ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன் குறிப்பு

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
  • இவரை “கவி வேந்தர்” என்பர்

ஆலந்தூர் மோகனரங்கன் சிறப்பு பெயர்கள்

  • கவி வேந்தர்
  • முத்தமிழ்க் கவிஞர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஆலந்தூர் மோகனரங்கன் கவிதை நூல்கள்

  • சித்திரப் பந்தல்
  • காலக்கிளி
  • இமயம் எங்கள் காலடியில் (தமிழக அரசு பரிசு)
  • கொஞ்சு தமிழ்க்கோலங்கள்

கவிதை நாடகம்

  • வைர மூக்குத்தி
  • புதுமனிதன்
  • யாருக்குப் பொங்கல்
  • பொய்யே நீ போய்விடு
  • நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்
  • பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
  • கயமையைக் களைவோம்
  • கவிதை எனக்கோர் ஏவுகணை
  • மனிதனே புனிதனாவாய்

காப்பிய நூல்

  • கனவுப் பூக்கள்

வாழ்க்கை வரலாறு நூல்கள்

  • வணக்கத்துக்குரிய வரதராசனார் (தமிழக அரசு பரிசு)
  • ‘தாத்தாவுக்குத் தாத்தா’ (மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு)

சிறுவர் கவிதை நூல்

  • பள்ளிப் பறவைகள்

சிறுவர் கதைகள்

  • கடமை செய்தால் களிப்பு வரும்
  • தன்னம்பிக்கை தலைவன் ஆக்கும்
  • கல்வி உன்னைக் காப்பாற்றும்
  • அன்பு செய்வதே அழகு
  • குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
  • கொய்யாத்தோப்பு
  • கள்ளனுக்கு பாதி குள்ளனுக்கு பாதி
  • முயன்றால் முன்னேறலாம்

நாவல்

  • நினைத்தாலே இனிப்பவளே
  • இதயமே இல்லாதவர்கள்

உரைநடை நாடகம்

  • சவால் சம்பந்தம்

கட்டுரைகள்

  • தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு

ஆலந்தூர் மோகனரங்கன் சிறப்புகள்

ஆலந்தூர் மோகனரங்கன்

  • காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
  • ‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில் இவர் மு. வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
  • ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
  • இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.
  • நூலகத்தால் உயர்ந்தேன் என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இவர் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
  • பள்ளியில் படிக்கும் பொழுதே “புதிய பாதை” என்ற கையெழுத்து ஏட்டை நடத்தியவர்.
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
  • இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
  • நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர்.
  • அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர். மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.

 

 

Leave a Reply