10th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்

இராஜாராம் மோகன்ராய் (பிரம்ம சமாஜம் – 1828)

 • இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் இராஜாராம் மோகன்ராய் இவர் எழுதிய புத்தகங்களில் ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி ஆகியவை குறிப்பிடதக்கவை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805ஆம் ஆண்டு முதல் 1814ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
 • இவருக்கு முகலாய மன்னர் இராஜா என்ற பட்டத்தை வழங்கினார்.
 • இவர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டார்.
 • 1815ஆம் ஆண்டு ஆத்மீய சபாவை தோற்றுவித்தார். இது 1828-ல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
 • இவரது சீரிய முயற்சியினால் 1829ஆம் ஆண்டு ஆங்கில ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு சதி தடை திட்டத்தை கொண்டு வந்தார்.
 • இவர் 1822ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்னும் இடத்தில் மறைந்தார்.
 • இவரது மறைவுக்கு பின் கேசவ் சந்திரசென், தேவேந்திரநாத் தாகூர் போன்றோர் இச்சபையை ஏற்று நடத்தினர்.
 • கேசவ் சந்திரசென்னின் முயற்சியால் 1872ஆம் ஆண்டு, பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
 • இச்சட்டம் கலப்பு திருமணத்தையும், விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்தது.
 • பிரார்த்தனா சமாஜம், டாக்டர். ஆத்மராம் பாண்டுரங் என்பவரால், 1867ஆம் ஆண்டு மும்பையில் தோற்றுவிக்கப்பட்டது.

 சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம் – 1875)

 • சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆரிய சமாஜம் 1875-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
 • இவரது இயற்பெயர் மூல் சங்கர்.
 • வேதங்களை நோக்கி செல் என்பதே இவரின் குறிக்கோளாகும்.
 • மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக சுத்தி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
 • தயானந்தரின் முக்கிய சீடர்களான லாலாலஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ் மற்றும் பண்டித குருதத் ஆகியோர் ஆரிய சமாஜ கொள்கைகளைப் பரப்பினர்.
 • பாலகங்காதர திலகர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
 • சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்தர்.
 • இவர் இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்பட்டார்.

பிரம்மஞான சபை

 • இரஷ்ய பெண்மணி மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் ஹென்றி எஸ் ஆல்காட் என்பவரால் 1875ஆம் ஆண்டு நிபூயார்க் நகரில் கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக பிரம்மஞான சபை நிறுவப்பட்டது.
 • தியோசோபி என்றால் கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும்.
 • திருமதி. அன்னிபெசன்ட் அவர்கள் 1893ஆம் ஆண்டு இச்சபையின் தலைவராக பொறுப்பேற்று, இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், இந்திய கல்விக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
 • இவரால் பனாரசில் (காசி) தோற்றுவிக்கப்பட்ட மத்திய இந்துக் கல்லூரி இறுதியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது.
 • மெய்ஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அவர் நியூ இந்தியா என்ற செய்தித் தாளை நடத்தி வந்தார்.
 • இந்தியர்கள் சுயாட்சி பெறுவதற்காக தன்னாட்சி இயக்கத்தை (ஹோம்ரூல் இயக்கம்) நடத்தி வந்தார்.
 • இச்சபையின் தலைமையிடத்தை சென்னையிலுள்ள அடையாறில் நிறுவினார்.

இராமகிருஷ்ண இயக்கம் (1897)     

 • இராமகிருஷ்ண இயக்கம், சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897-ம் ஆண்டு மே 1-ம் நாள் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள பேலூரில் துவங்கப்பட்டது.
 • இராமகிருஷ்ண பரமஹம்சர் வங்காளத்தில் 1836-ம் ஆண்டு பிறந்தார். இவரது துணைவியார் சாராதாமணிதேவி.
 • மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாக கருதப்படும் என்று உறுதியாக நம்பினார்.
 • 1886-ம் ஆண்டு இறந்தார்.
 • நரேந்திரநாத் தத்தா என்கிற சுவாமி விவேகானந்தர் 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை சிறப்பிற்குரியது.
 • விவேகானந்தர் துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் எனக்கூறி அதனடிப்படையில் ஜீவாவே (உயிர்) சிவா என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் பணியே கடவுள் பணி எனக் கூறி தொண்டாற்றினார்.
 • மேற்கு வங்காளத்திலுள்ள சுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது இராமகிருஷ்ண இயக்கம் ஆகும்.

சமரசசுத்த சன்மார்க்க சங்கம்

 • இராமலிங்க அடிகளார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சின்ன மருஷர் என்ற கிராமத்தில் 1823-ம் ஆண்டு பிறந்தார்.
 • இறைவன் ஜோதி வடிவானவன் என்றும் அருட்பெரும் ஜோதியாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
 • ஏழைகளின் பசியைப் போக்குவதற்காக வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார்.
 • ஜீவகாருண்யம் (எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்) என்பது இவரது மற்றொரு கொள்கையாகும்.
 • வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்தார்.
 • 36 மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கு வழி என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும்.
 • 1870ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார்.
 • இவரது பக்தி பாடல்கள் தொகுப்பு திருவருட்பா என அழைக்கப்படுகிறது.

அலிகார் இயக்கம்

 • அலிகார் இயக்கம் என்கிற சீர்திருத்த இயக்கம் சர் சையது அகமதுகான் என்ற ஆங்கில அரசாங்கத்தில் பணியாற்றிய நீதித்துறை அலுவலரால் தோற்றுவிக்கப்பட்டது.
 • 1864ஆம் ஆண்டு காசிப்பூர் என்னும் இடத்தில் சையது அகமதுகான் ஓர் பள்ளியை நிறுவினார். பின்னர் இது அறிவியல் கழகம் என்றழைக்கப்பட்டது.
 • 1875ல் அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஓரியண்டல் கல்லூரி பிற்காலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைந்தது.
 • முஸ்லீம்களிடையே தன்னுடைய சீர்திருத்த கொள்கைகளை பரப்புவதற்காக தாசில்-உத்-அஃலக் என்ற தினசரி பத்திரிகையை நடத்தினார்.
 • இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்ற பறவையின் இரு கண்கள் எனக் கூறினார்.

ஜோதி பாபூலே

 • இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஜோதி பாபூலே ஒருவராவார்.
 • ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து இவர்தான் என உறுதியாகக் கூறலாம்.
 • 1873ஆம் ஆண்டு ‚சத்திய சோதக் சமாஜ்‛ (உண்மை தேடுவோர் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

நாராயணகுரு

 • கேரளாவிலிருந்து தோன்றிய மிகச்சிறந்த சமூகசீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு ஆவார்.
 • 1903ம் ஆண்டு ஸ்ரீ தர்மபரிபாலன யோகம் என்ற இயக்கத்தை தொடங்கினார்.

ஸ்ரீ பாத சாது மகாராஜா

 • ஸ்ரீ சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்தில் பிறந்தார்.
 • இவர் சைவ மதத்திலிருந்து வைணவராக மாறினார்.
 • சைத்தனியரை கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலை கட்டினார்.

டாக்டர் B.R. அம்பேத்கார்

 • டாக்டர் R. அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் கடவுளாக கருதப்படுகின்றார்.
 • இவர் இந்திய அரசியல் சட்டம் படைப்புக் குழுவின் தலைவராக விளங்கினார்.
 • இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றினார்.
 • 1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் மகவு என்னும் ஊரில் பிறந்தார்.
 • 1924ஆம் ஆண்டு ஜுலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் சங்கம் (பாசிகிருத் கித்காரணி சபா) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
 • தீண்டத்தகாத மக்களுக்கு மனுஸ்மிருத்தி என்ற பொதுக்குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காக, 1927ஆம் ஆண்டு மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தினார்.

தந்தைப் பெரியார்

 • தென்னிந்தியாவில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதிகளில் பெரியார் ஈ.வெ. ராமசாமியும் ஒருவர்.

 

Leave a Comment

Your email address will not be published.