9TH TAMIL தொடர் இலக்கணம்

Table of Contents

9TH TAMIL தொடர் இலக்கணம்

9TH TAMIL தொடர் இலக்கணம்
9TH TAMIL தொடர் இலக்கணம்

9TH TAMIL தொடர் இலக்கணம்

  • ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும்.
  • ஒரு தொடரில் வினைச்சொல் (பயன்) நிலைத்து நிற்கும் இடத்தை “பயனிலை” என்பர்.
  • எழுவாய் (பெயர்ச்சொல்), ஒரு வினையை (செயல் / பயன்) செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே “செயப்படுபொருள்” எனப்படும்.

எழுவாய் என்றால் என்ன

  • ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும்.
  • எ.கா:
    • முருகன் வந்தான்
  • இதில் “முருகன்” = பெயர்ச்சொல்.
  • அதனால் முருகன் என்பது இங்கு “எழுவாய்” ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பயனிலை என்றால் என்ன

  • ஒரு தொடரில் வினைச்சொல் (பயன்) நிலைத்து நிற்கும் இடத்தை “பயனிலை” என்பர்.
  • எ.கா:
    • கனகாம்பரம் பூத்தது
  • இதில் “பூத்தது” = வினைச்சொல் (பயனிலை).
  • “கனகாம்பரம்” = பெயர்ச்சொல் (எழுவாய்)
  • ஒரு தொடரில் பயன் நிலைத்து நிற்கும் இடத்தை “பயனிலை” என்பர்.

செயப்படுபொருள் என்றால் என்ன

  • எழுவாய் (பெயர்ச்சொல்), ஒரு வினையை (செயல் / பயன்) செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே “செயப்படுபொருள்” எனப்படும்.
  • எ.கா:
    • மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்
  • மீனா = பெயர்ச்சொல் (எழுவாய்)
  • சூடினாள் = வினைச்சொல் (பயன் / பயனிலை)
  • கனகாம்பரம் = செயப்படுபொருள் (ஒரு பெயர்ச்சொல் / ஒரு வினைச்சொல்)

எழுவாய் செயப்படுபொருள்

  • ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாகவும் பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும்.
  • பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.
  • ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
  • செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.

தோன்றா எழுவாய் என்றால் என்ன

  • ஒரு தொடரில் “எழுவாய்” வெளிப்படையாக தெரியாமல் வந்தால் அது “தோன்றா எழுவாய்” எனப்படும்.
  • ஒரு தொடரில் “எழுவாய்” மறைந்து வந்தால் அது “தோன்றா எழுவாய்” எனப்படும்.
  • எ.கா:
    • படித்தாய்
  • இதில் “படித்தாய்” = பயனிலை.
  • ஆனால் “நீ” என்னும் எழுவாய் வெளிப்படையாக தெரியவில்லை (மறைந்து வந்துள்ளது)

வினைப் பயனிலை என்றால் என்ன

  • வினைமுற்று பயனிலையாக வந்தால் அது “வினைப் பயனிலை” எனப்படும்.
  • எ.கா:
    • நான் வந்தேன்.
  • “வந்தேன்” என்ற வினைமுற்று பயனிலையாக வந்துள்ளது.

பெயர்ப் பயனிலை என்றால் என்ன

  • பெயர்ச்சொல் பயனிலையாக வந்தால் அது “பெயர்ப் பயனிலை” எனப்படும்.
  • எ.கா:
    • சொன்னவள் கலா
  • “கலா” என்னும் பெயர்ச்சொல், பயனிலையாக வந்துள்ளது.

வினாப் பயனிலை என்றால் என்ன

  • வினாச்சொல் பயனிலையாக வருவது “வினாப் பயனிலை” எனப்படும்.
  • எ.கா:
    • விளையாடுபவன் யார்?
  • “யார்” என்ற வினாச்சொல், பயனிலையாக வந்துள்ளது.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

  • சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில் தான் வரவேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
  • தமிழின் “தொடர் அமைப்பு சிறப்புகளுள்” இதுவும் ஒன்றாகும்.
  • எ.கா:
    • நான் பாடத்தைப் படித்தேன்
      • எழுவாய், செயப்படுபொருள், பயனிலை
    • பாடத்தை நான் படித்தேன்.
      • செயப்படுபொருள், எழுவாய், பயனிலை
    • படித்தேன் நான் பாடத்தை
      • பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்
    • நான் படித்தேன் பாடத்தை
      • எழுவாய் பயனிலை, செயப்படுபொருள்
    • பாடத்தைப் படித்தேன் நான்
      • செயப்படுபொருள், பயனிலை, எழுவாய்

பெயரடை என்றால் என்ன

  • பெயருக்கு அடையாக வருவன பெயரடை எனப்படும்.
  • எ.கா:
    • நாள் நூல் ஒன்றை படித்தேன்.
  • இத்தொடரில் “நல்ல” என்ற சொல், “எழுவாயாக” வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருகிறது.
  • இவ்வாறு அமைவது “பெயரடை” எனப்படும்.

வினையடை என்றால் என்ன

  • வினைக்கு அடையாக வருவது “வினையடை” எனப்படும்.
  • எ.கா:
    • முருகன் மெல்ல வந்தான்.
  • இத்தொடரில் “மெல்ல” என்னும் சொல், “வந்தான்” என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வந்துள்ளது.
9TH TAMIL தொடர் இலக்கணம்
9TH TAMIL தொடர் இலக்கணம்

தன்வினை என்றால் என்ன

  • “எழுவாய்” ஒரு வினையை (செயல்) செய்தால் அது தன்வினை எனப்படும்.
  • எ.கா;
    • பந்து உருண்டது.

பிறவினை என்றால் என்ன

  • “எழுவாய்” ஒரு வினையை செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
  • எ.கா:
    • உருட்ட வைத்தான்.
  • பிறவினைகள் “வி, பி” போன்ற “விகுதி”களைக் கொண்டும் “செய், வை, பண்ணு” போன்ற “துணை வினைகளை” இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

தன்வினை பிறவினை எடுத்துக்காட்டு

தன்வினை

பந்து உருண்டது.

அவன் திருந்தினான்.

அவர்கள் நன்றாகப் படித்தனர்.

பிறவினை

உருட்ட வைத்தான்.

அவனைத் திருந்தச் செய்தான்.

தந்தை மகனை நன்றாக படிக்க வைத்தார்.

பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்.

செய்வினை என்றால் என்ன

  • செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை “செய்வினை” எனப்படும்.
  • எ.கா:
    • அப்பா சொன்னார்.
    • பாட்டு பாடுகிறாள்.

செயப்பாட்டுவினை என்றால் என்ன

  • செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை செயப்பாட்டு வினை எனப்படும்.
  • எ.கா:
    • தோசை வைக்கப்பட்டது.
    • பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது.

செய்வினை செயப்பாட்டுவினை

  • செயப்பாட்டுவினைத் தொடரில் சேரும் “துணைவினைகள்” = படு, உண், பெறு, ஆயிற்று, போயிற்று, போனது.
  • எ.கா:
    • கோவலன் கொலையுண்டான்.
    • ஓவியம் குமாரனால் வரையப்பட்டது.
    • வீடு கட்டியாயிற்று.
    • சட்டி உடைந்து போயிற்று.
    • பணம் காணாமல் போனது.
9TH TAMIL தொடர் இலக்கணம்
9TH TAMIL தொடர் இலக்கணம்

பயன்பாட்டுத் தொடர்கள் எடுத்துக்காட்டுகள்

அப்துல் நேற்று வந்தான்

தன்வினைத் தொடர்

அப்துல் நேற்று வருவித்தான்

பிறவினைத் தொடர்
கவிதா உரை படித்தாள்

செய்வினைத் தொடர்

உரை கவிதாவால் படிக்கப்பட்டது

செயப்பாட்டுவினைத் தொடர்
குமரன் மழையில் நனைந்தான்

உடன்பாட்டுவினைத் தொடர்

குமரன் மழையில் நனையவில்லை

எதிர்மறைவினைத் தொடர்
என் அண்ணன் நாளை வருவான்

செய்தித் தொடர்

எவ்வளவு உயரமான மரம்!

உணர்ச்சித் தொடர்
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?

வினாத் தொடர்

பூக்களைப் பறிக்காதீர்

கட்டளைத் தொடர்
இது நாற்காலி

அவன் மாணவன்

பெயர் பயனிலைத் தொடர்

பதம் என்றால் என்ன

  • பதம் என்பதன் பொருள் = சொல்.
  • பதம் இரண்டு வகைப்படும்.

பதம் எத்தனை வகைப்படும்

  • பதம் இரண்டு வகைப்படும். அவை,
    • பகுபதம்
    • பகாப்பதம்

பகுபதம் என்றால் என்ன

  • பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல், “பகுபதம்” எனப்படும்.
  • பகுபதம் இரண்டு வகைப்படும்.

பகுபதம் எத்தனை வகைப்படும்

  • பகுபதம் இரண்டு வகைப்படும். அவை,
    • பெயர்ப் பகுபதம்
    • வினைப் பகுபதம்

பகுபத உறுப்புகள் எத்தனை

  • பகுபத உறுப்புகள் ஆறு. அவை,
    • பகுதி (முதனிலை)
    • விகுதி (இறுதி நிலை)
    • இடைநிலை
    • சாந்தி
    • சாரியை
    • விகாரம்
9TH TAMIL தொடர் இலக்கணம்
9TH TAMIL தொடர் இலக்கணம்

பகுதி என்றால் என்ன

  • பகுதி சொல்லின் முதலில் நிற்கும்.
  • பகாப் பதமாக அமையும்.
  • வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.
  • எ.கா:
    • ஊரன் = ஊர்
    • நடிகன் = நடி
    • பார்த்தான் = பார்
    • மடித்தார் = மடி

விகுதி என்றால் என்ன

  • சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.
  • எ.கா:

படித்தான்

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

அன், ஆன்

பாடுகிறாள்

ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி அள், ஆள்
பெற்றார் ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

அர், ஆர்

நீந்தியது

து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி து, று
ஓடின அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

அ, ஆ

சிரிக்கிறேன்

ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி என், ஏன்
உண்டோம் ஓம் – தன்மை பன்மை வினைமுற்று விகுதி

அம், ஆம், எம்,ஏம், ஓம்

செய்தாய்

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ஐ, ஆய், இ
பாரீர் ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

இர், ஈர்

அழகிய, பேசும்

அ, உம் – பெயரெச்ச விகுதிகள் அ, உம்
வந்து, தேடி உ, இ – வினையெச்ச விகுதிகள்

உ, இ

வளர்க

க – வியங்கோள் வினைமுற்று விகுதி க, இய, இயர்
முளைத்தல் தல் – தொழிற்பெயர் விகுதி

தல், அல், ஐ, கை, சி….

இடைநிலை என்றால் என்ன

  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.
  • எ.கா:

வென்றார்

ற் – இறந்தகால இடைநிலை

த், ட், ற், இன்

உயர்கிறான்

கிறு – நிகழ்கால இடைநிலை கிறு, கின்று, ஆநின்று
புகுவான், செய்கேன் வ், க் – எதிர்கால இடைநிலைகள்

ப், வ், க்

பறிக்காதீர்

ஆ – எதிர்மறை இடைநிலை இல், அல், ஆ
மகிழ்ச்சி, அறிஞன் ச், ஞ் – பெயர் இடைநிலைகள்

ஞ், ந், வ், ச், த்

சந்தி என்றால் என்ன

  • பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
  • எ.கா:

உறுத்தும்

த் – சந்தி த், ப், க்
பொருந்திய ய் – உடம்படுமெய் சந்தி

ய், வ்

சாரியை என்றால் என்ன

  • பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
  • எ.கா:

நடந்தனன்

அன் – சாரியை

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம்,தம்,நம்,நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்

விகாரம் என்றால் என்ன

  • தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.

எழுத்துப்பேறு என்றால் என்ன

  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
  • பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும்.
  • சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.
  • எ.கா:
    • வந்தனன்: வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
      • வா – பகுதி (‘வ’ ஆனது விகாரம்)
      • த்(ந்) – சந்தி (‘ந்’ ஆனது விகாரம்)
      • த் – இறந்தகால இடைநிலை
      • அன் – சாரியை
      • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

 

 

 

Leave a Reply