DAILY CURRENT AFFAIRS 15 OCTOBER 2021
DAILY CURRENT AFFAIRS 15 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
7 புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்
- ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டிற்கு அர்பணித்தார் பிரதமர்.
- 200 ஆண்டுகால ஆயுத தொழிற்சாலை வாரியம் சமிபத்தில் மூடப்பட்டு, அதில் பணிபுரிந்த ஊழியர்கள், இந்த 7 புதிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டனர்
- புதிதாக உருவாக்கப்பட்ட 7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்,
- Munition India Ltd,
- Armoured Vehicles Nigam Ltd
- Advanced Weapons and Equipment India Ltd
- Troop Comforts Ltd
- Yantra India Ltd
- India Optel Ltd
- Gliders India Ltd
உலகளாவிய பசி குறியீடு
- 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசி குறியீடு (GLOBAL HUNGER INDEX 2021), வேல்டுங்கர்ஹில்ஃப் (WHH) மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைடு ஆகிய நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது
- மொத்தம் 116 நாடுகளில் இப்பட்டியலில் உள்ளன.
- இந்தியா 101-வது இடத்தில உள்ளது (INDIA RANKS 101 OUT OF 116 COUNTRIES). சென்ற ஆண்டு 94-வது இடத்தில இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் 2021 GHI மதிப்பெண் 50 க்கு 27.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது தீவிர வகையின் கீழ் வருகிறது
- அண்டை நாடுகளான நேபாளம் (76), பங்களாதேஷ் (76), மியான்மர் (71) மற்றும் பாகிஸ்தான் (92) ஆகியவையும் ‘ஆபத்தான’ பசி பிரிவில் உள்ளன
போர்ப்ஸ் உலகில் சிறந்த நிறுவனங்கள் பட்டியல்
- பிரபல போர்ப்ஸ் நிறுவனம் உலகின் சிறந்த 750 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- முதல் 3 இடங்கள் = சாம்சங் (தென் கொரியா), ஐ.பி.எம் (அமேரிக்கா), மைக்ரோசாப்ட் (அமெரிக்கா)
- இந்திய நிறுவனங்கள் = ரிலையன்ஸ் (52-வது இடம்)
- 100 இடங்களுக்குள் இடம்பிடித்த பிற நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி (65), ஹைச்டிஎப்சி வங்கி (77), ஹெச்சிெல் டெக்னாலஜீஸ் (90) இடங்களில் உள்ளன.
- பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 119 வது இடத்திலும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் 127-வது இடத்திலும் உள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனம் 588 வது இடத்திலும், டாடா குழுமம் 746-வது இடத்திலும், எல்ஐசி 504-வது இடத்திலும் உள்ளன.
பாரத் பெட்ரோலியத்தின் தானியங்கி எரிபொருள் நிரப்பு தொழில்நுட்பம் “UFILL”
- பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், தானியங்கி எரிபொருள் நிற்பு தொழில்நுட்பம் “UFILL” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (THE BHARAT PETROLEUM CORPORATION LIMITED (BPCL) HAS LAUNCHED AN AUTOMATED FUELLING TECHNOLOGY CALLED “UFILL”)
- இது பூஜ்ஜியம் அல்லது இறுதி வாசிப்பு மற்றும் ஆஃப்லைன் கையேடு தலையீடுகளைப் பார்க்கும் தேவையை தவிர்க்கும் டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவம் ஆகும்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 6-வது முறையாக இந்தியா தேர்வு
- ஐக்கிய நாடுகளில் மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பில் (UNHRC – UNITED NATIONS HUMAN RIGHTS COUNCIL) இந்தியா உறுபினராக 6-வது முறையாக அதிகபட்ச பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வாகி உள்ளது (UNHRC: INDIA RE-ELECTED TO UN HUMAN RIGHTS COUNCIL FOR RECORD 6TH TERM WITH OVERWHELMING MAJORITY)
- சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியதுவத்தை இது வெளிப்படுத்துகிறது
இந்தியாவின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பு தொடக்கம்
- இந்தியாவின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பு, இந்திய உயிரி தொழில்நுட்ப செயலாளர் மருத்துவர் ரேணு ஸ்வரூப் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது ( RENU SWARUP, SECRETARY, DEPARTMENT OF BIOTECHNOLOGY ON OCTOBER 14, 2021, VIRTUALLY LAUNCHED INDIA’S FIRST ‘ONE HEALTH’ CONSORTIUM.)
- புதிதாக தொடங்கப்பட்ட கூட்டமைப்பு, ஜூனோடிக் மற்றும் டிரான்ஸ்பவுண்டரி நோய்க்கிருமிகளின் முக்கியமான வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
Ex Yudh Abhyas 2021 போர் பயிற்சி நிகழ்ச்சி
- இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்களின் 17-வது Ex Yudh Abhyas 2021 கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சி, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் துவங்கியது (THE 17TH EDITION OF THE JOINT MILITARY TRAINING EXERCISE “EX YUDH ABHYAS 2021”)
- இந்திய ராணுவம் சார்பில் இப்பயிற்சியில் 350 காலாட்படை வீரர்கள் கலந்துக் கொண்டனர்
உலக மாணவர் தினம்
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் “உலக மாணவர் தினம்” (WORLD STUDENT DAY) கொண்டாட ஐக்கிய நாடுகள அவை அறிவித்துள்ளது
- இந்த ஆண்டிற்கான கரு = LEARNING FOR PEOPLE, PLANET, PROSPERITY AND PEACE
சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
- சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (INTERNATIONAL DAY OF RURAL WOMEN), அக்டோபர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
- இந்த ஆண்டிற்கான கரு = RURAL WOMEN CULTIVATING GOOD FOOD FOR ALL
- இந்தியாவில் இத்தினத்தை “ராஷ்டிரிய மகளிர் கிசான் திவாஸாக” (RASHTRIYA MAHILA KISAN DIWAS) அனுசரிக்கப்படுகிறது
- OCTOBER 14 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 13 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 12 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 11 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 10 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 09 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 08 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 07 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL