TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 12, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 12, 2021

       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 12, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

சமிபத்தில் வெளியிடப்பட்ட “உலக ஆற்றலின் புள்ளிவிவர ஆய்வு 2021” (Statistical Review of World Energy 2021) படி, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் அமெரிக்க நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இயற்கை வாயு வழங்கும் நாடுகளிலும் நான்காவது இடத்தை அமெரிக்க பிடித்துள்ளது.

ஈராக் 47 மல்லியன் டன்
சவூதி அரேபியா 38 மல்லியன் டன்
ஐக்கிய அரேபிய அமீரகம் 22 மல்லியன் டன்
அமெரிக்க 10.7 மல்லியன் டன்

ஹைதி நாட்டின் புதிய இடைக்கால அதிபர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       சமிபத்தில் கரீபியன் தீவுகளில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர், “ஜோவனால் மாயிஸ்” மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது ஹைதி நாட்டு பாராளுமன்றத்தால், அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபராக (Interim President of Haiti) “ஜோசாப் லேம்பர்ட்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரிதான சூப்பர்லூமினஸ் மியொளிர் விண்மீன் வெடிப்பு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், மிகவும் அரிதான சூப்பர் லூமினஸ் மீயொளிர் விண்மீன் வெடிப்பு (Rare Super Luminous Super Nova – SLSNe) நிகழ்ச்சியினை பதிவு செய்துள்ளனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கிகள்,

  • Devasthal Optical Telescope (DOT-3.6m), Nainital, Utttharkhand
  • Sampurnanand Telescope-1.04m, Nainital
  • Himalayan Chandra Telescope-2.0m, Ladakh

இவை இந்திய விஞ்ஞானிகளால், உத்தரக்காண்டு மாநிலன் நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம் (ARIES) மூலம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ARIES = Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) Nainital.

முதல் முறையாக உப்பு சுரக்கும் சதுப்புநில உயிரினங்களின் மரபணு டீகோட் செய்யப்பட்டது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       முதல் முறையாக உப்பு சுரக்கும் சதுப்புநில உயிரினங்களின் மரபணுவை டீகோட் (Scientists decode Genome sequence of Mangrove Species for the first time) செய்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள “ஆயுள் அறிவியல் கழகம்” (Institute of Life Sciences) மற்றும் தமிழகத்தின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக (SRM University) ஆராச்சியாளர்கள் இணைந்து “Avicennia marina” என்ற சதுப்புநில தாவர இனத்தின் மரபணுவை வெற்றிகரமாக டீகோட் செய்துள்ளனர்.

“குறைதீர் அதிகாரியை” நியமித்த ட்விட்டர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனம், இந்தியாவிற்கான குறைதீர் அதிகாரியாக அமெரிக்க கலிபோர்னியாவை சேர்ந்த ஜெரமி கேச்சல் என்பவரை நியமனம் செய்திருந்தது. அனால் புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் படி, இந்தியாவில் 5௦ லட்சம் பயனர்களை கொண்டுள்ள நிறுவனம், இந்தியாவை சேர்ந்த, இந்தியாவில் வசிக்கும் அதிகாரிகளையே நியமனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவை சேர்ந்த, இந்தியாவில் வசிக்கும் “வினய் பிரகாஷ்” (Twitter has named Vinay Prakash as the Resident Grievance Officer (RGO) for India) என்பவரை ட்விட்டர் நிறுவனம், தனது இந்தியப் பிரிவின் குறைதீர் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.

விம்பிள்டன் போட்டி முடிவுகள்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வெந்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவுகள் வெளிவந்தன. இதன்படி,

வ.எண் பிரிவு வெற்றியாளர் 2-வது இடம்
1 ஆண்கள் ஒற்றையர் நோவாக் ஜோகோவிக் (செர்பியா) மட்டியோ பெரட்டினி (இத்தாலி)
2 பெண்கள் ஒற்றையர் ஆஷ்லே பார்டே (ஆஸ்திரேலியா) கரோலினா ப்ளிஸ்கோவா (செக் குடியரசு)
3 ஆண்கள் இரட்டையர் நிகோலா மெக்டிக் (குரோசியா), மேட் பாவிக் (குரோசியா) மார்சல் க்ரேநோலர்ஸ் (ஸ்பெயின்), ஹோராசியோ ஜெபாலஸ் (அர்ஜென்டினா)
4 பெண்கள் இரட்டையர் சு செய் வை (தைவான்), எலைஸ் மேர்டன்ஸ் (பெல்ஜியம்) வெரோனிகா குடர்மேடாவ் (ரஷ்யா), எலினா வெஸ்நினா (ரஸ்யா)
5 கலப்பு இரட்டையர் நீள் குப்ஸ்கி (இங்கிலாந்து), தேசிரே க்ராச்விக் (அமேரிக்கா) ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து), ஹேரியட் டார்ட் (இங்கிலாந்து)

ஆண்கள் ஒற்றையர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீரரான, செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், வெற்றி பெற்று தந்து 2௦-வது சர்வதேச கோப்பையை வென்றார். விம்பிள்டனில் 6-வது முறையாக கோப்பையை வென்றார். 2௦ முறை சர்வதேச கோப்பைகளை வென்றதன் மூலம், ரோஜர் பெடரர் மற்றும் ரேல் நடால் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்தார்.

பெண்கள் ஒற்றையர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டே, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி கோப்பையை வென்றார். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விம்பிள்டன் கோப்பையை வெல்லும் முதல் ஆஸ்திரேலியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

உலக மலாலா தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இளம் ஆர்வலர் மலாலா யூசுப்சாயை கவுரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 12 ஐ உலக மலாலா தினமாக (World Malala Day) அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கவுரவிக்கும் விதமாக மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளான மலாலா தினம் நினைவுகூரப்படுகிறது.

  1. 2012 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கத்தால் முதன்முதலில் தேசிய இளைஞர் அமைதி பரிசு (National Youth peace Prize) அவருக்கு வழங்கப்பட்டது.
  2. 2014 ஆம் ஆண்டில், 17 வயதில், அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பே தொடங்கிய குழந்தைகளின் உரிமைகளுக்கான தனது முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Prize for Peace) அவருக்கு வழங்கப்பட்டது (குறிப்பு = மிக இளவயதில் இவ்விருதினை பெற்ற முதல் நபர் மேலும் 2014 ஆம் ஆண்டு இவருடன் சேர்ந்து இந்தியாவின் கைலாஸ் சத்யார்த்தி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது)
  3. ஐ.நா. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது தசாப்தத்தின் மறுஆய்வு அறிக்கையில் “உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்” (the Most Famous teenager in the World) என்று அறிவித்துள்ளது.
  4. மலாலாவுக்கு கெளரவ கனடா நாட்டு குடியுரிமை (Canada Citizenship) வழங்கப்பட்டுள்ளது மற்றும் கனடாவில் உள்ள பொது மன்றத்தில் உரையாற்றிய இளைய நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
  5. இவரைப் பற்றிய ஆவணப்படம், “He Named Me Malala”, 2015 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கு பட்டியலிடப்பட்டது.
  6. இவரின் புத்தகங்கள்,
    1. We are Displaceed
    2. I Am Malala – autobiography
    3. Malala’s magic Pencil

இந்தியாவின் முதல் பூவாத் தாவரத் தோட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       உத்திரக்காண்டு மாநிலத்தின் டேராடூன் பகுதியில் உள்ள தியோபான் என்னுமிடத்தில், இந்தியாவின் முதல் பூவாத் தாவரத் தோட்டம் (India’s First Cryptogamic Garden at Dehradun, Uttarakhand)  அமைக்கப்பட்டுள்ளது. 3 ஏக்கர் நிலப்பரப்பில், 9௦௦௦ அடிஉயர மலைப்பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த தோட்டத்தை, அம்ம்நிலத்தின் பிரபல் சமூக ஆர்வலர் அனூப் நவுதியால் என்பவரால் துவக்கி வைக்கப்பட்டது.

       க்ரிப்டோகெமி என்பதற்கு “மறைக்கப்பட்ட இனப்பெருக்கம்” (Hidden Reproduction) என்று பொருள். அதாவது விதையும் இல்லாமலா, மலரும் இல்லாமல் உருவாகும் தாவரம்.

இந்தியாவின் முதல் தனியார் திரவ இயற்கை ஏரிவாயு வசதி ஆலை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்தியாவின் முதல் தனியார் திரவ இயற்கை எரிவாயு வசதி ஆலை (India’s First Private LNG (Liquefied Natural Gas) facility Plant at Nagpur, Maharashtra), மகாராஸ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர், “நிதின் கட்காரி” அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஆலை ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் பைத்யநாத் ஆயுர்வேத குழுமத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்க கோப்பையை வென்ற அர்ஜென்டினா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடைபெற்ற கோபா அமெரிக்க கோப்பையின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 1-௦ என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி தந்து தாய்நாட்டிற்காக முதல் சர்வதேச கோப்பையை வென்றுள்ளார். 1993 ஆம் ஆண்டிற்கு அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி இக்கோப்பையை வென்றுள்ளது. அர்ஜென்டினா அணிக்கான வெற்றி கோளினை அடித்தவர், ஏஞ்சல் டி மரியா ஆவார். இது அந்த அணியின் 15-வது கோபா அமெரிக்க கோப்பையாகும்.

அபார வெற்றி பெற்ற எத்தோப்பிய பிரதமர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       எத்தோப்பியாவில் தற்போது ஆளும் “செழிப்பு கட்சியின்” பிரதமர் அபி அகமது, மீண்டும் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார். மொத்தம் 436 இடங்களில் 410 இடங்களை வென்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஜி-2௦ நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம்:

       இத்தாலி நாட்டின் தலைமையில் மூன்றாவது ஜி-2௦ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மதிய வங்கி ஆளுநர்கள் கூட்டம் (Third G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) Meeting), மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டார்.

விம்பிள்டன் இளையோர் ஆண்கள் பட்டம் வென்ற சமீர் பானெர்ஜி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

       இந்திய – அமெரிக்கரான சமீர் பானெர்ஜி, லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இளையோர் ஆண்கள் பிரிவில், அமெரிக்காவின் விக்டர் லிலோவ் என்பவரி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 17 வயது நிரம்பிய பானெர்ஜி தந்து முதல் விம்பிள்டன் கோப்பையை பதிவு செய்துள்ளார்.

தர்மஸ்தாலாவில் மேகவெடிப்பு:

       ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மஸ்தாலாவில், திடீர் மேகவெடிப்பு காரணமாக கடுமையான மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

 

 

Leave a Reply