OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சத்தீஸ்கரில் இந்தியாவின் புதிய புலிகள் காப்பகம்

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • இந்திய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சத்திஸ்கர் அரசின் புதிய புலிகள் காப்பகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
  • குரு காசிதாஸ் தேசிய பூங்கா மற்றும் தமோர் பிங்லா வனவிலங்கு சரணாலயத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய புலிகள் காப்பகத்தை அம்மாநில அரசு உருவாக்கி உள்ளது. இது அம்மாநிலத்தின் நான்காவது புலிகள் காப்பகம் ஆகும்.

உலகளாவிய FinTech Hackathon தொடர் I-Sprint’21

  • IFSCA எனப்படும் சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் சார்பில் GIFT CITY ஆகியவை இணைந்து, உலகளாவிய நிதி தொழில்நுட்ப ஹெக்கதான் தொடரான “I-Sprint’21” நிகழ்ச்சி துவங்கப்பட்டது
  • ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, ஐகிரேட், மண்டல தொடக்கங்கள் மற்றும் முதலீடு-இந்தியா ஆகியவை ஹேக்கத்தானின் பங்கு பெரும் வங்கிகளாகும்.

புதிய வகை பள்ளி இனம் Cnemaspis Jackieii

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் மற்றும் பெங்களூரு தேசிய உயிரியல் அறிவியல் மையம் இணைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிய வகை பள்ளி இனம் கண்டுபிடித்துள்ளனர்
  • ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை பள்ளி இனத்திற்கு, Cnemaspis Jackieii அல்லது Jackie’s Day Gecko என்று பெயரிட்டுள்ளனர்.

தேசிய தன்னார்வ இரத்த தான தினம்

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்த தான தினம் (NATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY, OCTOBER 1ST) கொண்டாடப்படுகிறது.
  • இந்த வருட இரத்த தான நிகழ்வின் கருப்பொருள் “இரத்தத்தை கொடுங்கள் மற்றும் உலகத்தை துடிக்க வைத்துக்கொள்ளுங்கள்” (GIVE BLOOD AND KEEP THE WORLD BEATING) என்பதாகும்.

இந்திய தேசிய அஞ்சல் தினம்

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் (INDIAN NATIONAL POST DAY), அக்டோபர் மாதத்தின் 10 ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. உலக அஞ்சல் தினம் (WORLD POST DAY), அக்டோபர் 9 ஆம் தேதி ஆகும்
  • தேசிய அஞ்சல் தினம், கடந்த 150 ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறை ஆற்றிய பங்கை நினைவுகூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 1854 ஆம் ஆண்டில் லார்ட் டல்ஹசியால் நிறுவப்பட்டது.

உலக மனநல தினம்

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக இழிவுகளுக்கு எதிராக வாதிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று உலக மனநல தினம் (WORLD MENTAL HEALTH DAY) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு = MENTAL HEALTH IN AN UNEQUAL WORLD

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

OCTOBER 10 2021 CURRENT AFFAIRS

  • மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் (WORLD DAY AGAINST THE DEATH PENALTY) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 2003 இல் மரண தண்டனைக்கு எதிரான உலக கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது
  • 19-வது உலக மரண தண்டனை எதிர்ப்பு தினத்தின் கரு = WOMEN SENTENCED TO DEATH: AN INVISIBLE REALITY

மிகப்பெரிய செமி கிரையோஜெனிக் ப்ரொபெல்லன்ட் டேங்க்

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL – HINDUSTAN AERONAUTICAL LIMITED) உருவாக்கிய மிகப்பெரிய செமி கிரையோஜெனிக் ப்ரொபெல்லன்ட் டேங்க் (THE HEAVIEST SEMI CRYOGENIC PROPELLANT TANK (SC120­ LOX) EVER FABRICATED BY HINDUSTAN AERONAUTICS LIMITED) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வழங்கப்பட்டது.
  • அரை கிரையோ திரவ ஆக்ஸிஜன் (LOX) தொட்டி – முதல் வளர்ச்சி பற்றவைக்கப்பட்ட வன்பொருள் இதுவாகும்.

 

 

Leave a Reply