TNPSC INDIAN POLITY – National Anthem / தேசிய கீதம்
TNPSC INDIAN POLITY – NATIONAL ANTHEM பகுதியில் இந்திய தேசிய கீதம் தொடர்புள்ள விவரங்கள் அனைத்தும் தேர்வு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
- நமது தேசிய கீதமான “ஜனகன மன” பாடலை எழுதியவர் = ரபிந்திரநாத் தாகூர்
- இப்பாடல் எழுதப்பட்ட மொழி = வங்காள மொழி
- இப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 24 ஜனவரி 195௦
- இப்பாடலுக்கு இசை கொடுத்தவர் = தாகூர் அவர்களே
- “அல்ஹையா பிலாவல்” என்ற ராகத்தில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது
- இப்பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ள அழுத்தம் தந்தவர் = சுபாஸ் சந்திர போஸ் (ஜெர்மனியில் இருந்துக் கொண்டே)
- ஹிந்தி மொழியில் மொழி மாற்றப்பட்ட பாடலே தேசிய கீதமாக உள்ளது
- தேசிய கீதத்தை இந்தி மொழிக்கு மொழிபெயர்த்தவர் = கேப்டன் அபித் அலி ஹசன் சப்ராணி
- தேசிய கீதத்தை உருது மொழியில் மொழிபெயர்த்தவர் = கேப்டன் அபித் அலி ஹசன் சப்ராணி
- இப்பாடல் முதன்முதலில் பாடப்பட்டது = 1911-ல் கொல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் (மாநாட்டின் 2-வது தினம் பாடப்பட்டது)
- மாநாட்டில் அப்பாடலை பாடியவர் = தாகூர் அவர்களே பாடினார்
- டிசமபர் 27, 2௦11 அன்று தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்டு 1௦௦ ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர்
- தாகூர் எழுதிய இப்பாடலில் மொத்தம் 5 பத்திகளை உள்ளன. முதல் பிரிவில் உள்ள முழு பாடலே தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
- தேசிய கீதத்தை பாட தோராயமாக “52 நொடிகள்” எடுத்துக்கொள்ளப்படுகிறது (54 நொடிகளை அல்ல)
- தேசிய கீதத்தின் குறுகிய வடிவ பாடல் “தோராயமாக 2௦ வினாடிகள்” ஆகும். இதில் முதல் மற்றும் இறுதி வரிகள் மட்டுமே பாடப்படும்.
- 1912-ம் ஆண்டு தாகூர் நடத்திய “தத்துவ போதினி” இதழில் முதல் முறையாக இப்பாடல் “பாரதிய பாக்கிய விதாத்தா” என்ற தலைப்பில் பதிப்பித்து வெளியிடப்பட்டது
- 1919-ம் ஆண்டு “இந்தியாவின் காலை பாடல்” (Morning Song of India) என்ற பெயரில், தாகூர் அவர்களே இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்
- தேசிய கொடியை போலவே தேசிய கீதமும் “புனித சின்னமாக” கருதப்படுகிறது
- தேசிய கீதம் ஒலிக்கும் பொழுது, அமைதியாக நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
- ஆங்கில மொழி தேசிய கீதத்திற்கு இசைவடிவம் கொடுத்தவர் = ஜேம்ஸ் எச்.கொசின்ஸ்
- வங்கதேசத்தின் தேசிய கீதத்தை எழுதியவரும் “தாகூர்” அவர்களே ஆவார்
- 2௦௦5-ம் ஆண்டு தேசிய கீதத்தில் இருந்து “சிந்து” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு “காஸ்மீர்” என்ற வார்த்தையை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது
- குடியரசுத் தலைவரின் வருகையின் பொழுது தேசிய கீதம் பாடப்படும். ஆனால் பிரதமரின் வருகையின் பொழுது இப்பாடல் பாடப்படாது.