  • இந்திய நாகரிகத்தை “மொகஞ்சதாரோ – ஹரப்பா” அகழ்வாராய்ச்சிக்கு உலகம் உறுதி செய்துள்ளது.
  • இதனை அறிஞர்கள் “திராவிட நாகரிகம்” என்று அழைத்தனர்.

திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

  • “திராவிடம்” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் = குமரிலபட்டர்.
  • திராவிடர்கள் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.

“திராவிடா” என்ற சொல்

  • “தமிழ்” என்ற சொல்லில் இருந்து தான் “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஹீராஸ் பாதிரியார்

  • ஹீராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் “தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா” என்று வந்ததாக விளக்குகின்றார்.

18 ஆம் நூற்றாண்டு வரை

  • 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் என்ற கருது இருந்து வந்தது.
  • அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.
  • முதன் முதலில் வடமொழியானது மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று கூறியவர் = அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்.

தனி மொழிக்குடும்பம்

  • முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார்.
  • தமிழ் மொழி தனி மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர் = பிரான்சின் எல்லிஸ்.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாக கருதி “தென்னிந்திய மொழிகள்” எனவும் பெயரிட்டார்.
  • “தென்னிந்திய மொழிகள்” என்ற பெயரை முதல் முதலில் பயன்படுத்தியவர் = பிரான்சிஸ் எல்லிஸ்.

தமிழியன்

  • மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் “தமிழியன்” என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார்.
  • “தமிழியன்” என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் = ஹோக்கன்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

  • “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதியவர் = கால்டுவெல்.
  • எந்த ஆண்டு கால்டுவெல் அவர்கள் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதினார் = 1856.
  • “திராவிட மொழிகள், ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை” என்று கூறியவர் = கால்டுவெல்.
  • தமிழ், தெலுங்கு போன்ற திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என கூறியவர் = கால்டுவெல்.
  • திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் கூறியவர் = கால்டுவெல்.
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிகள் எத்தனை வகைப்படும்

  • திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டது. அவை,
    • தென்திராவிட மொழிகள்
    • நடுத்திராவிட மொழிகள்
    • வடதிராவிட மொழிகள்
  • எதன் அடிப்படையில் திராவிட மொழிக்குடும்பம் மூன்றாக பிரிக்கப்பட்டது = மொழிகள் பரவிய நில அடிப்படையில்.

திராவிட மொழிக் குடும்பம்

தென் திராவிடம் நடுத்தர திராவிடம்

வடதிராவிடம்

தமிழ்

மலையாளம்

கன்னடம்

குடகு (கொடகு)

துளு

கோத்தா

தோடா

கொரகா

இருளா

தெலுங்கு

கூயி

கூவி (குவி)

கோண்டா

கோலாமி (கொலாமி)

நாய்க்கி

பொங்கோ

மண்டா

பர்ஜி

கதபா

கோண்டி

கோயா

குரூக்

மால்தோ

பிராகுய் (பிராகுயி)

திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை

  • மேலுள்ள பட்டியலில் உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட “எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா” ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.

கால்டுவெல் கூற்று

  • “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்” என்றார் கால்டுவெல்.

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்

  • சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், அடிச்சொல் எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

அடிச்சொல்

திராவிட மொழிகள்
கண்

தமிழ்

கண்ணு

மலையாளம், கன்னடம்
கன்னு

தெலுங்கு, குடகு

ஃகன்

குரூக்
கெண்

பர்ஜி

கொண்

தோடா

  • திராவிட மொழிகளில் “எண்ணுப் பெயர்கள்” ஒன்று போலவே அமைந்துள்ளன.

எண்ணுப் பெயர்கள்

மொழி
மூன்று

தமிழ்

மூணு

மலையாளம்
மூடு

தெலுங்கு

மூரு

கன்னடம்
மூஜி

துளு

குறில், நெடில் வேறுபாடு

  • திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்த துணை செய்கின்றன.

குறில்

நெடில்
அடி

ஆடி

வளி

வாளி

திராவிட மொழிகளில் பால்பாகுபாடு

  • திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால்பாகுபாடு அமைந்துள்ளது.
  • வடமொழியில் அவ்வாறு இல்லை.
  • உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும்கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன.
  • இம்மொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன.
  • ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது.
  • பால் பாகுபாட்டில் வடமொழியும், ஜெர்மன் மொழியும் ஒத்து போகின்றன.
  • திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.
  • அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை.
  • தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர்.
  • (எ.கா. கடுவன் – மந்தி; களிறு – பிடி)
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிகளில் வினைச்சொற்கள்

  • ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலம் மட்டுமே காட்டும்.
  • ஆங்கில மொழி திணை, பால், எண் ஆகியவற்றை காட்டாது.
  • ஆனால், திராவிட மொழிகளில் காலத்துடன் சேர்த்து திணை, பால், எண் ஆகியவற்றை காட்டும் வினைச்சொல் உண்டு.
    • எ.கா
      • வந்தான் = உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமை
    • திராவிட மொழிகளில் “திணை, பால், எண்” ஆகியவற்றை காட்டாத ஒரே மொழி = மலையாளம்
    • திராவிட மொழிகளில் பால் காட்டும் விகுதிகள் இல்லாத மொழி = மலையாளம்.
    • எந்த திராவிட மொழியில் தனிச்சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துக் கொள்ள முடியும் = மலையாளம்.

தமிழ் மொழியின் பெருமைகள்

  • தொன்மையும் இலக்கியவளமும் இலக்கண உடையது தமிழ் மொழியாகும்.
  • பல்வேறு உலக நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
  • ஏனைய திராவிட மொழிகளை விடவும் தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கணவளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  • திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.
  • தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.
  • ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.
  • இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  • தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்
9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

பணத்தாள்களில் தமிழ் மொழி

  • மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திராவிட மொழிகளில் பழமையான இலக்கிய இலக்கணங்கள்

மொழி

இலக்கியம் காலம் இலக்கணம் காலம் சான்று
தமிழ் சங்க இலக்கியம் பொ.ஆ.மு 5 – பொ.ஆ 2 ஆம் நூற்றாண்டு தொல்காப்பியம் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ)

கன்னடம்

கவிராஜ மார்க்கம் பொ.ஆ 9 ஆம் நூற்றாண்டு கவிராஜ மார்க்கம் பொ.ஆ 9 ஆம் நூற்றாண்டு இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் = செ.வை. சண்முகம்.
தெலுங்கு பாரதம் பொ.ஆ 11  ஆம் நூற்றாண்டு ஆந்திர பாஷா பூஷணம்

பொ.ஆ 12  ஆம் நூற்றாண்டு

மலையாளம்

ராம சரிதம் பொ.ஆ 12  ஆம் நூற்றாண்டு லீலா திலகம் பொ.ஆ 15  ஆம் நூற்றாண்டு

மலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதமி.

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை

தமிழ்

மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு கூர்க்
மரம் மரம் மானு மரம் மர

மர

ஒன்று

ஒண்ணு ஒகடி ஒந்து ஒஞ்சி —–
நூறு நூறு நூரு நூரு நூது

—–

நீ

நீ நீவு நீன் நின்
இரண்டு ஈர்ரெண்டு ஈர்ரெண்டு எரடு ரட்டு

—–

நான்கு

நால், நாங்கு நாலுகு நாலு நாலு —–
ஐந்து அஞ்சு ஐது ஐது ஐனு

—–

 

 

Leave a Reply