அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
- இல்பாரி வம்சத்தை துவக்கியவர் = குத்புதின் ஐபக்
- இல்பாரி வம்சத்தில் “முதல் அடிமை வம்சத்தை” துவக்கியவர் = இல்துமிஷ்
- இல்பாரி வம்சத்தில் “இரண்டாவது அடிமை வம்சத்தை” துவக்கியவர் = பால்பன்.
- அடிமை வம்ச ஆட்சியாளர்கள்:
-
- குத்புதின் ஐபெக் = 1206 – 1210 (தலைநகரம் = லாகூர்)
- ஆரம்ஷா = 1210
- இல்துமிஷ் = 1210 – 1236 (தலைநகரம் = டெல்லி)
- ருக்நுதின் = 1236
- ரசியா சுல்தான் = 1236 – 1240
- முய்சுதின் பகரம்ஷா = 1240 – 1242
- அலாவுதீன் மசுத்ஷா = 1242 – 1246
- நசுருதின் முகமது = 1246 – 1265
- கியாசுதின் பால்பன் = 1265 – 1287
- முய்சுதின் கைகுபாத் = 1287 – 1290
- சம்சுதீன் கைமர்ஸ் = 1290
-

குத்புதின் ஐபக்
- அடிமை வம்சத்தை துவக்கியவர்
- இவரின் தலைநகரம் = லாகூர்.
- இந்தியாவில் துருக்கிய ஆட்சியை நிலை நிறுத்திய முதல் உண்மை ஆட்சியாளர் = குத்புதின் ஐபக்.
- “பேரரசர்” என்ற பட்டதை இவர் சூட்டிக்கொள்ளவில்லை.
- தன்னை “மாலிக்” என்றும், “சிப்பா சலார்” என்றும் அழைத்துக்கொண்டார்.
- இவரின் கொடை குணத்திற்காக இவரை “லாக்பக்ஸ்” (லட்சம் லட்சமாக வழங்கியவர்) என்று அழைத்தனர்.
- குத்புதின் ஐபக் உருவாக்கிய நகரம் = மஹ்ராலி.
- இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மசூதி = குவாத்-உல்-இஸ்லாம் மசூதி (டெல்லி)
- இந்தியாவில் முதன் முதலில் மசூதியை கட்டியவர் = குத்புதின் ஐபக்.
- இந்தியாவில் இரண்டு மசூதிகளை கட்டினார். ஒன்று டெல்லியில் உள்ள “குவாத்-உல்-இஸ்லாம்”. மற்றொன்று அஜ்மீரில் உள்ள “அதாய் தின் கா ஜோன்ப்ரா”
- சூபி துறவியான “குவாஜா குத்புதின் பக்தியார் கில்ஜியின்” நினைவாக டெல்லியில் “குதுப்மினாரை” கட்டத் துவங்கினார் குத்புதின் ஐபக். (கட்டி முடித்தவர் = இல்துமிஷ்)
- “சௌகான்” எனப்படும் குதிரை மீது அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டின் பொழுது கீழே விழுந்து இறந்தார் ஐபக்.
- “தாஜ்-உல்-மசூர்” நூலின் ஆசிரியர் = ஹசன்-உல்-நிசாமி
- “தாரிக்-ஐ-முபாரக் ஷாகி” நூலின் ஆசிரியர் = பக்ருதின்.
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்

ஆரம்ஷா
- ஐபகீன் திடீர் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க குத்புதின் ஐபெக்கின் மகனான ஆரம்ஷாவை மன்னர் ஆக்கினர்.
- இவரின் ஆட்சி எட்டு மாதங்களே நீடித்தது.
- ஆரம்ஷாவை கொன்றவன் = இல்துமிஷ்.
- ஆரம்ஷாவின் ஆட்சியில் பொழுது இல்துமிஷ் “பதான்” என்னுமிடத்தில் ஆளுநராக பணிபுரிந்து வந்தான்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இல்துமிஷ்
- குத்புதின் ஐபெக்கின் அடிமை.
- உண்மையான அடிமை வம்ச ஆட்சியாளர்.
- டெல்லி சுல்தான்களில் உண்மையான ஆட்சியாளர்.
- டெல்லி சுல்தான்களின் ஆட்சியை துவக்கிய உண்மையான மன்னர் என கூறப்படுபவர் = இல்துமிஷ்.
- “டெல்லியை” தலைநகராக மாற்றிய முதல் ஆட்சியாளர் = இல்துமிஷ்.
- “பேரரசர்” (சுல்தான்) என்ற பட்டத்தை காலிபாவிடம் இருந்து பெற்றார்.
- சுல்தான் பட்டதை பெற்ற முதல் முஸ்லிம் அரசர் = இல்துமிஷ்.
- நாணயங்களில் பெயர் எழுதும் முறையை அறிமுகம் செய்த முதல் முஸ்லிம் மன்னன் = இல்துமிஷ்.
- இல்துமிஷ் உருவாக்கிய குழு = நாற்பதின்மர் குழு (துர்கன்-இ-சகல்காணி)
- யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது புகழ்பெற்ற மங்கோலிய படைத் தளபதியான “செங்கிஸ்கான்” இந்தியா மீது படை எடுத்தான் = இல்துமிஷ் ஆட்சி காலத்தின் பொழுது
- இந்தியாவில் “இக்தா முறையை” அறிமுகம் செய்தவர் = இல்துமிஷ்.
- “அடிமைகளின் அடிமை” என்று அழைக்கப்பட்டவர் = இல்துமிஷ்.
- குதுப்மினாரை கட்டி முடித்தவர் = இல்துமிஷ்.
- தனக்கு பிறகு தனது மகள் “ரசியா பேகம்” ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
- “தங்கா’ (175 கிராம்) என்னும் வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்தவர் = இல்துமிஷ்.
- “ஜிடால்” என்னும் செம்பு நாணயத்தை அறிமுகம் செய்தவர் = இல்துமிஷ்.
- சுல்தானகத்தின் இரண்டு அடிப்படை நாணயங்கள் (விகிதம் 1:48)
- தூய அரபு நாணயங்களை அறிமுகம் செய்து முதல் சுல்தான் = இல்துமிஷ்.
- “தபகத்-இ-நசிரி” என்னும் நூலின் ஆசிரியர் = மின்ஹாஜ்-அல்-சிராஜ்.
- “கல்லறை கட்டிடத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் = இல்துமிஷ்.
- 1235 இல் மகாகல் கோவிலை (உஜ்ஜைனி) அழித்தார்.
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
- மூன்றாம் தரைன் போர்:
-
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1216
- இல்துமிஷ் மற்றும் இல்திஸ் இடையே நடைபெற்றது
- போரில் இல்துமிஷ் வெற்றி பெற்றார்.
-
ருக்நுதின்
- இல்துமிஷ் மறைவிற்கு பிறகு பெண் ஒருத்தி ஆட்சி செய்ய உள்ளதை விரும்பாத உயர் குடியினர், “ருக்நுதினை” ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தனர்.
- ஆனால் ருக்நுதின், ரசியாவல் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரசியா பேகம்
- இந்தியாவின் முதல் பெண் முஸ்லிம் ஆட்சியாளர் = ரசியா சுல்தான்
- இந்தியாவின் கடைசி பெண் முஸ்லிம் ஆட்சியாளர் = ரசியா சுல்தான்
- ரசியா பதவி ஏற்ற ஆண்டு = கி.பி.1236.
- ரசியா சுல்தானின் கணவர் = அல்துனியா
- “பர்தா” முறையை வெறுத்தவர்.
- ஆண்களின் ஆடையை அணிந்து அவையை நடத்தினார்.
- ரசியா சுல்தான் விரும்பிய அடிமை = ஜலாலுதீன் யாகூத் கான்
- காலாட்படையின் உயரிய தளபதியாக ஜலாலுதீன் யாகூத் கானை நியமனம் செய்தார்.
- ரசியா சுல்தானை கொன்று ஆட்சியை கைப்பற்றியவர் = முய்சுதின் பகரம்ஷா
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
முய்சுதின் பகரம்ஷா
- ரசியா சுல்தானின் சகோதரர்.
- இல்துமிஷின் மூன்றாவது மகன்.
- இவரின் ஆட்சிக் காலத்தின் பொழுது மங்கோலியர்கள் “லாகூர்” நகரை கைப்பற்றினர்.
- ”நாயிப்-இ-மாம்லகாத்” என்னும் புதிய பதவியை உருவாக்கினார்.
அலாவுதீன் மசூத்ஷா
- இல்துமிஷின் பேரன்.
- ரசியா பேகம் சுல்தானின் சகோதரர்.
- இவரது ஆட்சியின் பொழுது மங்கோலிய படையெடுப்பு நடந்தது.
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
நசுருதின் முகமது
- இல்துமிஷின் மகன்.
- மிகவும் அமைதியான ஆட்சியாளர்.
- “தார்வேசி அரசன்” என அழைக்கப்பட்டார்.
- வரலாற்று ஆசிரியர் “மின்ஹாஜ்-இ-சிராஜ்” என்பவரால் “ஆதாம் சுல்தான்” என்று அழைக்கப்பட்டவர்.
- இவரின் ஆட்சிக் காலத்தின் பொழுது “நாற்பதின்மர் குழுவின்” தலைவராக இருந்தவர் = பால்பன்.
- “நாயிப்-இ-மாம்லகாத்” பதவிக்கு பால்பனை நியமித்தவர் = நசுருதின் முகமது
- பால்பனுக்கு “உலுக் கான்” என்னும் பட்டதை வழங்கியவர் = நசுருதின் முகமது.

கியாசுதின் பால்பன்
- நாற்பதின்மர் குழு (துர்கன்-இ-சகல்காணி) முறையை ஒழித்தவர் = பால்பன்
- எதிரிகளுக்கு எதிராக இவர் பின்பற்றிய கொள்கை = “இரும்பும், குருதியும்”
- “அரசாட்சி கோட்பாட்டை” அறிமுகம் செய்த முதல் டெல்லி சுல்தான் = பால்பன்.
- அரசனை “சில்இ-இலாஹி” (பூமியில் கடவுளின் நிழல்) என்று அறிவித்தார்.
- அரசவையில் “சிஜதா” (அரசனை காலில் விழுந்து வணங்கும் முறை) முறையையும், “பைபாஸ்” (காலில் முத்தமிடுதல்) முறையையும் அறிமுகம் செய்தவர் = பால்பன்.
- அடிமை வம்ச ஆட்சியாளர்களில் சிறந்த மன்னன் = பால்பன்
- “திவான்-இ-அர்ஸ்” என்ற இராணுவ துறையை உருவாக்கினார்.
- மங்கோலியர்களை எதிர்க்க உருவாக்கிய ராணுவ துறை = திவான்-இ-அர்ஸ்
- டெல்லிக்கு வெளியே பால்பன் ஏற்படுத்திய ஒரே ராணுவ மையம் = வங்காளம்.
- “பரிட்” என்னும் சிறந்த ஒற்றர் படையை உருவாக்கினார்.
- மசூதி சுவற்றில் தன்னை “காலிபாவின் உதவியாளர்” என்று பொறித்தவர் = பால்பன்.
- பாரசீக திருவிழாவான “நவ்ரோஸ்” விழாவை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = பால்பன்.
- இந்தியாவில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய முதல் முஸ்லிம் அரசர் = பால்பன்.
- இவரது ஆட்சி “சட்டத்தின் ஆட்சி” என அழைக்கப்பட்டது.
- குடிப்பதற்கு, சிரிப்பதற்கு தடை விதித்த சுல்தான் = பால்பன்.
- பொது மக்களிடம் பேச மறுத்த முஸ்லிம் மன்னன் = பால்பன்.
- மங்கோலிய படையெடுப்பை தடுக்க பல கோட்டைகளை கட்டினார்.
- பாரசீக கவிஞர் “அமீர் குஸ்ருவை” ஆதரித்தார்.
- “இந்துஸ்தானத்தின் பறவை” என்று அழைக்கப்பட்டவர் = அமீர் குஸ்ரூ
- “இந்தியாவின் கிளி” என்று அழைக்கப்பட்டவர் = அமீர் குஸ்ரூ.
- நிர்வாக சீர்திருத்தங்களில் அலாவுதீன் கில்ஜியின் வழிகாட்டி என அழைக்கப்படுபவர் = பால்பன்.
- மங்கோலிய படையெடுப்பில் பால்பனின் மகன் “அமீர்கான் முகமது” கொல்லப்பட்டார்.
- “தியாகி இளவரசன்” என அழைக்கப்பட்டவர் = அமீர்கான் முகமது.
- தனக்கு பின் தனது பேரன் “கைக்குஸ்ரூ” அரியணை ஏற வேண்டும் என உயில் எழுதினார்.
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்
முய்சுதின் கைகுபாத்
- கைக்குஸ்ரூவிற்கு பதிலாக உயர்குடியின மக்கள் முய்சுதின் கைகுபாத்தை அரியணையில் அமர்த்தினர்.
- சிற்றின்பங்களில் மூழ்கிக் கிடந்தார்.
- இவர் கொல்லப்பட்டு, யமுனை ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.
சம்சுதீன் கைமர்ஸ்
- அடிமை வம்சத்தின் கடைசி ஆட்சியாளர்.
- மக்கள் இவரை வெறுத்தனர்.
- இவரின் போர்ப் படை தளபதி “பிரோஸ்” இவரை கொன்றார்.
- அடிமை வம்ச வரலாறு முக்கிய அரசர்கள்