12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்

12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்

12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்

  • தொன்மம் (புராணம்) என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ‘தொன்மை’ என்பதும் ஒன்றாகும்.
  • காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகி விட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே.
  • கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.

தொன்மம் என்றால் என்ன

  • கடவுள்கள், தேவர்கள் மக்கள், விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து, படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகளையே தொன்மம் என்று கூறுவர்.
  • நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.

தொன்மம் விளக்கம்

12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்

  • சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சமாக்குகின்றன.
  • சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
  • தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ ​​முடியாது. அவை சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவை ஏற்பட்டால் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று ‘வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல் அகராதி’ புலப்படுத்துகின்றது.

தொன்மத்தை வெளிப்படுத்தும் கருவி

  • தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவி = கவிதை

கதைகள்

  • இராமாயண அகலிகை கதை கொண்டு புதுமைப்பித்தன் உருவாக்கிய கதைகள் = சாபவிமோசனம், அகலிகை
  • திருவிளையாடல் புராணம் கதையை கொண்டு அழகிரிசாமி உருவாக்கிய கதைகள் = விட்டகுறை, வெந்தழலால் வேகாது
  • ஜெயமோகனின் சிறுகதை = பதம்வியூகம்
  • எஸ். இராமகிருஷ்ணனின் நாடகம் = அரவான்

முருகக்கடவுள் பற்றிய தொன்மம்

  • நற்றிணையில், முருகக் கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள பாடல்,

முருகு உறழ் முன்பொடு

கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை

–    நற்றிணை

  • யானை சினங்கொண்டு பேராற்றலுடன் போர்செய்த சிறப்பினை, முருகனின் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளது இந்த சங்க இலக்கியப் பாடல்

12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்

தொன்மம் பற்றி தொல்காப்பியர்

தொன்மை தானே சொல்லுங் காலை

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே

தொன்மம் பற்றி இளம்பூரனார்

  • தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்

தொன்மம் பற்றி பேராசிரியர் உரை

  • தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப் படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகரூர் யாத்திரை போல்வன.

இந்திய, கிரேக்கத் தொன்ம ஒப்புமைகள்

  • கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் நிறைய ஒப்புமைகள் உள்ளன.
  • இந்திரன் – சீயஸ்பிடர், வருணன் – ஊரனாஸ், பலராமன்- டயானிசிஸ், கார்த்திகேயன் – மார்ஸ், சூரியன் – சோல், சந்திரன் – லூனஸ், விஸ்வகர்மன் – வன்கன், கணேசன் – ஜோனஸ், துர்க்கை – ஜீனோ , சரஸ்வதி – மினர்வா, காமன்- இராஸ் என்று பல ஒப்புமைகள் உள்ளன.

 

 

Leave a Reply