TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 16/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
மாசு கட்டுப்பாட்டு வாரிய வெளிப்படைத்தன்மை அறிக்கை
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது
முதல் இடம் = தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (67 புள்ளிகள்)
2-வது இடம் = தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (65.5 புள்ளிகள்)
3-வது இடம் = மத்தியப்பிரதேசம் மாசு கட்டுப்பாட்டு வாரியம்
இந்தியாவில் முதல் முறையாக காணப்படும் புதிய வகை மந்தாரை தாவர இனம்
உத்திரக்கான்ட் மாநில வனத்துறையின் சார்பில் சமிபத்தில் இந்தியாவில் இதுவரை காணப்படாத புதிய வகை மந்தாரை (ஆர்ச்சிட்) இனத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதன் அறிவியல் பெயர் = Cephalanthera erecta var. oblanceolate
இது உத்திரக்கான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 16 = பார்சி புத்தாண்டு (நவ்ரோஸ் விழா)
ஆகஸ்ட் 16 ஆம் தேதி, பார்சி இன மக்களின் 2௦21 ஆம் ஆண்டின் புத்தாண்டு விழாவான “பார்சி புதுவருடம் 2௦21” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை “நவ்ரோஸ் 2௦21” என்றும் அழைப்பர்
பார்சி புத்தாண்டு என்பது பிராந்திய விழாவாகும், இது ஜோராஸ்ட்ரியன் நாட்காட்டியின் முதல் மாதமான ஃபார்வர்டின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பெண் சத்யாகிரகி – சுபத்ரா குமாரி சவுகான்
இந்தியாவின் முதல் பெண் சத்யாகிரகியான “சுபத்ரா குமாரி சவுகானின்” 117 பிறந்த தினம், ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டது
இவரை கவுரவிக்கும் விதமாக கூகுல் நிறுவனம், தனது தேடுதள பக்கத்தில் டூடுல் பதிவிட்டது
ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்
ஹைதி நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 13௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைந்தனர்
ரிக்டர் அளவில் சுமார் 7.2 பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன
TAPAS இணையதள போர்ட்டல்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில், “TAPAS” என்ற இணையதள போர்டல் துவக்கி வைக்கப்பட்டது
TAPAS = Training for Augmenting Productivity and Services
கொரோனோ பெருந்தொற்று காலத்தில் வணிகத்தின் உற்பத்திதிறன் மற்றும் சேவைகளை மேம்படுத்த இப்பயிற்சி அளிக்கப்படுகிறது
சிஎஸ்ஐஆர் அரோமா மிஷன்
“சிஎஸ்ஐஆர் அரோமா மிஷன் : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் வாழ்கையை மாற்றுதல்” (CSIR Aroma Mission: Transforming Lives Through S&T”) என்ற பெயரில் இணையதள வாயிலான கருத்தரங்கம் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மத்திய அரசால் நடத்தப்பட்டது
ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் “ஊதா புரட்சி” துவங்கப்பட்டு சிறப்பாகப் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது / Jammu & Kashmir Heralds ‘Purple Revolution’ in the Country, taking a lead in the Lavender Cultivation
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் லாவெண்டர் சாகுபடியில் முன்னிலை வகிப்பதன் மூலம் இந்தியாவின் ‘ஊதா புரட்சியை’ சிறப்பாக செயல்படுத்துகிறது
தேசிய ஹைட்ரஜன் இயக்கம்
சமீபத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று தேசிய ஹைட்ரஜன் மிஷன் துவக்கம் பற்றி பிரதமர் அறிவித்தார் / Union Miniser of Youth Affairs and Sports, Anurag Thakur, launched a nationwide programme of Fit India Freedom Run 0
இது மத்திய பட்ஜெட் 2021 இல் முன்மொழியப்பட்டது
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே அரசின் நோக்கம்.
இது ஒரு சுத்தமான எரியும் மூலக்கூறு ஆகும், இது இரும்பு மற்றும் எஃகு, இரசாயனங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் டீ-கார்பனைஸ் செய்யலாம்.
சைனிக் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா உரையில் பொழுது, பிரதமர் “சைனிக் பள்ளிகளில் இனி பெண்களும் படிக்கலாம்” என அறிவித்தார்
மிசோராம் மாநில சைனிக் பள்ளியில் முதல் முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்