OCTOBER 07 2021 TNPSC CURRENT AFFAIRS
OCTOBER 07 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
- 2021 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு 84-வது இடத்தில இருந்த இந்தியா, 2021 ஆம் ஆண்டில் 6 இடங்கள் பின்தள்ளி, தற்போது 90-வது இடத்தை பிடித்துள்ளது (INDIA RANKS 90TH IN HENLEY PASSPORT INDEX 2021)
- இப்பட்டியலில் முதல் இடத்தில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.
ஜெய்திர்த் ராவ் எழுதிய “பொருளாதார வல்லுநர் காந்தி” புத்தகம்
- இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான எம்பசிஸ் நிறுவனத்தின் தலைவரான, ஜெய்திர்த் ராவ், “ECONOMIST GANDHI : THE ROOTS AND THE RELEVANCE OF THE POLITICAL ECONOMY OF THE MAHATMA” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
- இப்புத்தகத்தில் காந்தியின் அரசியல் பொருளாதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது
35 ஆக்சிஜன் ஆலைகளை நாட்டிற்கு அற்பனித்தார் பிரதமர்
- உத்திரக்காந்த் மாநிலத்தின் ரிஷிகேஷ் எயிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர், நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 35 “பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன்” (PSA – PRESSURE SWING ADSORPTION) ஆக்சிஜன் ஆலைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்
- இந்த ஆக்சிஜன் ஆலைகள் பி.எம்.கேர் நிதி மூலம் நிறுவப்பட்டுள்ளது
உலக முதலீட்டாளர் வாரம் 2021
- செக்யூரிட்டீஸ் கமிஷன்களின் சர்வதேச அமைப்பு (IOSCO = THE INTERNATIONAL ORGANIZATION OF SECURITIES COMMISSIONS) அதன் ஐந்தாவது ஆண்டு உலக முதலீட்டாளர் வாரத்தை (WIW – WORLD INVESTOR WEEK) 2021 அக்டோபர் 4 முதல் 10 வரை செயல்படுத்த முடிவு செய்துள்ளது
- உலக முதலீட்டாளர் வாரம் (WIW) என்பது முதலீட்டாளர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயல்படுத்தப்படுகிறது
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2021
- தான்சானியா நாட்டின் சான்சிபாரில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் பிரபல இலக்கிய எழுத்தாளரான, அப்துல்ரசாக் குர்னாவுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
- காலனித்துவத்தின் விளைவுகளை பற்றி அதிகம் எழுதுபவர் இவர்
2024 யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான சின்னத்தை வெளியிட்ட ஜெர்மனி
- 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான சின்னத்தை வெளியிட்டது ஜெர்மனி (GERMANY UNVEILS EURO 2024 CHAMPIONSHIP LOGO)
- லோகோவில் ஹென்றி டெலவுனே கோப்பையின் அவுட்லைன் உள்ளது – பல்புஸ் போட்டி கோப்பை – ஒலிம்பியாஸ்டேடியனின் கூரையை ஒத்த வண்ண ஓவல் அவுட்லைனில் அமைக்கப்பட்டுள்ளது.
அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு
- மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயம், புவிசார் குறியீட்டை பெற்றுள்ளது (ALIBAUG WHITE ONION FROM MAHARASHTRA GETS GI TAG)
- இந்த வெள்ளை வெங்காயம், இனிப்பு சுவை, கண்ணீர் இல்லாத காரணி மற்றும் அதன் மருத்துவ குணங்களுக்காக, வெளிநாடுகளில் அதிகளவு வேண்டப்படுகிறது
பிரதமமந்திரி மித்ரா ஜவுளி பூங்காக்கள்
- நாடு முழுவதும் ஏழு புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அல்லது பிஎம் மித்ரா (PM MITRA = PRIME MINISTER MEGA INTEGRATED TEXTILE REGION AND APPAREL PARKS) பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பகுதி மற்றும் ஆடை பூங்காக்கள் ஆகும். இது பிரதமரின் 5 “F” அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. அதாவது FARM TO FIBRE; FIBRE TO FACTORY; FACTORY TO FASHION; FASHION TO FOREIGN ஆகும்.
உலக பருத்தி தினம்
- உலக பருத்தி தினம் (WORLD COTTON DAY, 7TH OCOBER EVERY YEAR), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- இந்த நாள் அக்டோபர் 7, 2019 அன்று ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பால் (WTO) தொடங்கப்பட்டது.
உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
- சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஒட்டுண்ணி நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில் உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது
- மலேரியா நோய் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்களின் கடி மூலம் மக்களுக்கு பரவுகிறது
- RTS, S/AS01, வர்த்தகப் பெயர் கொண்ட MOSQUIRIX என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, உலக சசுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
OCTOBER 06 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
OCTOBER 01 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
OCTOBER 02 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
OCTOBER 03 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
OCTOBER 04 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
OCTOBER 05 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL