SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
- அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
- இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம் பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன
மயிலை சீனி வேங்கடசாமி
- மயிலை சீனி. வேங்கடசாமி, 16.12.1900ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
- தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவராகவும் அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் இருந்தனர்.
தமிழ்ப்பற்று ஏற்பட காரணம்
- தமக்கு தமிழ்பற்று ஏற்பட காரணம் என்ன என்பதை அவரே கூறுகிறார் = “”தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்; எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன்”.
பணி
- தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
- விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு.வி.க, தெ.பொ.மீ, ச.த. சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் இருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.
தமிழ்த் தேனீ
- மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாகின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்
மயிலை சீனி வேகடசாமியின் நூல்கள்
- தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1934
- மயிலை சீனி வேங்கடசாமியின் முதல் நூல் = கிறித்துவமும் தமிழும்
- இவரின் பிற நூல்கள் = பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
கல்வெட்டு ஆய்வு
- இவர் மிகவும் புகழ் பெற்ற துறை = கல்வெட்டு ஆராய்ச்சி
- மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார். இது, தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- தமிழர்கள் வரலாற்றில் “இருண்ட காலம்” எனப்படும் “களப்பிரர் கால”த் தமிழக மன்னர்களை பற்றி ஆராய்ந்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை படைத்தார்
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
- மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் படைத்த “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” என்னும் நூலே கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
- இந்நூலிற்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- கலை பற்றிய இவரின் பிற நூல்கள் = இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள்
ஓவியம் வரைதல்
- தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரின் கலைத் திறனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சங்ககாலம் பற்றிய நூல்கள்
- தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் மூலம் இவர் = சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாடு வரலாறு – சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களை படைத்தார்
- “ஆய்வு உலகில் தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
- இவர் துளு மொழியையும், தமிழ் மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்து உள்ளார்
பிற நூல்கள்
- சாசனச் செய்யுள் மஞ்சரி
- மறைந்து போன தமிழ்நூல்கள்
- 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்
மறைந்து போன தமிழ்நூல்கள்
- இவரின் “மறைந்து போன தமிழ்நூல்கள்” என்னும் இவரின் நூல், அறிய ஆவணப் பணிகளில் மிகச்சிறந்த நூலாகும்.
- இந்நூலில், பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.
பன்மொழிப் புலமை
- வேங்கடசாமி தொடர்ந்து சொல்லாய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.
- ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
மத்த விலாசம்
- வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர்.
- எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
வேங்கடசாமியின் வருத்தம்
- “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை; இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன்” என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார்
சுவாமி விபுலானந்த அடிகள் கூற்று
- சுவாமி விபுலானந்த அடிகள், ”மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர்; நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்
- 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது
- மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
- அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினர்.
பசும்பூண் பாண்டியனின் யானைச் சின்னம்
- சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
பாவேந்தர் பாராட்டு
மயிலை வேங்கடசாமி உருவ அமைப்பு பற்றி நாரை.துரைக்கண்ணன் விவரித்தல்
- ‘ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல்துண்டு; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.
-
மயிலை சீனி வேங்கடசாமி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- SAMACHEER KALVI 12TH TAMIL இராசமாணிக்கனார்
- SAMACHEER KALVI 12TH TAMIL தொன்மம்
- SAMACHEER KALVI 12TH TAMIL புறநானூறு
- SAMACHEER KALVI 12TH TAMIL சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
- SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு
- SAMACHEER KALVI 12TH TAMIL அதியச மலர்
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL வை.மு.கோதைநாயகி
- SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
- SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்