அரசியலமைப்பு சட்டம்
அரசியலமைப்பு சட்டம்
- டாகடர் அம்பேத்கர் தலைமையிலான வரைவு அறிக்கை குழு தனது முதல் வரைவு அறிக்கையை 1948 பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்தது
- இரண்டாவது வரைவு அறிக்கை 1948 அக்டோபர் மாதம் சமர்பிக்கப்பட்டது
- வரைவு அறிக்கை மீதான விவாதங்கள் எல்லாம் முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது
-
முதல் வாசிப்பு
- அம்பேத்கர் இறுதி வரைவு அறிக்கையை அரசியல் நிர்ணயசபை முன் 1948 நவமபர் 4-ம் தேதி சமர்பித்தார்
- அன்று வரைவு அறிக்கை மீதான் முதல் வாசிப்பு துவங்கியது
- இது 5 நாள் நடந்தது. நவமபர் 9-ம் தேதி வரை நடைபெற்றது
-
இரண்டாவது வாசிப்பு
- இறுதி வரைவு அறிக்கை மீதான இரண்டாவது வாசிப்பு, நவமபர் 15-ம் தேதி துவங்கியது.
- ஒவ்வொரு வரியாக வாசித்து விவாதம் நடந்தது
- இது 1949 அக்டோபர் 17-தேதி வரை நடைபெற்றது
- இதில் சுமார் 7653 திருத்தங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறுதியாக 2473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டது
-
மூன்றாவது வாசிப்பு
- அரசியலமைப்பு சட்டம் – இறுதி வரைவு அறிக்கை மீதான மூன்றாவது வாசிப்பு 1949 நவம்பர் 14-ம் தேதி துவங்கியது
- வரைவு அறிக்கை மீதான விவாதங்கள் முடிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதா நிறைவேறியது என 1949 நவம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது
- அன்றைய தினமே, இந்திய சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 299 பேரில், சபைக்கு வந்திருந்த 284 பேரிடம் ஒப்புதல் பெற்று கையொப்பம் பெறப்பட்டது
- ஒப்புதல் பெறப்பட்ட 1949 நவம்பர் 26-ம் தேதிய “இந்திய அரசியல் அமைப்பு” ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாகும். இத்தேதிய அரசியலமைப்பு சட்டதின் முகப்புரையில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- 1949 நவம்பர் 26-ம் தேதி = “இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம்” எனப்படும்.
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான 1949 நவம்பர் 26 அன்று, சட்டத்தில் இருந்தவை
- முகப்புரை
- 395 சட்டங்கள்
- 8 அட்டவணைகள்
- முழு சட்டமும் உருவாக்கிய பின்னரே “முகப்புரை” உருவாக்கப்பட்டது
அம்பேத்கர்
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வரைவு குழுவின் தலைவர் ஆவார்
- இவர்,
- இந்திய அரசியலமைப்பின் தந்தை
- இந்திய அரசியலமைப்பின் சிற்பி
- நவீன மனு என்றழைக்கப்படுகிறார்.
- இவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார்.
- கிரான்வில்லே ஆஸ்டின் (GRANVILLE AUSTIN) = “அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது ஒரு உயர்ந்த, முதன்மையான ஓர் சமூக ஆவணமாகும்” (first and foremost a social document) என குறிபிட்டுள்ளார்
- வெளிநாடுகளில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார்.
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு