TNPSC INDIAN POLITY – NATIONAL EMBLEM – தேசிய சின்னம்
TNPSC INDIAN POLITY – National Emblem
இந்திய அரசின் தேசியக் சின்னமானது, அசோகரின் சாரநாத் சிங்கத் தூணில் இருக்கும் சிங்கங்களின் உருவமாகும்
தேசிய சின்னம் = உலக அமைதி மற்றும் நல்லெண்ணம் கொண்ட பண்டைய இந்தியாவின் உறுதிப்பட்டை, தற்போதைய சமகால இந்தியாவின் சின்னமாக குறிக்கப்படுகிறது
தேசியச் சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 1950 ஜனவரி 26
நமது தேசியச் சின்னத்தில் நான்கு சிங்கங்கள் முதுகோடு முதுகு சேர்ந்த நிலையில், வட்டமான பீடத்தில் மேலே அமைக்கப்பட்டுள்ளது. பார்பதற்கு மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியும். பின்புறம் ஒரு சிங்கம் என மொத்தம் நான்கு சிங்கங்கள் இருக்கும்.
சிங்கங்களின் கீழே உள்ள அடித்தட்டுப் பீடத்தில் அடியில் இடப்புறம் குதிரையும், மத்தியில் சக்கரமும், வலதுபுறம் காளையும் உள்ளது