TNPSC INDIAN POLITY – NATIONAL FLAG – தேசியக் கொடி

TNPSC INDIAN POLITY – NATIOANL FLAG –  தேசியக் கொடி

TNPSC INDIAN POLITY – NATIONAL FLAG – தேசியக் கொடி பற்றிய தேர்விற்கு உதவும் விவரங்கள் அனைத்தும் தொகுதி, மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் எளிமையாக பதிவேற்றப்பட்டுள்ளது.

 

TNPSC INDIAN POLITY

  • இந்திய தேசியக் கோடியை வடிவமைத்தவர் = பிங்கிலி வெங்கையா. இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர். 1916-ல் இக்கொடியை உருவாக்கினார்
  • இந்திய தேசிய கொடியானது கிடைமட்ட செவ்வக வடிவில், மூவண்ணத்தில் உருவாக்கப்பட்டது
    • இளஞ்சிவப்பு
    • வெண்மை
    • இந்திய பசுமை
    • மற்றும் இதனுடன் கருநீல நிறத்தில் அசோக சக்கரம்
  • கருநீல நிறத்தில் 24 ஆரங்களை கொண்டுள்ளது இந்த அசோகச் சக்கரம்

TNPSC INDIAN POLITY

  • 1947 ஜூலை 22-ல் நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபையில் கூட்டத்தில் இதனை இந்திய தேசியக் கொடியாக ஏற்க்கபட்டு, 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி, தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது
  • தேசிய கொடியானது, “சுயராஜ்ஜியக்” கொடியில் இருந்து உருவாக்கப்பட்டது
  • விதியின் படி, இந்திய தேசியக் கொடியானது “காதி” துணியால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும்
  • இந்திய தேசிய கொடியை உருவாக்கும் உரிமை, மத்திய அரசின் காதி மேம்பாடு மற்றும் கிராம தொழிலாக கமிசனிடம் (KVIC – Khadi Development and Village Industries Commission) உள்ளது.
  • இந்திய தேசிய கொடியை உருவாக்கும் நிறுவனம் = கர்நாடக காதி கிராமயோத்யாக சம்யுக்தா சங்கத்திடம் (Karnataka Khadi Gramodyoga Samyukta Sangha) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது

அளவு:

  • தேசியக் கொடியானது “அகலம் (3) : உயரம் (2)”, அதாவது 3:2 என்ற அளவில் அமைக்கப்படவேண்டும்
  • 3 நிறங்களும் சரிசமான உயரத்தில் இருக்க வேண்டும்
  • வெண்மை நிறத்தின் நடுவில் கருநீல நிறத்தில் 24 “சம இடைவெளி” உடைய ஆரங்கள் இருக்க வேண்டும்

நிறம்:

  • மூவண்ணக் கொடியை 1931ம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதைய கொடியில் நடுவே “நூல் நூற்றும் இராட்டை” இருந்தது

TNPSC INDIAN POLITY

  • இளஞ்சிவப்பு = தியாகத்தையும், தைரியத்தையும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் குறிக்கிறது
  • வெண்மை நிறம் = தூய்மை, உண்மையை குறிக்கிறது
  • கருநீல நிறம் = சக்கரத்தின் நிறம். இது அறவழியில் முன்னேறிச் சென்று அமைதியையும், செழுமையையும் பெற்றுத்தர தூண்டுகிறது
  • சக்கரம் = இயக்கத்தையும், தலைமை பண்பையும் குறிக்கிறது
  • கரும்பச்சை = இந்தியாவின் செழிப்பையும், வளமான நிலத்தையும், பசுமையினையும், நம்பிக்கையையும் குறிக்கிறது

இந்திய தேசியக் கொடி விதி:

TNPSC INDIAN POLITY

  • தேசிய கொடி விதியின் கீழ், குடியரசுத் தினம் மற்றும் சுதந்திர தினம் தவிர்த்து, மற்ற நாட்களில் அரசை தவிர தனியார் யவரும் பயன்படுத்த தடை உள்ளது
  • 2௦௦2-ல் நவீன் ஜிந்தால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தனியார் அமைப்புகள் கொடியை பயன்படுத்துவதற்காக தனி விதியை உருவாக்க உத்தரவிட்டது
  • தேசியக் கொடி விதி 2௦௦2”, 2௦௦2-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி
    • தேசியக்கொடியானது மூவண்ணத்தில், செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்
    • கொடியில் இளஞ்சிவப்பு நிறம் மேலே இருக்க வேண்டும்
    • அசோக சக்கரம் கொடிடில் இரண்டு பக்கங்களிலும் தெளிவாக தெரியும் படி அமைக்க வேண்டும்
    • நீளமும், அகலமும் 3:2 என்ற விகத்தில் இருக்க வேண்டும்
    • வேறு எந்தக் கொடையையும் நமது தேசியக் கொடியின் வலது புறமோ, அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக்கூடாது
    • கம்பத்தின் உச்சி உயரம் வரை கொடி உயர்ந்திருக்க வேண்டும்
    • சூரியன் மறைவதற்குள் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும்
    • மழையில் நனைய விடக்கூடாது
    • நமது நாட்டின் தலைவர் அல்லது நட்பு நாட்டின் தேசிய தலிவர்கள் இறந்து விட்டாலோ, நமது தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.
    • மற்றக் கொடிகள் அனைத்தும், தேசியக் கொடியின் இடது பக்கம், சற்று குறைந்த உயரத்தில் இருக்க வேண்டும்

அரைக் கம்பத்தில் பறத்தல்:

  • தேசத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் போன்றோர் இறக்கும் பொழுது தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்
குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்

பிரதமர்

நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்
லோக்சபாவின் சபாநாயகர்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லியில் மட்டும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்
மத்திய காபினெட் அமைச்சர்கள் டெல்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்தில் மட்டும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்
மத்திய அமைச்சர்

மத்திய துணை அமைச்சர்கள்

டெல்லியில் மட்டும்
ஆளுநர்

துணை நிலை ஆளுநர்

மாநில முதல்வர்

யூனியன் பிரதேச முதல்வர்

இறந்தவர் சார்ந்த மாநிலம் அலல்து யூனியன் பிரதேசம் முழுவதும்
மாநில அமைச்சர்கள் மாநில தலைநகரில் மட்டும்

IMPORTANT POINTS ON NATIONAL FLAG:

  • அசோகா சக்கரத்தின் அளவு (size) பற்றி இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை
  • 1921-ம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனிக் கொடி வேண்டும் எனக் கோரிக்கை வைத்தவர் = காந்திஜி
  • முதன் முதலாக இந்தியாவிற்காக கொடியை உருவாக்கியவர், விவேகானந்தரின் பேரன் சீடரான, ஐயர்லாந்தின் “சகோதரி நிவேதித்தா” ஆவார்கள். அவர் உருவாக்கிய கொடியின் நடுவில் வங்க மொழியில் “வந்தே மாதரம்” என்ற வார்த்தை பதியப்பட்டது
  • இந்திய தேசிய கொடி, 1953-ம் வருடம் மே 29-ம் நாள் உலகிலேயே உயரமான சிகரமான “இமயமலையில்” கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் = டென்சிங் நார்கே
  • முதன்முதலில் இந்தியாவிற்கு வெளியில், அயல்நாட்டில் இந்தியக் கொடியை ஏற்றியவர் = மேடம் பிகாஜி ரஸ்டம் காமா ஆவார். 19௦7-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஜெர்மனியின் ஸ்டக்ரட் நகரில் ஏற்றினார்

TNPSC INDIAN POLITY

  • 1984-ம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா அவர்கள், விண்வெளிக்கு சென்ற பொழுது, அங்கு தேசியக் கொடியை தந்து விண்வெளி ஆடையுடன் இணைத்து எடுத்து சென்றார்
  • முதன் முதலில் மூவண்ணக் கொடியை (The Flag was Hoisted First Time) ஏற்றியவர் = சச்சிந்திர பிரசாத் போஸ், கல்கத்தாவில் ஏற்றினர் (19௦6 ஆகஸ்ட் 7-ம் தேதி, கொல்கத்தா நகரில்)
  • 2௦௦2கு முன்னர் சாதரன குடிமகன்கள் தேசியக் கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் ஆகிய நாட்களை தவிர பிற நாட்களில் ஏற்ற முடியாது. அனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அனைவரும் தேசிய கொடியை எப்பொழுது வேண்டுமாலும் ஏற்றலாம் என தீர்ப்பு கூறியது
  • சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் முதல் தேசிய கோடி, தமிழ்நாட்டின் குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) என்ற ஊரில் நெய்யப்பட்டது. இக்கொடியை நேரு அவர்கள் 15.08.1947 அன்று செங்கோட்டையில் ஏற்றினார். அக்கொடி, தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியத்தில் உள்ளது.

 

Leave a Reply