SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு
SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு
ஆதியி லேநம திந்திய தேசத்தில்
ஆன பலவிதக் கைத்தொழில்கள் – மிக
சாதன மாகவே ஓங்கிக் குடிகொண்டு
சாலச் சிறப்புடனே திகழ்ந்தே
நாகரீகத்திலும் ராஜரீகத்திலும்
நாடெங்கும் எந்நாளுங் கொண்டாடிட – அருஞ்
சேகரம் போலச் சிறந்து விளங்கிடும்
செல்வ மலிந்த திருநாடு
குறிப்பு
- நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் பாரத மக்களின் பரிதாபச் சிந்து என்ற ‘தேயிலைத் தோட்டப் பாட்டு என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை.
- வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப்பாடல்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன.
- செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின