TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அயோத்தி பற்றி சல்மான் குர்ஷிதின் புதிய புத்தகம்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், “SUNRISE OVER AYODHYA – NATIONHOOD IN OUR TIMES” என்ற தனது புதிய புத்தகத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் தொடர்பாக விவரித்துள்ளார்
  • புத்தகத்தில் அவர் அயோத்தி தீர்ப்பு வர 100 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்

சர்வதேச சூரியக் கூட்டணியில் 101-வது நாடாக இணைந்த அமேரிக்கா

  • சர்வதேச சூரியக் கூட்டணியில் 101-வது நாடாக அமேரிக்கா இணைந்துள்ளது / USA BECOMES 101ST MEMBER COUNTRY OF ISA
  • கிளாஸ்கோவில் நடந்த COP26 காலநிலை உச்சி மாநாட்டில், காலநிலைக்கான அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் ஜான் கெர்ரி முறைப்படி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தேசிய கல்வி தினம்

  • இந்தியாவில் தேசிய கல்வி தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது / IN INDIA, THE NATIONAL EDUCATION DAY IS CELEBRATED ON 11 NOVEMBER EVERY YEAR TO COMMEMORATE THE BIRTH ANNIVERSARY OF MAULANA ABUL KALAM AZAD, THE FIRST EDUCATION MINISTER OF INDEPENDENT INDIA.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1947 ஆகஸ்ட் 15 முதல் 1958 பிப்ரவரி 2 வரை கல்வி அமைச்சராக பணியாற்றினார்.

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2022

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • ஜெர்மன் வாட்ச் என்ற பருவநிலை தொடர்பான ஆய்வுக் குளுவான் வெளியிடப்பட்ட காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2022-ல் (CLIMATE CHANGE PERFORMANCE INDEX (CCPI) 2022) இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக 10-வது இடத்திலேயே நீடிக்கிறது
  • 2020 ஆம் ஆண்டை விட சீனா நான்கு இடங்கள் சரிந்து 37 வது இடத்தையும் ‘குறைந்த’ மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
  • முதல் 3 இடங்களில் = உலகின் எந்த நாடும் இல்லை
  • 4-வது இடத்தில டென்மார்க் உள்ளது

விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் 298 சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது

  • சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா 11 நவம்பர்’21 அன்று ஆன்லைன் தளமான eGCA ஐ அறிமுகப்படுத்தினார் / CIVIL AVIATION MINISTER JYOTIRADITYA SCINDIA ON 11 NOV’21 LAUNCHED AN ONLINE PLATFORM e
  • இதன் மூலம், விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) பைலட் உரிமம் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட 298 சேவைகளை வழங்கும்.

18 ஆம் நூற்றாண்டின் அன்னபூர்ணா தேவி சிலை மீட்பு

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • 18 ஆம் நூற்றாண்டின் அன்னபூர்ணா தேவியின் கற்சிலை கனடா நாட்டில் இருந்து மீட்டு மீண்டும் வாரணாசி கொண்டுவரப்பட்டது / 18TH CENTURY GODDESS ANNAPURNA TITLE RETRIEVED FROM CANADA
  • இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் இருந்து திருடப்பட்டு கனடாவில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.

தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் புதிய தலைவர்

  • NCB (NARCOTICS CONTROL BUREAU) எனப்படும் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சத்யநாராயன் பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார் / SATYA NARAYAN PRADHAN APPOINTED AS NCB CHIEF TILL AUGUST 2024
  • ஆகஸ்ட் 31, 2024 அன்று பணி ஓய்வு பெறும் நாள் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்சிபி) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்

உலக தர நாள்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • நவம்பர் மாதத்தின் 2-வது வியாழக்கிழமைகளில் உலகம் முழுவதும் உலக தர நாள் (WORLD QUALITY DAY) அனுசரிக்கப்படுகிறது / WORLD QUALITY DAY IS OBSERVED EVERY SECOND THURSDAY IN NOVEMBER
  • இந்த ஆண்டு உலக தர நாள், நவம்பர் 11 ஆம் தேதி வந்துள்ளது
  • இந்த ஆண்டிற்கான கரு = SUSTAINABILITY: IMPROVING OUR PRODUCTS, PEOPLE, AND PLANET
  • உலக தர வாரம் (WORLD QUALITY WEEK) 8-12 நவம்பர் 2021 வரை அனுசரிக்கப்படுகிறது.

உலக பயன்பாட்டு தினம்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • நவம்பர் மாதத்தின் 2-வது வியாழக்கிழமைகளில் உலகம் முழுவதும் உலக பயன்பாட்டு தினம் (WORLD USABILITY DAY) கொண்டாடப்படுகிறது / WORLD USABILITY DAY IS CELEBRATED ON THE SECOND THURSDAY OF NOVEMBER EVERY YEAR.
  • இந்த ஆண்டு உலக பயன்பாட்டு தினம், நவம்பர் 11 ஆம் தேதி வந்துள்ளது
  • இந்த ஆண்டிற்கான கரு = DESIGN OF OUR ONLINE WORLD: TRUST, ETHICS, AND INTEGRITY

போர் நிறுத்த நினைவு நாள்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11

  • நினைவு தினம் அல்லது போர் நிறுத்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது / REMEMBRANCE DAY OR ARMISTICE DAY IS MARKED EVERY YEAR ON 11
  • இந்த நாள் 1918 இல் முதல் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • பாரம்பரியமாக, காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரிக்கப்படுகிறது, இது 1918 இல் போர் நிறுத்தப்பட்ட துல்லியமான நேரத்தை அங்கீகரிக்கிறது – 11 வது மாதத்தின் 11 வது நாளின் 11 வது மணிநேரம்.
  • இதனை 11.11.11 என்ற குறியீட்டால் அழைப்பர். இந்த நாளின் நூறாண்டு நிறைவுற்றதை முன்னிட்டு, நூற்றாண்டு நினைவுநாள் 11 நவம்பர் 2018 இல் உலகம் கொண்டாடப்பட்டது

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம்

  • MPLADS (MEMBER OF PARLIAMENT LOCAL AREA DEVELOPMENT SCHEME) எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் மீண்டும் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • MPLADS என்பது இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட மத்தியத் துறை திட்டமாகும்.

நேஷனல் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் ‘டிஜிட்டல் பேமென்ட் கேட்வே’

  • நேஷனல் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (NIXI – NATIONAL INTERNET EXCHANGE OF INDIA) அதன் மூன்று வணிகப் பிரிவுகளிலும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளைச் சேவைகளை துவக்கி உள்ளது / NATIONAL INTERNET EXCHANGE OF INDIA LAUNCHES ‘DIGITAL PAYMENT GATEWAY’
  • NIXI என்பது மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஓர் அங்கமாகும்

ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் (பழங்குடியினரின் பெருமை தினம்)

  • நவம்பர் 15 ஆம் தேதியை ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் (பழங்குடியினரின் பெருமை தினம்) என அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / CABINET DECLARES 15TH NOVEMBER AS JANJATIYA GAURAV DIVAS (TRIBAL PRIDE DAY)
  • இந்த நாள் துணிச்சலான பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாள். பழங்குடியின மக்களின் காவலன் (அ) பகவான் எனப்படும் பிரசா முண்டாவை நினைவு கூறும் வகையில் இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது
  • பிர்சா முண்டா 1900 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 25 வயதில் சிறையில் காலராவால் இறந்தார்.
  • பிர்சா முண்டா, சக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய புரட்சித் தலைவர், அவர் “பகவான் பிர்சா முண்டா” மற்றும் “ஜகத் பிதா (தர்த்தி அபா) என்றும் அழைக்கப்பட்டார்.

COP26 இல் மின்சார வாகனங்களுக்கான E-Amrit போர்ட்டலை இந்தியா அறிமுகம்

  • 10 நவம்பர் 2021 அன்று கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சி மாநாட்டில் மின்சார வாகனங்கள் (EV கள்) குறித்த ‘E-Amrit’ இணைய போர்ட்டலை இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • e-AMRIT PORTAL STANDS FOR “ACCELERATED E-MOBILITY REVOLUTION FOR INDIA’S TRANSPORTATION”
  • எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் இணையதளம் ஒரே இடத்தில் உள்ளது.
  • e-AMRIT போர்டல் நிதி ஆயோக் அமைப்பால், UK நாட்டுடன் இணைந்து உருவாக்கப் பட்டது

இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அறிக்கை

  • இந்தியாவில் 33 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது / AS PER A RECENT DATA FROM WOMEN AND CHILD DEVELOPMENT MINISTRY, OVER 33 LAKH CHILDREN IN INDIA ARE MALNOURISHED AND MORE THAN HALF OF THEM ARE IN THE SEVERELY MALNOURISHED CATEGORY.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அக்டோபர் 14 நிலவரப்படி, நாட்டில் 17,76,902 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 15,46,420 மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.
  • அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 6,16,772 ஆகவும், பீகார் (4,75,824) மற்றும் அதைத் தொடர்ந்து குஜராத்தில் (3,20,465) உள்ளன.
  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மற்ற மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (2,67,228), கர்நாடகா (2,49,463), மற்றும் உத்தரப் பிரதேசம் (1,86,640).

இந்தியாவின் முதல் உடல்சார்ந்த தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள்

  • முதல் உடல்சார்ந்த தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் 11 முதல் 13, 2021 வரை புவனேஷ்வரில் நடைபெறுகிறது / THE FIRST PHYSICAL NATIONAL YOGASANA CHAMPIONSHIPS WILL BE HELD IN BHUBANESHWAR FROM NOVEMBER 11 TO 13,
  • தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு (NYSF) ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும்.
  • கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2021 இல் ஆண் மற்றும் பெண் இரு பிரிவுகளுக்கான யோகாசன விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ட்ரோன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஐஐடி கவுகாத்தியில் தொடங்கப்பட்டது

  • ட்ரோன்/யுஏவி (ஆளில்லா வான்வழி வாகனம்) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சிக்கான இந்தியாவின் 1வது மையத்தை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) அஸ்ஸாம் குவஹாத்தியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் தொடங்கி வைத்தார் / INDIA’S 1ST CENTRE FOR EXCELLENCE IN RESEARCH ON DRONE/UAV (UNMANNED AERIAL VEHICLE) TECHNOLOGY AND ARTIFICIAL INTELLIGENCE AT THE INDIAN INSTITUTE OF TECHNOLOGY (IIT), GUWAHATI, ASSAM
  • பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு அவசர மருத்துவ மற்றும் அவசரகாலப் பொருட்களை விநியோகிக்கும் சரக்கு ட்ரோன்களுக்கு ஆதரவாக ‘AXOM ட்ரோன்போர்ட்ஸ்’ தொடங்கப்பட்டது.

 

 

Leave a Reply