TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 28/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 28/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப் போர்டின் தலைவராக மன்சுக் மாண்டவியா நியமனம்
- ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப் போர்டின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- இதற்கு முன்னர் இதன் தலைவராக முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் இருந்தார்.
- இந்தியா 2025 க்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது, 2030 க்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை நிர்ணயம் செய்துள்ளது
பெண்கள் அதிகாரம் குறித்த முதல் ஜி 20 அமைச்சர்கள் மாநாடு
- பெண்கள் அதிகாரம் குறித்த முதல் ஜி 20 அமைச்சர்கள் மாநாடு, இத்தாலியில் நடைபெற்றது
- இத்தாலியின் சாண்டா மார்கெரிட்டா லிகூரில் நடைபெற்ற இந்த ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிரிதி ராணி கலந்துக் கொண்டார்
- பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் பாலினம் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வாகனங்களுக்கான பாரத் தொடர் (பி.எச்) பதிவு குறி
- சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாரத் தொடர் (பிஎச்-தொடர்)’ கீழ் புதிய வாகனங்களுக்கான புதிய பதிவு முத்திரையை அறிமுகப்படுத்தியது.
- வேறு மாநிலத்திற்கு இடம் பெயரும் போது அல்லது வாகனங்களை மீண்டும் பதிவு செய்யும் சிக்கலான செயல்முறையை மனதில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய பாரத் தொடர் பதிவு குறி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது ஒரு தனிநபர் மற்றொரு இடத்திற்கு சென்றால் ஒரு புதிய பதிவு எண்ணை பெற தேவையில்லை நிலையை உருவாக்கி உள்ளது
2-வது பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம்
- 2-வது பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், இந்தியாவின் தலைமையில், மெய்நிகர் தோயல்நுட்ப முறையில் நடைபெற்றது
- இக்கூட்டத்திற்கு மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்திய ரிசர்வ வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் கலந்துக் கொண்டார்
கைவினைஞர்களை மேம்படுத்துவதற்காக HCL அறக்கட்டளையின் ‘மை இ-ஹாட்’ போர்ட்டல்
- HCL டெக்னாலஜிஸின் சமூகப் பொறுப்புக் குழுவான HCL அறக்கட்டளை, கைவினைஞர்களை மேம்படுத்துவதற்கும், நாட்டின் கைவினைத் துறையின் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும் ‘மை இ-ஹாட்’ என்ற இணையதள போர்ட்டலை அறிமுகப் படுத்தி உள்ளது
- தற்போது, 600 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த போர்ட்டலில் பட்டியலிடப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இருந்து மேலும் பலர் சேருவர் என எச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது
பார்சிலோனா ஓபன் செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன்
- ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற 26-வது பார்சிலோனா சதுரங்க சாம்பியன் போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டர் எஸ்.பி.சேதுராமன், சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் கார்த்திகேயன் முரளி மூன்றாவது இடத்தை பிடித்தார்
- சேதுராமன் (எலோ 2644) ஒன்பது சுற்றுகளில் இருந்து 7.5 புள்ளிகளைச் சேகரித்து சிறந்த டை-பிரேக் ஸ்கோர் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்
முதல் “பரவலாக்கப்பட்ட நிதி” தத்தெடுப்பு குறியீடு
- பிளாக்செயின் தரவு தளமான சைனாலிசிஸ் வெளியிட்ட முதல் உலகளாவிய டிஃபி தத்தெடுப்பு குறியீட்டில் (Global DeFi Adoption Index), இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது
- முதல் 3 இடங்கள் = அமேரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து
- DeFi கடந்த ஒன்றரை வருடங்களில் “ஒரு மத்திய நிறுவனம், குழு அல்லது நபரின் ஆதரவு இல்லாமல் தன்னாட்சி முறையில் இயங்கக்கூடிய பரவலாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தளங்களின் வர்க்கமாக” முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மிஷன் கர்மயோகி
- மிஷன் கர்மயோகி என்பது சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டிற்கான தேசிய திட்டமாகும் (NPCSCB). இது இந்திய அதிகாரத்துவத்தில் ஒரு சீர்திருத்தம். மத்திய அமைச்சரவை 2 செப்டம்பர் 2020 அன்று தொடங்கப்பட்டது,
- இந்த பணி இந்திய அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கிறது மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை உங்களுக்கு IAS தேர்வுக்கான பணி பற்றிய பொருத்தமான விவரங்களை வழங்கும்.
தேசிய நல்லாசிரியர் விருது
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
- இப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் மற்றும் புதுவையை சேர்ந்த 1 ஆசிரியரும் இடம் பிடித்துள்ளனர்
- கே.ஆஷா தேவி = திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை
- டி.லலிதா = ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை
- வி.ஜெயசுந்தர் = புதுச்சேரி மனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர்
உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் மணிமேகலை
- ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது
- பௌத்த சமயத்தின் முழுமையான காப்பியமாக இருக்கும் ஒரே நூல் மணிமேகலை மட்டுமே
- முதல் கட்டமாக தாய்லாந்து, சீன, ஜப்பான், கொரியா, பர்மிய, வியத்நாம், மலாய், சிங்களம், கம்போடியம், இந்தோனேசியம், மங்கோலியம் உட்பட 18 மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட உள்ளது
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 27, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 26, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 25, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 19, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 18, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 17, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL– AUGUST 16, 2021