தமிழ்க்கும்மி
பாடல்:
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்: இந்த மேதினி வால்வழி காட்டிருக்கும்! – பெருஞ்சித்திரனார் |
பாடல் குறிப்பு:
- இப்பாடல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
- இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது
- இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது
ஆசிரியர் குறிப்பு:
- இவரின் இயற் பெயர் துரை மாணிக்கம்
- ஊர் = சேலம் மாவட்டம் சமுத்திரம்
- பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்
சிறப்பு பெயர்:
- பாவலரேறு
- தற்கால நக்கீரர்
படைப்பு:
- கொய்யாக்கனி
- ஐயை
- பாவியக் கொத்து
- எண்சுவை எண்பது
- மகபுகுவஞ்சி
- அறுபருவத்திருக்கூத்து
- கனிச்சாறு
- நூறாசிரியம்
- கற்பனை ஊற்று
- உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்
இதழ்:
- தென்மொழி
- தமிழ்ச் சிட்டு
- தமிழ் நிலம்
குறிப்பு:
- உலக தமிழ் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்
- மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்
- தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்